வியாழன், 27 அக்டோபர், 2016

நேஷனல் ஜியோகிராபி ஆப்கான் பெண் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத் உலகப் புகழ்பெற்ற, 'நேஷனல் ஜியாகிரபிக்' இதழின் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த, ஷர்பாத் குலா என்ற அந்த சிறுமி குறித்து அதன் பின் எந்தத் தகவலும் இல்லை. படம் வெளியான, 18 ஆண்டுகளுக்குப் பின், 2002ல், ஆப்கானிஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில், குலாவை தேடிக் கண்டுபிடித்தார் மெக்கரி. அப்போது குலாவுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்தது. அதில், குலா, போலியான பெயரில், பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், குலா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு, 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கப்படும்.

ஊழல் வழக்கை ஊத்தி மூடிவிட்டு விடுதலையானார் எடியூரப்பா .. மோடி கும்பலின் மற்றுமொரு சாதனை.. கர்நாடகாவில் பாஜக ஆட்சி?

:கர்நாடகாவில், சுரங்க ஊழல் வழக்கில் இருந்து, முன்னாள் முதல்வரும்,
அம்மாநில, பா.ஜ., தலைவருமான, எடியூரப்பா உள்ளிட்ட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2008ல், பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பெல்லாரி பகுதியில் சுரங்க ஒதுக்கீடு செய்ததில், 40 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார் ஆகியோர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது; 2015ல், எடியூரப்பா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சொல் புதிது .. இளைய சமுதாய பேரவை அமைப்பு விழா சிதம்பரத்தில் ... சுபவீ அறைகூவல்

தம்பரம் : 'சொல் புதிது' இளைய சமுதாய பேரவை என்ற புதிய சமூக அமைப்பு துவக்க விழா சிதம்பரத்தில் நடந்தது.
சிதம்பரம் ஈ பைவ் கல்வி அறக்கட்டளை சார்பில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றத்திற்காக 'சொல் புதிது இளைய சமுதாயப் பேரவை' என்ற புதிய அமைப்பு துவக்க விழா சிதம்பரத்தில் நடந்தது. விழாவிற்கு, அறக்கட்டளைத் தலைவர் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஈ பைவ் அறக்கட்டளை அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். சுப வீரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கிணற்றில் மழைநீர் சேகரிக்கும் முறை

கிணற்றில் மழைநீர் சேகரிக்கும் முறை.

தமிழகத்தில் பருவமழை தாமதமாகி மலையடிவார மாவட்டங்களில் விவசாயக் கிணறுகள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதனால், கிணறுகளில் மழைநீரைச் சேமிக்கும் புதிய முறையைப் பின்பற்ற வேளாண் துறை வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கிணற்றுப் பாசனமே விவசாயத்துக்கு அடிப் படையாகவும், குடிநீர் ஆதாரமாக வும் விளங்குகிறது. கடலோர மாவட்டங்களில் 25 அடி முதல் 40 அடி வரையிலான 75 ஆயிரம் கிணறுகளும், மற்ற மாவட்டங்களில் 40 அடி முதல் 90 அடி வரையிலான 2.7 லட்சம் கிணறுகளும் உள்ளன. பொதுவாக ஏரிகள், குளங்கள், ஊருணி, கால்வாய் மூலம் கிணறு களின் நீர் ஆதாரம் செறிவூட் டப்படுகிறது. தற்போது வறட்சி யால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு, ஆழ்துளைக் கிணறுகள் பெருக்கம் காரணமாக விவசாயக் கிணறுகளில் நீர் ஆதாரம் வறண்டு விட்டது.

கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு!” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வங்கி ஊழியர்
குறித்து இப்படிச் சொல்கிறார் ’தேவாங்கு’. செந்தில்ராஜ் என்பவர் வங்கி ஊழியர் ஒருவர் (அநேகமாக அவர் ஏதேனும் மருத்துவ பிரச்சினைக்கு ஆளானவராக இருக்கலாம்) மிக மெதுவாக வேலைப் பார்க்கும் வீடியோ ஒன்றை அனுப்பி அது குறித்து ஜெயமோகனிடம் கருத்து கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் எழுதியவை:

