சனி, 21 டிசம்பர், 2013

மலையாளத்தில் ஆன்ட்ரியா! இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில்


மலையாளத்தில் இரு புதிய படங்களில் நடிக்கும் ஆன்ட்ரியா, இதுவரை
இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா. மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! இப்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறாராம். மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! இதுகுறித்து ஆன்ட்ரியா கூறுகையில், "என்றென்றும் புன்னகை படத்தில் எனக்கு நல்ல வேடம். பாராட்டுகள் குவிகிறது. மேலும் சில படங்களில் வலுவான கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது சரியல்ல. அதே நேரம் ஆபாசமாக நடிக்கமாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! ஆன்ட்ரியா கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் கூட எனக்குப் பிரச்சினை இல்லை. ஏற்றுக் கொள்வேன்," என்றார்.
oneindia.in

கர்நாடகா : 20 பெண்களை கொன்ற ஆசிரியருக்கு தூக்குதண்டனை Cyanide Mohan Kumar...


கர்நாடகா மங்களூரு மாவட்டம் பண்ட்வால் தாலுகா கண்யானா பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார்(வயது 46 )இவர், 1990 முதல் கண்யானா அங்கடி அருகில், பிரைமரி பள்ளியில், தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். 
2003ல் வேலையை விட்ட மோகன், அதன் பின்னர், சட்ட விரோத செயல்களில் ஈடுபட துவங்கினார். பெண் களை ஏமாற்றி, பஸ் நிலைய கழிப்பறையில், சயனைடு கொடுத்து அவர்களை சாகடிப்பதை, வழக்க மாக கொண்டிருந்தார். சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போல் 20 பெண்களை அவர் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், மோகனை கைது செய்தனர்.

பெண்களை கூலிக்கு அமர்த்தி கர்ப்பிணியாக்கி குழந்தைகளை பெற வைக்கின்றனர்

லாகோஸ்:நைஜீரியாவில் குழந்தைகளை விற்பனை செய்வதற்காகவே செயல்பட்டு வந்த ‘குழந்தை தொழிற்சாலை’யில் இருந்து 19 கர்ப்பிணிகள் அதிரடியாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியாவில் கடுமையான ஏழ்மை காரணமாக அங்கு ஏராளமான குற்ற சம்பவங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் போதை கடத்தல் சம்பவங்களுக்கு அடுத்தபடியாக ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அங்கு குழந்தை விற்பனையும் படு அமோகமாக நடக்கிறது இதற்காகவே ஏராளமான பெண்களை கூலிக்கு அமர்த்தி, அவர்களை கர்ப்பிணியாக்கி, ஒரே இடத்தில் தங்க வைத்து குழந்தைகளை பெற வைக்கின்றனர். இதுபோல் குழந்தைகளை உற்பத்தி செய்யும் ‘குழந்தைகள் தொழிற்சாலை’ குற்றங்கள் அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன.இவற்றை தடுப்பதற்காக அந்நாட்டு போலீசாரும் படாதபாடு படுகின்றனர். அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள புரோக்கர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

பெண் அதிகாரி் அனுராதாவின் நேர்மைக்கு ADMK அரசு தந்த டிரான்ஸ்பர் ! அதிமுக பிரமுகருக்கு சொந்தமான ஜவ்வரிசி ஆலையில் ஒயிட்னர் கலந்து இருப்பது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஉணவுப் பொருட்களில் கலப்படம் என்பது, யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். இதுபோன்றவர்கள் தாய்பாலில் கூட கலப்படம் செய்ய நினைக்கும் கொடூர எண்ணம் கொண்டவர்கள் என்று உச்ச நீதிமன்றமே கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆணித்தரமான இந்த வார்த்தைகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு கொண்ட ஆட்சியாளர்கள் அதை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தஞ்சையில் 700 நாட்டுப்புற கலைஞர்கள் ! சலங்கை நாதம் நிகழ்ச்சி நாளை மறுநாள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதஞ்சை:தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள் (22ம் தேதி) சலங்கை நாதம்&2013 மற்றும் கைவினைப் பொருட்காட்சியை கவர்னர் ரோசய்யா தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக மைய இயக்குனர் சாஜித் கூறியதாவது:

தஞ்சையில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களும், புதுவை, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களும் உறுப்பினர்களாக உள்ளன. நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் நிகழ்ச்சி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

ஜெயலலிதாவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி சந்திப்பு

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 21.12.2013 சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞரான வெண்ணிற ஆடை மூர்த்தி மிகவும் அறிவாளியாவார் . அவரது திறமையும் அனுபவமும் நாட்டுக்கு பயன்பட வேண்டும் . முதல்வர் ஆரம்ப காலத்தில் நடித்த ஒரு ஆங்கில படத்தில் இவரும் நடித்திருக்கிறார் . அது மட்டுமல்ல இருவருமே ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலமே தமிழ் திரைக்கு வந்தவர்கள் 

திருமாவளவன் : காங் – பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: தி.மு.க. முடிவை வரவேற்கிறேன்-


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்திற்கு இன்று சென்றார்.
கருணாநிதிக்கு திருமாவளவன் பொன்னாடை அணிவித்தார். இருவரும் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.
20 நிமிடங்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதை நான் வரவேற்கிறேன்.
மதவாத, ஜாதி வெறிப் பிடித்த கட்சிகளை அகற்றுவதிலும், மதசார் பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் ஆற்றல் படைத்தவர் கலைஞர். தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தொடரும்.
இந்திய துணை தூதர் தேவயானி அவமானப் படுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. அந்நாட்டுடான உறவை முறிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா: கட்சி பணியாற்ற முடிவு

மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா: கட்சி பணியாற்ற முடிவுடெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ் கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
காங்கிரசும், பா.ஜ.க.வும் நேருக்கு நேராக களத்தில் குதித்த இந்த 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு (2014) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமான அரை இறுதி போட்டி போல கருதப்பட்டது.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், துணைத் தலைவர் ராகுல்காந்திக்கும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக டெல்லியில் ஏற்பட்ட தோல்வியால் மிகவும் அதிருப்தி அடைந்த ராகுல் பாராளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி மூலம் சாதாரண மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டதாக கூறிய ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களை மந்திரி பதவிகளில் இருந்து விலகச் செய்து தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்தார். அவரது திட்டப்படி காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள்

பாலுமகேந்திரா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.

2005ஆம் ஆண்டு தனுஷ்-பிரியாமணி நடித்த அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி முதல் முறையாக நடித்து இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் சசிக்குமார் தயாரித்து ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்திருக்கிறார். 
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈரானியன் படங்களைப் நாம் வாய் பிளந்து பார்த்தது போதும். நமது படங்களை அவர்கள் வாய்பிளந்து பார்க்கிற காலம் வரவேண்டாமா என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். தலைமுறைகள் என்ற இந்தப்படம் இனி தமிழ் சினிமாவுக்கு வரும் இளைய இயக்குனர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும், அவர்களுக்காக நான் விட்டுச்செல்வது இதுதான் என்றார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார வர்க்க மாநாடுகளிலும் அம்மா பஜனைதான் ! கலெக்டர் மகரபூஷணம் :அம்மாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன் !


ஜெயலலிதாஇந்தியா மேதகு பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியின் கீழ் இருந்த போது அவ்வப்போது இந்திய சமஸ்தான மகாராஜாக்களின் மாநாடு நடக்கும். அந்த தர்பாருக்கு தமது மகாராஜா தொப்பி, பளபளக்கும் உடைகள் அணிந்து, பாதாதி கேசம் வரை நகைகள் அணிந்து, முன் பக்கம் மேல் வளைந்த செருப்பு அணிந்து போய் பேரரசரின் பிரதிநிதிக்கு மரியாதை செலுத்துவார்கள் சமஸ்தான மகாராஜாக்கள்.
மேதகு பேரரசரின் இந்திய பிரதிநிதி வைஸ்ராயிடம் மண்டியிட்டோ, தண்டனிட்டோ, போற்றி பாடியோ தமது கீழ்ப்படிதலை தெரிவித்துக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த மாநாடு வரை தத்தமது சமஸ்தானங்களில், தத்தமது அரண்மனை வாழ்வில் திளைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். நிர்வாகத்தையும், ஆட்சியையும், மக்களை சுரண்டுவதையும் பிரிட்டிஷ் பிரதிநிதி கவனித்துக் கொள்வார். ஒரு megalomaniac ஆட்சி எப்படி இருக்கும் என்பதை பார்த்து பாடம் படியுங்கள் 

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் கைது !