மீண்டும் 3 கண்டெய்னரில் கோடிக்கணக்கான பணம் இருந்ததால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டைக்கு கோடிக்கணக்கான ரூபாய்களுடன் 3 கன்டெய்னர் லாரிகள் நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.ங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.இந்த சம்பவத்தை அடுத்து வங்கிகளுக்கு எடுத்து செல்லும் பணம் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்? - கவர்னர் அதிரடி!

minnambalam.com “சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. துறைகள் இல்லாத முதல்வராக மட்டுமே அவர் தற்போது இருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி எப்போதும் பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கும். மத்திய கமெண்டோ படையின் இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பும் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் எந்த வேலையும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் கிழக்கும் மேற்குமாக நடந்தபடி இருக்கிறார்கள். தேசிய பாதுகாப்புப் படை கமெண்டோக்கள் மூலமாகத்தான் இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த கமெண்டோ பிரிவில் பணிபுரிபவர்களுக்கு அதிநவீன எம்.பி.5 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.

மிராகிள்.. ஜெயலலிதா நலமாகிவிட்டார்.. விரைவில் வீடு திரும்புவார்: சு.சுவாமி தகவல்

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனவும், பாஜக ராஜ்யசபா எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி இன்று மதியம் வெளியிட்ட ஒரு டிவிட்டில், இத்தகவலை கூறியுள்ளார். "ஜெயலலிதாவின் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம். ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பிவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியென்றால், அது ஒரு அதிசயம்" என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.  ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உடனேயே, அவரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பதுதான் நல்லது என கருத்து கூறியவர் சுப்பிரமணியன் சுவாமி. முதலில் அவரது கருத்தை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் லண்டனிலிருந்து டாக்டர் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோது, சுப்பிரமணியன் சுவாமிக்கு, ஜெயலலிதாவின் உடல் நல பிரச்சினையின் தீவிரம் குறித்து தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. tamil.oneindia.com

புதன், 26 அக்டோபர், 2016

ரம்பா : தினமும் குடிபோதையில் அடித்து உதைத்தார்.. எனது சொத்துக்களை தனது பெயருக்கு... கேட்ட கணவர்

அடித்து உதைத்தார். அவர்கள் தினமும் என்னை கொடுமைப்படுத்தினர். என் கணவர் தினமும் குடிபோதையில் வந்து என்னை சித்ரவதை செய்ய தொடங்கினார். என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்கவேண்டும் என்று கேட்டார். இதற்கு சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து உதைத்தார
 சென்னை: தனது கணவர் இந்திரகுமாரை மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் ரம்பா எனவே அவருடன் சேர்த்து வையுங்கள் என்று நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்துள்ளார். நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நிற்க அவரைப் போல இருப்பதாக கூறி விஜயலட்சுமியை திரைஉலகிற்கு கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் இயக்குநர்கள். டூப் போட வந்த விஜயலட்சுமி ரம்பாவாக பெயரை மாற்றிக்கொண்டு, தமிழில் நடிகர் பிரபு நடித்த உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சுந்தர் .சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியதால் ரம்பாவிற்கு தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடம் கிடைத்தது.

மாமுலுக்காகவே பல சட்டங்கள் ... ரயிலில் பெட்டிக்கு 72 பேர்தான் அனுமதி ரயில்வேயிடம் மாமூல் வாங்கமுடியுமா?

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ
கோவமா? உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய வரும்புகிறேன். 1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.
3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

கொதித்த அழகிரி..நான் கழகத்துக்காக எவ்வளவோ செய்திருக்கேன் ...

‘‘விகடனில் வந்த கருணாநிதியின் பேட்டியும் தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது’’ என செய்திகளை சொல்ல ஆரம்பித்தார். ‘‘தி.மு.க-வில் அழகிரி இல்லாததை பற்றிய கேள்விக்கு, ‘இருப்பதை எண்ணி மகிழ்ந்து மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் இப்போது இல்லாத யாரையும் நினைத்து ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்’ என சொன்ன கருணாநிதி, ‘ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டி கழகத்துக்குள் கலகத்தை ஏற்படுத்திவிட்டது. பேட்டியைப் படித்துவிட்டு அழகிரி கொதித்துப் போனார். 20-ம் தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘தலைவர் பேட்டியைப் படிச்சீங்களா’ என ஆதரவாளர்களிடம் கேட்க, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ‘நான் எவ்வளவோ கட்சிக்கு செய்திருக்கிறேன். இவ்வளவு புறக்கணிப்புக்குப் பின்னாலும் அமைதியாக இருக்கிறேன். இருந்தாலும் என்னைக் கண்டுகொள்ள வேண்டாம் என சொல்லியிருக்கிறார் அதைத்தான் தாங்க முடியவில்லை’ என விரக்தியாக சொல்லியிருக்கிறார் அழகிரி.