நெல்லை அருகே பேட்டையில் உள்ள சர்ச்சில் இருப்பவர் பாதரியார் செல்வன். கடந்த 2010ல் இவர் அங்கு பணிக்கு வந்தார். அந்த நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் 10ம் வகுப்பு படித்து வந்தார். 15 வயதுடைய அந்த மாணவி, பாதரியாரிடம் பாட்டு பயின்று வந்தாள். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் சொல்லிய பாதிரியார், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமுற்றார். சில தினங்களில் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்ட அவரது தாய் விசாரித்துள்ளார். பாதிரியார்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியிருக்கிறார். உடனே பெற்றோர்கள் பாதரியாரிடம் விஷயத்தை சொல்-, முறையிட்ட போது அவர்களை சரிகட்டிய பாதரியார் கருகலைப்பு செய்வதற்காக பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் 5 மாத கருவை கலைக்க செய்து, அந்த சிசுவை கல்லறையில் உள்ள தோட்டத்திலேயே புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர அவர்கள் பிரச்சனையை கிளப்பியபோது மாணவி தகவல் போலீசார் வரை சென்றது

மாணவியின் பெற்றோரிடம் போலீஸ் விசாரித்தது. அவர்களிடம் புகார் வாங்கியது போலீஸ். அதன் அடிப்படையில் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விமலா, பாதரியார் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

பார்ப்பனீய ஆதரவில் விருதுகளை அள்ளி குவிக்கும் யேசுதாஸ் ! பெரியார் எதிர்ப்பு fast food பாணியில் விரைவில் அங்கீகாரம்


jesudas6

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

சைவ சமயத்தை சேர்ந்த ‘கிறிஸ்துவருக்கு’
இம்முறை சாகித்திய அகடாமி விருது
அருளப்பட்டிருக்கிறது.
‘ஆரூத்ரா தரசினம்’ நாளில் அறிவிப்பு வந்தது தற்செயலானதல்ல.
என்று சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பற்றி நேற்று face book ல் எழுதினேன்.
Tnfishermen Voices என்கிற பெயரில் பெரியார்-டாக்டர் அம்பேத்கர் கருத்துக்களை வீச்சோடு face book ல் எழுதும் விவாதிக்கும் தோழர், நான் எழுதியதை மறுத்து எழுதினார். பெரும்பாலும் எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான கருத்தொற்றுமை இருந்ததால் என் எழுத்துக்களுக்கு விரும்பம் தெரிவித்தே வந்திருக்கிறார். அநேகமாக நான் எழுதியதை அவர் மறுத்து எழுதியது இதுதான் முதல் முறை.
தோழர் Tnfishermen Voices அவர்களின் ஆதங்கமும் அது குறித்த என்னுடைய விளக்கமும்:
Tnfishermen Voices தோழர் அவரின் மண்ணின் மனம் மாறாத எழுத்தை தேடலை முதலில் பெரியாரிய சிந்தனையாளர் ஆகிய நீங்கள் பாராட்டுங்கள் பிறகு விமர்சனம் செய்யுங்கள் அவர் எங்கேயும் தன்னை பார்ப்பான்களின் பினாமி என்று தன்னை அழைத்து கொண்டாதாக நான் பார்கவில்லை
வே மதிமாறன் நான்கு மாதங்களுக்கு முன், காக்கைச் சிறகினிலே… இதழில் வந்த அவருடைய பேட்டியை படித்ததினால்தான் இப்படி குறிப்பிட்டு இருக்கிறேன்… 

அமெரிக்காவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது பாவம் தேவயானிக்கு தெரியாதாம்? தேவ்யானியின் பணிப்பெண்ணுக்கு நடந்த அநீதியை இந்தியா மறந்தது நியாயமா? ..கேட்கிறது யு.எஸ்.


நியூயார்க்: தேவ்யானிக்காக இவ்வளவு தூரம் போராடும் இந்தியா, அதேசமயம் இந்தியப் பிரஜையான அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்க்கு நடந்த அநீதி குறித்து ஏன் ஒன்றும் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. மேலும், இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையும் அது வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கைது விவகாரத்தில் ஆரம்பம் முதல் தனது கண்டனத்தைத் தேரிவித்து வரும் இந்திய அரசு, அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்காவை வற்புறுத்தி வருகிறது. தேவ்யானிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறவகையில் அவரை ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்தியத்தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்! மற்றொரு உலகம்