முதல்வர் இன்னும் கிரிட்டிகல் பொசிஷனை தண்டவில்லையா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ‘அவர் பேசுகிறார்; அவருடைய உணவை அவரே சாப்பிடுகிறார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்வது போல முன்னேற்றம் அல்ல. ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மயக்க மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவாசமும் தொண்டையில் டியூப் போடப்பட்ட டிரைக்கியோடாமி சிகிச்சையும் இன்னும் தொடர்கிறது. கடந்த 22-ம் தேதி சில நிமிடங்கள் மட்டும் ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டுள்ள வென்டிலேட்டரை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரால் இயற்கையாக சுவாசிக்க முடியவில்லை. உடனே, மீண்டும் வென்டிலேட்டரை இணைத்துவிட்டார்கள். பொதுவாக நுரையீரல் நோய் வந்தால் அது குணமாக மாதக்கணக்கில் ஆகும். கடந்த மே மாதத்தில் இருந்து செப்டம்பர் இரண்டாவது வாரம் வரையில் குடும்ப டாக்டர்கள் சிலர் மூலம் உலக அளவில் பெஸ்ட்டான ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஜெயலலிதா பயன்படுத்தி வந்தாராம்.’’

மலையக தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் .. ஜேவிபி அனுரா நிகழ்த்திய உரை .. கண்டுகொள்ளாத யாழ்ப்பாண அரசியல்வாதிகள்

;ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..! பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன். நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை. கீழே வாசித்து பாருங்கள்.
* அவர்களுக்கு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்களில் சுமார் 9.5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
* கம்பனி உரிமையாளர்கள், தோட்ட உயர் அதிகாரிகள், தேயிலை ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களின் வீடுகளையும் தொழிலாளர்களுடைய வீடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
நாளாந்தம் 450 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கின்றது. உங்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது 450 ரூபாவால் என்ன செய்ய முடியும்?

தீபாவளி பற்றி பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை!

தீபாவளி கொண்டாட்டம் என்றாலே நடுவில் எங்க "பெரியார் தாத்தா" மேட்டர்
இல்லாமல் இருக்குமா ?
தீபாவளி குறித்து பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை.
அது என்னென்ன கேள்விகள எந்த பார்ப்பானாவது பதில் சொல்ல முன்வருவானா? தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.  அதென்னடா புராண கதைகள் எல்லாமே  பக்கா போர்னோவாக இருக்கிறது? யார் யாரோட  எப்படி எப்படி எல்லாம் செஞ்சான்கிறதுதான் முக்காவாசி வர்ணனைகள்

ரம்பா குடும்ப நல நீதிமன்றத்தில் கணவரோடு சேர்த்து வைக்குமாறு கோரிக்கை

இந்திரன் பத்மநாபன் - ரம்பா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரம்பா கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்வதாக இணையதளங்களில் செய்திகள் உலாவின. தற்போது தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ரம்பா மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கடந்த சில வருடங்களாக தான் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், இந்த நிலையில் தான் குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிரமமாக இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்து கொண்டுள்ளதால், கருணை அடிப்படையில் தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ந் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறுப்படுகிறது.மாலைமலர்.காம்

பிரித்தானிய கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு ரூ.18 கோடி நன்கொடை அளித்த லைக்கா அல்லிராஜா

பிரித்தானிய நாட்டின் பிரதமராக டேவிட் கமெரூன் இருந்தபோது அவருடைய கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு இலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய பிரதமராக டேவிட் கமெரூன் பதவி வகித்தபோது இலங்கையை சேர்ந்த லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன் அல்லிராஜா என்பவர் தான் இந்த நன்கொடையை அளித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்தபோது அந்நாட்டிற்கு அளித்துவந்த உதவிகளை பிரித்தானிய அரசு தற்காலிகமாக நிறுத்தியது.இந்நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு லைக்கா மொபைல் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு நன்கொடை அளிக்க தொடங்கியுள்ளது.இந்த  பணத்தில்   தனது தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) எவ்வளவோ  செய்திருக்கலாம் செய்யலையே?

கடைசி விவசாயி .. மணிகண்டன் இயக்கத்தில் உருவாகிறது .. காக்கா முட்டை இயக்குனர்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற
வித்யாசமான படங்களை யதார்த்தத்திற்கு அருகில் நின்று படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மணிகண்டன் தற்போது ‘கடைசி விவசாயி’ என்னும் படத்தை எடுத்து வருகிறார். தலைப்பை கேட்கும்போதே இது விவசாயிகளின் கதை என்பதை நம்மால் உணர முடிகிறது. இதில் 70 வயது நிரம்பிய விவசாயிதான் படத்தின் நாயகனாம். கதைக்கேற்ற நடிகரை மணிகண்டன் தற்போது தேடி வருவதாக கூறப்படுகிறது. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காவிரி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், தண்ணீரால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளின் நிலையை இந்த படம் பிரதிபலித்து காட்டுவதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை அள்ளி வழங்கும் மத்திய அரசு, நம் விவசாயிகளின் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருப்பதை இந்த படம் வெளிச்சம்போட்டு காட்டும் என ஒருதரப்பு கூறுகிறது.

"அண்ணா" தமிழ்நாட்டில் ஏன் மீண்டும் மீண்டும் திராவிடகட்சிகளே .. ஏன் தேசிய கட்சிகள் தேய்கின்றன? தமிழகம்தான் முன்னோடி ...

அன்றைக்கு கொல்கத்தாவிலுள்ள வங்க அகாடமியில் இருந்தேன். “தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு இனி ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்” என்று அப்போதுதான் அறிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. நான் சந்தித்த நண்பர்கள் இதுபற்றிப்பேசலானார்கள். “இது முற்போக்கான முடிவு; இது மட்டும் அல்ல, நிறைய. விலையில்லாஅரிசி, பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள், மடிக்கணினி, ஒரு ரூபாய் இட்லி… தமிழ்நாடு தொடர்பாக மம்தா நிறையக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அவருக்குத் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி” என்றார்கள். கால் நூற்றாண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மாநிலம் சமூக நலத்திட்டங்களின் தாக்கங்களைப் பற்றி இப்போது நிறைய யோசிக்கிறது. இந்த ஆண்டு ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையும் அவர்களைக் கவனிக்க வைத்திருந்தது. “உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது” என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்த ஜெயலலிதா, ‘பொதுச் சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி)மசோதா’ விவகாரத்தில் நாட்டிலேயே தனித்து நிற்கும் முடிவை எடுத்ததையும் ஆச்சரியமாகப் பேசினார்கள். தொடர்ந்து நாடு முழுக்க அரசியலில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தாலும் தமிழகம் மட்டும் எப்படி விடாமல் திராவிடக் கட்சிகளுடனேயே பயணிக்கிறது என்று கேட்டார்கள். அவர்களுடைய பெரிய சந்தேகம், “திராவிடக் கட்சிகள் சிந்தாந்த வலுவற்றவை. அவற்றுக்குத் திட்டவட்டமான கொள்கை ஏதும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. எனினும், ஆச்சரியமான காரியங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றனவே எப்படி?’”

வயிறு கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் கௌசர் பானுவும் காப்பாற்ற வேண்டியவர்தான் மோடி ஜீ..!