பணத்தில் புரளும் பெரிய இடத்தில் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? (ஒருவேளை நீங்கள் அப்படி பிறந்திருந்தால், முதல் வாக்கியத்தை தவிர்த்து விடவும்) பெரிய இடத்து டீனேஜர்களின் வாழ்க்கை எப்படி போகிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? Rich Kids of Instagram என்ற பெயரில்மாயா ஸ்லோவன் எழுதிய புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு ஜூலையில் வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரமோஷன் வேலைகள் இப்போதே தடல்புடலாக நடக்கின்றன பொதுவாகவே எல்லோருக்கும் பக்கத்து வீட்டுக்குள் எட்டிப் பார்க்க ஆவல் இருப்பது இயல்புதான். பக்கத்து வீட்டில் பணமழை கொட்டுகிறது என்றால், அந்த ஆவலின் சதவீதம் பலமடங்கு எகிறுவதும் இயல்புதான். இதனால், இந்தப் புத்தகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகம். விலை $18.50 என விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இப்போதே ஆர்டர் பண்ணி முன்பதிவு செய்துகொள்ளவும் முடியுமாம்.
புத்தகம் யாரைப் பற்றியது என்பதற்கு ஒரு வரியில் கொடுத்துள்ள விளக்கம், ‘it follows the lives of teens who are ‘not your typical well-to-do brats’.
இந்த டீனேஜர்கள் பொதுவாகவே Ferrari கார்களில் சுற்றுபவர்கள். வார இறுதி நாட்களை கழிக்க பிரைவேட் ஜெட்களில் பறப்பவர்கள்.

கொலைகார மேட்டுக்குடி வீட்டு எஜமானிகள் !



குஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினரான தனஞ்செயின் மனைவி ஜாக்ரிதி, அவரது வீட்டுப் பணியாளரான ராக்கியை கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். மற்றொரு பணிப்பெண் மீனாவும், 17 வயது சிறுவன் ராம்லாலும் கடுமையான காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்பது மாதங்களுக்கு முன் டெல்லியிலுள்ள தனஞ்செய் வீட்டில் வேலைக்கு சேர்ந்த மே.வங்கத்தைச் சேர்ந்த 35 வயதான ராக்கி, ஒரு விதவை. சொந்த பந்தம் ஏதுமற்ற இவ்விதவையையும் மற்றுமிரு வேலையாட்களையும் காட்டுத்தனமாக அடிப்பதோடு, உணவைத் தரையில் போட்டுத் தின்ன வைப்பது, சோற்றில் எச்சில் துப்பி வைத்துச் சாப்பிடச் செய்வது, கெட்டுப் போன உணவைக் குப்பையில் எறிந்தபின் அதை எடுத்துச் சாப்பிட நிர்பந்திப்பது – என்று மிகக் கொடிய வன்முறையை வக்கிரமாக ஏவியுள்ளார் ஜாக்ரிதி. கழிப்பறை உட்பட வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொருத்தி, வேலையாட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ள ஜாக்ரிதி, தீபாவளியன்று சுத்தமாகத் தரையைத் துடைக்கவில்லையென்று ராக்கியின் கழுத்தை நெரித்து, தலைமுடியை இழுத்துச் சுவற்றில் மோதி, இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கி, அவரது பிட்டத்தில் இஸ்திரியால் சூடு போட்டுள்ளார். கோபம் அடங்காமல் மற்ற வேலையாட்களையும் இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளார். இக்கொடிய தாக்குதலால் குற்றுயிராகக் கிடந்த ராக்கி, நவம்பர் 4-ஆம் தேதியன்று பின்னிரவில் மாண்டு போனார்.

தேவயானியை கைது செய்ததில் என்ன தவறு ? தேவயானி குற்றவாளியே ! தியாகி அல்ல ,


தேவயானி கோப்ரகடேதேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை ‘தியாகம்’ செய்து, அவரது உறவினரான 1985-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் அடியொற்றி 1999-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.
தேவயானி கோப்ரகடே
பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.
2012-ம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.

அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் இந்தியா பதிலடி


புதுடெல்லி,
உலகமும், நேரமும் மாறி வருவதைப் புரிந்து கொண்டு, பெண் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா பிடிவாதம்
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணி புரிந்த தேவயானி கோப்ர கடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அவமரியாதையாக நடத்தப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், இந்தியா வற்புறுத்தி வருகிறது.

ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை :பொறுமையை சோதிக்க வேண்டாம்

டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கக் கூடிய தனி மெஜாரிட்டி பெறவில்லை. 32 இடங்களை பெற்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. டெல்லியில் ஆட்சியமைக்க 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு, 8 இடங்களை பெற்ற காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரசின் ஆதரவை ஏற்க 18 நிபந்தனைகளை அக்கட்சி விதித்தது. அவற்றில் பெரும்பாலானவை நிர்வாக ரீதியானது என்று கூறிய காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதை மீண்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சியமைப்பதாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது தொடர்பாக டெல்லி மக்களுக்கு அக்கட்சி சுமார் 25 லட்சம் கடிதங்களை அனுப்பியது. இவற்றுக்கு பெரும்பாலான மக்கள், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைக்க ஆதரவு தெரிவித்து பதில் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

திமுக உண்மையாகவே காங்கிரசை கைகழுவி விட்டதா ? ஜி.ராமகிருஷ்ண


தி.மு.க. அறிவிப்பை இறுதி முடிவாகக் கருத முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை
காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்ற தி.மு.க. அறிவிப்பை இறுதியான முடிவாக கருத முடியாது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவும், மக்கள் விரோதக் கொள்கைகளை அமலாக்கிய காங்கிரசும் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட அகில இந்திய அளவிலான ஒரு மாற்றை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

திங்கள், 16 டிசம்பர், 2013

2G ஸ்பெக்ட்ரம் ! திமுகவை அழிக்க பின்னப்பட்ட சதிவலை ! சி.பி.ஐ. யாருடைய கைவாள்?


திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்துகின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற் கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று நம்முடைய தம்பி ராஜாவை, சிறையிலே வைத்து - இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறது. ஆனால் வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடுபவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.ஐ. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.ஐ. யாருடைய கைவாள்? திமுகவை அழிக்க பின்னப்பட்ட சதிவலை தான் ஸ்பெக்ட்ரம் 

இந்திய ராஜதந்திரி தேவயானி நியூயார்க்கில் கைது: நாளைக்கு டில்லியில் யார் கைது?


டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளின் மனைவிகள், டில்லி இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியைகளாக பணிபுரிகிறார்களே… அவர்களில் யாரிடமாவது இந்திய work permit  கிடையாது.சீனியர் இந்திய ராஜதந்திரி 39 வயதான தேவயானி கொப்ராகேட் நியூயார்க் நகர வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம், இருவித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்களில் ஒருவிதமாக கூறப்படுகிறது. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிலர் மத்தியில் வேறு விதமாக கூறப்படுகிறது.

ஸ்பெயினில் 500 கோடி ரூபாயில் லக்ஷ்மி மிட்டல் மகளின் ஆடம்பர திருமணம்! இதுவல்லவோ தேசப்பற்று


இந்தியத் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலின் மகள் திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 500கோடி ரூபாய் செலவில் ஸ்பெயினில் நடத்தப்பட்டது. இதன் மூலம் உலகளவில் நடத்தப்பட்ட ஆடம்பர திருமணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது இத்திருமணம்.

எஃகு இரும்புத் தொழிலில் முன்னணி வகித்து வரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். உலகப் பணக்காரர்களில் முண்ணனியில் இருக்கும் இவரது மகள் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு 46 மில்லியன் யூரோ செலவில் நடந்தது. உலகமே வியந்து பார்த்த அத்திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் திருமணத்தை அதைவிட படு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார்.

திமுகவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்

காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.>சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி யார் காலிலும் எப்போது  வேண்டுமானாலும் விழ தயாராக இ
நாராயணசாமி
மத்திய அமைச்சர் நாராயணசாமி  கூறியதாவது:  9 வருடம் கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவியை அனுபவித் தார்கள். 9 மாதத்திற்கு முன்பு மந்திரிசபையிலிருந்து விலகினார்கள். தற்போது கூட்டணி இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

எல்லீஸ் ஆர் டங்கன் ! தமிழ்சினிமாவிற்கு நவீனபார்வையை உருவாக்கிய Ellis R. Dungan An American in Madras



An American in Madras, ஆவணப்படத்தினைப் பார்த்தேன்நேற்று சென்னை திரைப்பட விழாவில்  எல்லீஸ் ஆர் டங்கனை பற்றிய ஆவணப்படமிது. மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது, பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற கரண்பாலி இயக்கியுள்ளார் , ஆர் வி ரமணி படத்தின் ஒளிப்பதிவாளர், 80 நிமிசங்கள் ஒடக்கூடிய இப்படம் டங்கனை பற்றிய முழுமையாகச் சித்திரத்தை நமக்குத் தருகிறது,