சம்சுதீன் ஹீராசம்சுதீன் ஹீர ஆமாம் மோடி ஜீ…!
முஸ்லிம் பெண்களின் வாழ்வைச் சூரையாடுவதை நாம் அனுமதிக்க முடியாதுதான். அதெப்படி அந்த உரிமையை முஸ்லிம் ஆண்களுக்கு கொடுக்க முடியும்..?
ஃபாசிசம் தலையெடுக்கும்போதெல்லாம் சாத்தான்கள் வேதம் ஓதக் கிளம்பிவிடுவதை நாம் வரலாறு முழுவதும் பார்த்தே வருகிறோம். இதோ இப்போது நீங்கள் திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.
குஜராத் இனப்படுகொலையில் எஞ்சிய முஸ்லிம்களின் அகதி முகாமை, குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று வர்ணித்த உங்கள் வார்த்தைகளில் கூடபெண்கள்மீது நீங்கள் கொண்ட அளப்பறிய மரியாதையை வெளிப்படுத்தினீர் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு இவர்களுக்குதான் இல்லை..
உங்களுக்கு நினைவிருக்கிறதா மோடி ஜீ..ஹுசைன் நகர் என்றொரு பகுதியை..? எப்படி மறப்பீர்கள்? உங்களை உச்சானிக்கொம்பில் ஏற்றி அழகுபார்க்க அந்த மக்கள் சிந்திய உதிரங்களை நீங்கள் எப்படி மறப்பீர்கள்..? நீங்களும் மறக்க மாட்டீர்கள், நாங்களும் மறக்க மாட்டோம்.
ஹுசைன் நகர் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் பகுதி. கூலி வேலை செய்யும் அடித்தட்டு முஸ்லிம்கள் வாழும் பகுதி. அங்கு பெண்கள் அதிகம். குறிப்பாக இளம் பெண்கள். பெருநாள் கொண்டாங்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஹுசைன் நகரையும், நூரனி மஸ்ஜித்தையும், புத்தம்புது உடைகள் அணிந்து குதூகலித்துத் திரியும் இளம்பெண்களின் அழகையும் எந்தக் கவிஞனும் முழுதாய் வர்ணித்திட முடியாது.

இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொலை: யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கடையடைப்பு

கொழும்பு : இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழக தமிழ் மாணவர்கள் இருவரை அந்நாட்டு போலீசார் சுட்டு கொன்றதை கண்டித்து தமிழர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் ஊடகவியல் துறையில் 3ம் ஆண்டு படிக்கும் தமிழ் மாணவர்கள் விஜயகுமார்,20, சுலேக்சன்,21. இவர்கள் இருவரும் அக்., 21ல் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது யாழ்ப்பாணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மாணவர்களை வழிமறித்துள்ளனர். இருவரும் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் அங்குள்ள தமிழர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என, இலங்கை அரசுக்கு தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

கேள்வி கேட்ட தொகுதிவாசியை சிறையில் தள்ளிய லொடுக்கு புலி கருணாஸ்!

ராமநாதபுரம் திருவாடனை தொகுதியில் அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் நடிகர் கருணாஸ். ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்னும் பெயரில் சாதிக்கட்சியை நடத்தி வந்தவர், அதிமுக தயவில் எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ-க்களே ஜெர்க் ஆகும் அளவுக்கு அம்மா புராணம் பாடியே காலத்தை ஓட்டும் கருணாஸ், தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. சமீபத்தில் சிறு குழந்தைகளுக்கு இடையில் வந்த சச்சரவில் தலையிட்ட கருணாஸ் கொடுத்த அழுத்தத்தில் எம்.கல்லுப்பட்டி காவல்துறை, தலித் சிறார்கள் ஜெயபிரகாஷ், வல்லரசு, முருகதாஸ், சங்கீதா, சுந்தரபாண்டி ஆகிய ஐவர் மீதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் எட்டு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சர்ச்சைக்குள்ளானது.

நாங்கள் பங்கேற்றால் கூட்டணி உடையும் என்றார்கள்:ரவிக்குமார்!.. காவிரியை விட கூட்டணி முக்கியம்?

‘திமுக கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இயலாது’ என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் விளக்கமும் கொடுத்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், தமிழக அரசு இதை ஏற்கவில்லை. இதனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ‘இந்தக் கூட்டம் திமுக-வின் தோழமைக் கட்சிகளின் கூட்டம்; நரித்தனமாக செயல்படுகிறது. ஆகையால் மக்கள் நலக் கூட்டணி இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கிறது’ என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார்.

500 கொடுத்து பால்குடம் காவடி அலகு.. கிராமம் கிராமமாக ஜெயாவின் ஆரோக்கியத்துக்காக மக்களை பலிகொடுக்கும் அதிமுக மாபியா .. மூதாட்டி மரணம் .. விஜயகாந்த் அதிரடி

தமிழக முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் முதல்வருக்காக அலகு குத்துதல், மண்சோறு உண்ணுதல், விளக்கு பூஜை நடத்துதல், பால் குடம் எடுத்தல் என பிரார்த்தனைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் நேற்று, திருவண்ணாமலையில் பால்குடம் எடுக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். பல பெண்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இதைக் கண்டிக்கும்விதத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல்நலம் பெற வேண்டி அதிமுக சார்பாக நடத்தப்படும் பால் குட ஊர்வலங்கள் சிறு பிள்ளைகளுக்கு அலகு குத்துதல், காவடி தூக்குதல், பச்சை குத்துதல் போன்ற தொடர்ந்த நிகழ்வுகளாக நடந்துவருகின்றன.

BBC: ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள் உலகளவு ஆய்வில் தகவல்

மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம் கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட 3.6 மடங்கு அதிகம் ஆனால் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்த்து. எனவே 20ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள்: பெண்களைவிட ஆண்கள் மது அருந்தும் வாய்ப்பு என்பது 1.1 மடங்கு மட்டுமே அதிகம்
பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது.

தனிமனித விமர்சனங்களை ஏற்க முடியாது: சென்னை ஐகோர்ட் ..இடியமின் ஹிட்லர் எல்லாம் பிச்சை வாங்கணும்

சென்னை: பேச்சுரிமை, கருத்துரிமை என்ற பெயரில் தனிமனித
விமர்சனங்களை ஏற்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளான நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், முதல்வர் உடல்நிலை குறித்து தங்களுக்கு பேஸ்புக்கில் வந்த தகவலை மட்டுமே பகிர செய்தோம். ஆனால் அதிமுக நிர்வாகியின் பெயரில்போலீசார் தங்களை துன்புறுத்தி வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தை முடக்கிவைத்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டும் என்ற எண்ணமில்லை. போலீசாரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர். அப்போது போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களுக்கு, இடையூறு செய்யப்படவில்லை. கருத்துரிமை என்ற பெயரில் முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. துன்புறுத்தல் இல்லாமல் சட்டப்பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை ..வகுப்பறையிலே மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்... திருவள்ளூர் ..

சென்னை அருகே 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை 40 வயதான ஆசிரியர் ஒருவர் பலவந்தமாக பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் அனுஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சீனிவாசன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் அவ்வப்போது மாணவிகளிடம் வரம்பு மீறி நடந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி ஆசிரியர் சீனிவாசன் மாணவி அனுஷாவை பொய்யான காரணம் ஒன்றை கூறி வகுப்பறையில் இருந்து தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் யாரும் இல்லாமல் காலியாக இருந்த ஒரு வகுப்பறைக்கு அழைத்து மாணவி அனுஷாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சீனிவாசன். இது குறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதால் மாணவி பயத்தில் யாரிடமும் கூறாமல் மறைத்து வந்துள்ளார்.

உண்மை நிலையைப் புரிந்து கொண்டேன்: திருமாவளவனுக்கு ஸ்டாலின் கடிதம்

காவிரி நீர் பிரச்சனை பற்றி ஆலோசனை நடத்த செவ்வாய்க்கிழமை நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ள இயலாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சில காரணங்களைக் கூறி  மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்உண்மை நிலையைப் புரிந்து கொண்டேன் என்று திருமாவளவனுக்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் அனுப்பியிருந்த கடிதத்தில   ;காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கலைஞர் உடல்நல குறைவு .. ஒவ்வாமை .. வீட்டில் இருந்தே சிகிச்சை

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் அவரைக் காண வருவதை தவிர்க்குமாறு கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் வீட்டிற்கே வந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "​தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் அவரைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைமலர்.காம்

திருமாவளவன் பங்கேற்கவில்லை .. அனைத்துகட்சி கூட்டத்தில் பங்கேற்க திருமா மறுப்பு

திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில்
இருப்பதாக திருமாவளவன் சற்றுமுன் மு,க ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததே திருமாவளவன் அவர்கள்தான். நேற்று நடந்த விசிக கூட்டத்தில் கூட பெரும்பாலானோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக அதன் சார்பில் ஊடகங்களில் பேசியவர்கள் தெரிவித்தனர். நான் கடந்த மூன்று நாட்களாக அரசியல் நலன்களை கடந்து தமிழக உணர்வுகளுக்காக திருமா நிற்பார் என்றே ஊடகங்களில் பேசி வந்தேன். திருமாவின் செயல்பாடுகளும் அதையே பிரதிபலித்தன,