சதி லீலாவதி, பொன்முடி, அம்பிகாபதி, சகுந்தலா, மீரா, மந்திரிகுமாரி உள்ளிட்ட பதிமூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எல்லீஸ் ஆர் டங்கன்,  எம்ஜிஆரை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தவர் டங்கனே,
அமெரிக்காவில் பிறந்துவளர்ந்து புகைப்படக்கலை கற்ற டங்கன் தனது நண்பரின் அழைப்பின் பேரில் ஆறுமாதகாலம் இந்தியா வந்திருக்கிறார்,  தமிழ் சினிமாவில் பணியாற்ற நேர்ந்து இங்கேயே பதினைந்து ஆண்டுகள் தங்கிவிட்டார்,
1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் பணியாற்றிய எல்லீஸ் ஆர் டங்கன் பற்றி இதுவரை முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை, ராண்டர்கை அவரைப் பற்றிச் சிறு புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் என்பது என்நினைவு,

ஆம்ஆத்மி கட்சி கெஜ்ரிவால் நேர்காணல் : ஆட்சி நடத்தாமல் ஓடி ஒளிகிறீர்களா?


பெரிய அரசியல் கட்சிகளுக்கு எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்த ‘ஆம்ஆத்மி கட்சி’(ஆ.ஆ.க.) இப்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னணி அரசியல் கட்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவது என்று தீர்மானித்துவிட்ட கட்சி, மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகமாகப் பேசுகிறார்.
உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்ன?
காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் இணைந்து அடுத்த அரசை அமைக்க ஊக்குவிப்போம், நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். இவ்விரு கட்சிகளும் சேர்ந்தே ஊழலில் ஈடுபடுவதாக எல்லோராலும் அறியப்பட்டிருக்கிறது. எனவே, இம்முறை ஏன் அவை பகிரங்கமாகச் சேர்ந்தே அரசை அமைக்கக் கூடாது? எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்வதன் மூலம், உங்களுடைய லட்சியப்படி ஆட்சி நடத்தாமல் ஓடி ஒளிகிறீர்களா என்பதே இவ்விரு கட்சிகளும் எங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி. மக்கள் அப்படி நினைத்திருந்தால் எங்களுக்கு 28 தொகுதிகள் கிடைத்திருக்காது.

மறக்க முடியுமா? காங்கிரசை மன்னிக்கும் மன நிலையில் திமுக இல்லை


 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எனது மகள் கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சுமத்தினார்கள். கனிமொழியை 8 மாதம் சிறையில் அடைத்தார்கள். எல்லோரும் தப்பித்து ஓட முயற்சித்தபோது, இவர்கள் இருவரை மட்டும் சிபிஐ மூலம் சிக்க வைத்தனர். சிபிஐ யார் வசம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? இவர்களை சிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், இயக்கத்தையே சிக்கவைக்க முயற்சி செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
நம்பிக்கை துரோகம்
தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட சங்கடம், கனிமொழி, ராசாவுக்கு ஏற்பட்ட களங்கம், இவையெல்லாம் காங்கிரஸ் ஏற்படுத்திய மாயை ஆகும். இப்படி நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுடன் மீண்டும் போய்விடுவோம் என்று நீங்கள் தயவுசெய்து எண்ண வேண்டாம்.  காங்கிரசை மன்னிக்கும் மன நிலையில் திமுக இல்லை! மறக்க முடியுமா?

ஆம் ஆத்மி கட்சி ஒரு நல்ல விளம்பர கம்பனி ! நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் ஆட்சி அமைக்க தயக்கம் ?


ஆம் ஆத்மி கட்சி நிபந்தனைகள் அக்கட்சியின் விளம்பரமாக உள்ளது:  நாராயணசாமி
ஆம் ஆத்மி கட்சி நிபந்தனைகள் அக்கட்சியின் விளம்பரமாக உள்ளது எனெ நாராயணசாமி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி விதித்து உள்ள நிபந்தனைகள் மக்களின் நலனுக்காக எதுவும் இல்லை. அந்த கட்சியின் விளம்பரமாக உள்ளது. டெல்லி மக்களை ஏமாற்றி விட்டனர். டெல்லி மக்களின் நம்பிக்கையை வீணாக்கிவிட்டனர்.
சிபாரிசு கடிதம் தர எம்.பி.க்கள் லஞ்சம் பெற்றதாக வந்த செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். இதுபற்றி முறையான புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும் இது பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மை இருக்குமானால் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் ஆட்சி அமைக்க தயக்கம் 

ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து பறிபோகிறது

ஐதராபாத் : உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ள, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, ஆந்திர மாநில அரசு, 'குடும்பத் தலைவர்' அந்தஸ்தை பெண்களுக்கு வழங்கி, அனைத்து குடும்பத்தினருக்கும், புதிய ரேஷன் கார்டு வழங்க உள்ளது.மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், நட்சத்திர திட்டங்களில் ஒன்றாக, உணவு பாதுகாப்பு திட்டம் கருதப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, குடும்பத் தலைவர் அந்தஸ்து, அந்த குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினரிடம் இருந்து, மூத்த பெண்களுக்கு மாறுகிறது. குடும்பத்தின், சம்பாதிக்கும் நபராக, குடும்பத் தலைவராக, ஆண் இருந்தாலும், இனிமேல், குடும்பத் தலைவர் என்ற அந்தஸ்து, பெண்களுக்குத் தான் வழங்கப்படும்.அந்த வகையில், அந்த குடும்பத்தில் உள்ள, 18 வயது நிரம்பிய பெண்களில், யார் வயதான பெண்ணோ, அந்தப் பெண்ணுக்கு, குடும்பத் தலைவர் அந்தஸ்து வழங்கப்படும். ஆண்களிடம் இருந்த, அந்த அந்தஸ்து பறிக்கப்படுகிறது.அந்த குடும்பத்தில், 18 வயது நிரம்பிய பெண் இல்லை என்றால் மட்டும் தான், மூத்த ஆண் உறுப்பினரிடம், அந்த அந்தஸ்து இருக்கும்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

DMK :நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை


 

 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவு உரை ஆற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி இல்லை. திமுக மீது வீண் பழி சுமத்தி ஆ.ராசாவுக்கு களங்கம் கற்பித்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால் கனிமொழியும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. காங்கிரசின் செயலை மறந்து விடமாட்டோம். வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜக வேறு. இப்போது உள்ள பாஜக வேறு. இதையெல்லாம் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். யாருடன் கூட்டணி என்பதை திமுக அமைக்கும் குழு முடிவு செய்யும் என்றார்.

படம்: ஸ்டாலின்

இந்திய–அமெரிக்க உறவில் விரிசல்? இந்திய துணை தூதர் அமெரிக்க சட்டத்திற்கு உட்பட்டவரே

வாஷிங்டன் விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெண் துணைத்தூதர்
அமெரிக்காவில் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவரும் மும்பையை சேர்ந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), வேலைக்காரப்பெண்ணுக்கு ஏ–3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான தகவல்கள் தந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இதன்பேரில் அவர் கடந்த 12–ந்தேதி கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தனது பணிப்பெண் சங்கீதாவுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் சம்பளம் தருவதாக அழைத்துச்சென்று விட்டு, ரூ.30 ஆயிரம் மட்டுமே தந்து கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஆசிரமத்திற்கு வருகைதரும் பல பெண்களிடம் உறவு வைத் துள்ளேன்


பாலியல் வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண்சாயி கடந்த வாரம் அரியானாவில் மாறுவேடத்தில் இருந்த போது கைதானான். பஞ்சாபியரைப்போல் வேடமிட்டு வெளிநாட் டிற்கு தப்பிச்செல்ல இருந்த நேரத்தில் அரியானா மாநில எல்லையில் பிடிபட்ட அவன் பல பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினேன் என்றும், அவர்கள் உண்மையைச் சொல்லாமலிருக்க படமெடுத்து மிரட்டினேன் என்றும் உண்மை யைக்கூறினான், இதை குஜராத் காவல் துறையினர் உறுதிசெய்துள்ளனர்.  சூரத் காவல்துறை ஆய்வாளர் ராகேஷ் அஸ்தனா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடந்த வாரம் வன் கொடுமை வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண் சாயியை காவல்துறை பொறுப்பில் எடுத்து விசாரித்தோம், அப்போது அவன் தன் மீதானகுற்றத்தை ஒப்புக்கொண்டான்

Chennai சர்வதேசத் திரைப்பட விழாவில் இன்று..

சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 11-ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 163 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் சனிக்கிழமை (டிச.14) திரையிடப்படும் படங்களின் விவரம்:
உட்லண்ட்ஸ் திரையரங்கம்:
"மோல்ட்' (ஜெர்மனி) காலை 11.00.
"ஸ்ட்ரை டாக்ஸ்' (பிரான்ஸ்) மதியம் 12.
"சுஸான்' (பிரான்ஸ்) மாலை 4.30.
"வெயிட்டிங் பார் தி ஸி' (ரஷியா) இரவு 7.
உட்லண்ட்ஸ் சிம்போனி திரையரங்கம்:
"ட்ரபுள் எவரி டே' (ஜப்பான்) காலை 10.45.
"மிதுனம்' (தெலுங்கு) மதியம் 1.45.
"முனிசீப்' (கன்னடம்) மாலை 4.15.
"தி ஃப்ரீடம்' (பாகிஸ்தான்) மாலை 6.45.
சொர்ண சக்தி அபிராமி (அபிராமி மெகா மால்):
"சீப் த்ரில்ஸ்' (அமெரிக்கா) காலை 11.00.
"லிட்டில் லயன்ஸ்' (பிரான்ஸ்) மதியம் 2.
"ரோ' (கொலம்பியா) மாலை 4.30.
"சிக்ஸ் அக்ட்ஸ்' (இஸ்ரேல்) இரவு 7.00.
பால அபிராமி (அபிராமி மெகா மால்):
"ஃபீட் மீ யுவர் வித் வேர்ட்ஸ்' (ஸ்லோவேனியா) காலை 10.45.
"டேங்கரியன்ஸ்' (ஜார்ஜியா) மதியம் 1.45.
"வாட் தே டோன்ட் டாக் வென் தி டாக் அபெüட் லவ்' (இந்தோனேசியா) மாலை 4.15.
"சீக்ரெட்ஸ் ஆஃப் லவ்' (போலந்து) மாலை 6.45.

ஆண்டிபட்டி "டூ' அமெரிக்கா மாணவருடன் பேச வாய்ப்பு ! வலைத்தளத்தில் வசமாகும் அரசு பள்ளிகள்


மதுரை: தமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் "வீடியோகான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் "பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு' என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க: லோக்சபா கூட்டணி இன்று முடிவு செய்யப்படும்:

சென்னை: "லோக்சபா கூட்டணி குறித்து, இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் சுயசரிதையான, 'நெஞ்சுக்கு நீதி'யின் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா, நேற்று மாலை நடந்தது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன், முதல் பிரதியை வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
லோக்சபா தேர்தலில், கூட்டணி வைத்து தான், தி.மு.க., போட்டியிடும். கூட்டணி யாருடன் வைப்பது என்பது பற்றி, இன்று நடக்கும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். திராவிட இயக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கூட்டணி அமைக்கப்படும். யாருடன் கூட்டணி என, இப்போதே கேட்காதீர்கள்; அது, பிணியாக முடிந்துவிடும். கட்சித் தலைமை அமைக்கும் கூட்டணியை ஏற்று, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பாடுபட வேண்டும்.

ஊழலில் திளைக்கும் இந்தியா ! இலங்கை சீனாவை விட அதிகம் !

ஊழல் புரிவது 'சாமர்த்தியம்''' என்றும்- ஊழல் சம்பாத்தியம் 'அந்தஸ்து' என்றும்- அங்கீகாரம் பெற்றுவிட்டது இங்கு... யாருக்கும் வெட்கமில்லை..." 
மனித சமுதாயத்தையே அரித்தெடுக்கும் புற்றுநோயாக ஊழல் பெருகி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த ஒழிக்க, பலரும் பல வழிகளிலும் முயன்றும், இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
உலகம் முழுவதும் உள்ள 177 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு நடத்தியதில் ஊழல் இல்லாத நாடே இல்லை என தெரிய வந்துள்ளது. மூன்றில் இருபங்கு நாடுகளின் நிலை மிக மோசமாக உள்ளது. இருப்பினும் ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. ஊழல் மிகுதியாக உள்ள நாடுகளில் சோமாலியா, வட கொரியா, ஆப்கானிஸ்தான், சூடான், லிபியா, ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய 91வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா இலங்கை போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் குறைவாக உள்ளது. பாகிஸ்தான், ரஷ்யா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் அதிகமாக உள்ளது. சட்ட விரோத பண பரிமாற்றத்தை ஒழித்து, அரசியலில் புழங்கும் நிதி முறைகேடுகளைத் தூய்மைப்படுத்தி, மக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்டு, அரசுத் துறைகள் மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படச் செய்ய வேண்டியது மிக அவசியம்; அவசரமுமாகும். dinamalar.com