இஸ்லாமிய பெண்கள் கல்வி கிடைக்கும் முன்பே கர்ப்பம் ... வேகவேகமாக தலாக் தலாக் தலாக் .. வாசகியின் காட்டமான கருத்து

VIJAYA CHOUMIAN - SCOTLAND,யுனைடெட் கிங்டம் 24
இதை எனது அன்புக்குரிய இஸ்லாமிய அங்கிள்ஸும் சகோதரர்களும் தான் சரி செய்ய வேண்டும். புரட்சி என்பது அவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களுக்கு மற்ற மதத்தினர் ஆதரவு நிச்சயம் உண்டு. அபு லுக்மான், காசிமணி போன்ற இஸ்லாத்தில் அதீத பற்றுக் கொண்டோர் அங்கு இளம் பெண்கள் படும் பாட்டை கருதி எங்கு தவறுள்ளது என்று ஆய்ந்து ஏழை சகோதரிகளுக்கு உதவ முன்வரவேண்டும். இஸ்லாத்திலேயே சில அமைப்புகள் உருவாகி அவர்கள் இது போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கிறார்கள். நம் நாடு இஸ்லாத்திற்கு என்று ஒரு தனி சட்டம் வைத்திருப்பதால், இந்திய முஸ்லீம் பெண் தன்னை எதோ வெளிநாட்டில் முஸ்லீம் மத ஆட்சி நடக்கும் நாட்டில் பிறந்ததாக எண்ணி வேதனை பட வேண்டி உள்ளது.

தலாக்கை ஏற்க மறுக்கும் முஸ்லிம் பெண் .. உலகில் 22 நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை ஏற்காத போது இந்தியா ஏன் அதை பின்பற்றவேண்டும்?


புனே: மூன்று முறை தலாக் முறைக்கு 18 வயது முஸ்லீம் பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அர்ஷியா என்ற 18 வயது பெண் கூறுகையில், இஸ்லாமிய சட்டம் மூன்று முறை தலாக் கூறும் சட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இதற்காக கூறப்படும் காரணத்தையும் நான் ஏற்க மாட்டேன். எனது கருத்து மற்றும் விருப்பத்தை கேட்காமல், என்னை பிடிக்கவில்லை என எப்படி கூற முடியும். உலகில் உள்ள 22 நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை ஏற்காத போது, இந்தியா மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும். 16வயதில் எனக்கு திருமணம் நடந்தது. அப்போது எனது பெற்றோர் வரதட்சணை கொடுத்தனர். எனது கணவர் தரப்பினர் பண வசதி படைத்தவர்கள். பாராமதி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடை வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு, மாமியார் என்னை கொடுமைபடுத்தினார். நாய் போல் என்னை வேலைவாங்கினர்.
எனது தாயாருக்கும், மாமனாருக்கும் தவறான தொடர்பு உள்ளதாக மாமியார் கூறினார். கணவரின் உறவினர்களும் என்னை துன்புறுத்தினர். நான் கர்ப்பமாக இருந்த போதும் இந்த கொடுமை நடந்தது. ஒரு நாள் எனது பெற்றோர் வீட்டில் இருந்த போது, தலாக் நோட்டீஸ் வந்தது இது

முதல்வர் மோடியின் அரைவேக்காட்டு அநியாயத்தை அமுக்கிய பிரதமர் மோடி

2005ல் KG BASINல் 20 லட்சம் கோடி கன அடி எரிவாயு இருப்பதாக கூறி அதை
எடுக்க GPSC (Gujarat State Petroleum Corporation) தொடங்கப்பட்டது. 15 பொது துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் பெற்று இந்த நிறுவனம் தொடங்கினார்கள். பத்தாண்டுகளில் ஒரு கன அடி எரியாயுவும் அங்கிருந்து எடுக்கப்படவில்லை. CAGயின் சாட்டையடி அறிக்கையின்படி GPSCயின் இன்றைய கடன் 20,000 கோடி ருபாய், அவர்களால் அதன் வருட வட்டி தொகையான ரு.2000 கோடியை கூட செலுத்த முடியவில்லை.
முதல்வர் மோடியின் தலைமையில் நடந்த இந்த மொத்த ஊதாரித்தனங்களை மூடி மறைக்க பிரதமர் மோடி இந்த நட்ட கணக்கு நிறுவனத்தை லாபம் ஈட்டும் ONGC பொதுத் துறையுடன் இணைக்க திட்டம் தீட்டு வருகிறார்,
இது தான் உண்மையான SURGICAL STRIKE..
 முகநூல் பதிவு   முத்துகிருஷ்ணன்

ஊழல் பெருச்சாளி கேதான் தேசாயை சர்வதேச மருத்துவக் கழகத்திற்குத் தலைவராக மோடி அரசு பரிந்துரை

No automatic alt text available.கேதன் தேசாய்: நினைவிருக்கிறதா?
கேதன் தேசாய் என்பவரைப்பற்றி நினைவிருக்கிறதா? ஆண்டுகள் சில கடந்துவிட்ட காரணத்தால் மறந்திருக்கலாம்; வெகுமக்களின் மறதிதானே அரசியல்வாதிகளுக்கு முக்கிய முதலீடு.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ‘குபேரன்’ அவர்.
கிடைத்த வாய்ப்பை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு வேகமாகப் பயன்படுத்தியவர் கேதன் தேசாய். மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்தான் அவருக்குப் பணம் காய்ச்சி மரமாக இருந்திருக்கிறது. அவரது பணம் கறக்கும் பாணியே அலாதியானது. மருத்துவத் துறையினர் ஒரு மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம், இதர வசதிகள் செய்த பிறகு, அதன் நிருவாகம், மருத்துவக் கவுன்சி லிடம் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும். அதன் பிறகு மருத்துவக் கவுன்சில், ஒரு குழுவை தொடர்புள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர்களும் தீவிரமாக விசாரணை செய்துவிட்டு, அறிக்கை அனுப்புகிறோம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள்.

திங்கள், 24 அக்டோபர், 2016

பிடிபட்ட ஐ.எஸ் வாக்குமூலம : பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்றவர்தான் தன் தலைவர்

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதியான சுபஹானி ஹாஜா மொய்தீன், பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்றவர்தான் தன் தலைவர் என விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். இவர், இராக்கில் ஐ.எஸ். போராளிகளோடு சேர்ந்து போரிட்டிருக்கிறார். மொய்தீன், ஏப்ரல் 8, 2015 சென்னையிலிருந்து இஸ்தான்புல் சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் இருந்துவந்த ஜிகாதிகளோடு சிரியா சென்றிருக்கிறார். “துருக்கியிலிருந்து பயிற்சி பெற்று இராக் செல்லும்போது, அவருக்கு மத போதனைகளும், ஏகே-47 துப்பாக்கியை எப்படிப் பயன்படுத்துவது எனவும், வெடிகுண்டு தயாரித்தல், அரிவாள்களை பயன்படுத்துதல் ஆகியவைகள் குறித்து பாடம் நடத்தப்பட்டது. பாரிஸ் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர்தான் குழுவுக்கு தலைமை தாங்கினார்

வதந்தி கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் .. உடனே விடுதலை செய்ய உத்தரவு

மின்னம்பலம்.காம் : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக
வதந்தி பரப்பினார்கள் என்னும் பெயரில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது, இந்தியா முழுக்க விமர்சனங்களை உருவாக்கியது. முன்னாள் நீதிபதி கட்ஜூ, மனித உரிமை ஆணையத் தலைவர் தத்து, ஆமெனெஸ்டி அமைப்பு என பல அமைப்புகளும் கண்டித்தநிலையில், டிராஃபிக் ராமசாமி இந்தக் கைதுகள் தொடர்பாகவும் அவர்மீது பதியப்பட்டுள்ள வதந்தி வழக்கு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கைது நடவடிக்கைகளை கைவிடவும், கைதானவர்களை விடுதலை செய்யவும் கோரியிருந்தார். இந்த மனு, இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வதந்தி பரப்பியோரை கைது செய்தது சரிதானா.. நிலைமையை இப்படித்தான் கட்டுப்படுத்துவீர்களா? என, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. ஆனால் அதேநேரம், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்துவிட்டது.