சனி, 3 மே, 2014

குஜராத் வியாபாரியின் கப்பலில் ரூ1600 கோடி மதிப்பிலான ஹெராயின்- ஆஸி. கடற்படை!!

Australian Navy has seized heroin worth Rs 1600 crore in the international market from an alleged Indian boat off Kenyan coast. The drugs weighing 1023 kg were concealed in 46 cement bags. It is to be understood that one businessman named Haji Bashir of Gujarat's Jam Malaya had taken the boat on rent of about Rs 18 lakh annualy in October last year. அகமதாபாத்: குஜராத் வியாபாரிக்கு சொந்தமான கப்பலில் ரூ1600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் மடக்கிப் பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் மலாயா என்ற இடத்தை சேர்ந்த ஹாஜி பஷீர் என்ற வியாபாரி ஒரு கப்பலை ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வாடகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கினார். கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அந்த கப்பல் குஜராத்தின் டுனா துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது. பல்வேறு நாடுகளுக்கு சென்ற பின்னர் அக் கப்பல் கென்ய கடற்பரப்பில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சென்று கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கப்பல் படையினர் அதை மடக்கி சோதனையிட்டனர். அப்போது கப்பலில் 1023 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 46 சிமெண்டு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1600 கோடி. அதனை அவர்கள் கைப்பற்றினார்கள். அக் கப்பல் பல நாடுகளுக்கு சென்றுள்ளதால் மூட்டை மூட்டையாக போதைப் பொருள் எங்கு ஏற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
tamil.oneindia.in/

சென்னை குண்டுவெடிப்பு- சந்தேக நபரின் வீடியோ காட்சிகள் வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்திற்கு உரிய நபர் அடங்கிய வீடியோ காட்சிகளை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இசென்னை ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் பதிவான நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உரிய வகையில் அமைந்துள்ளது. இஇவர்தான் குற்றவாளி என்று உறுதியாக கூற முடியாது. சம்பந்தபட்ட நபர் குறித்து தகவல் தெரிந்தால், 7708654220 என்ற செல்போன் எண்ணிலும், 044- 22502510, 22502500 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். பாட்னா மற்றும் சென்னையில் ஒரே மாதிரியான வெடிப்பொருட்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. காலை 5.40 மணிக்கு வந்தடைய வேண்டிய குவஹாத்தி விரைவு ரயில், சரியான நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை கடந்திருந்தால் ஆந்திர எல்லையில் இந்த வெடிகுண்டுகள் வெடித்திருக்கும். இந்த குண்டுகள் சென்னைக்கு முன்பாகவே வேறொரு ரயில் நிலையத்தில் வைத்திருக்கலாம். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடைத்த உடைந்த கடிகாரப் பகுதி மூலம் டைமர் பாம் பயன்படுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
tamil.oneindia.in

சாவித்திரியும், சவுகார் ஜானகியும் கலந்து பேசி முடிவு செய்ததுபோல – சொந்தப்படம் எடுக்கத் தொடங்கி...


தேவர் பிலிம்சின் கிளை நிறுவனமான தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்து நான் எழுதி ‘குணசித்திர நடிகை’ – நற்குணமிக்க நடிகை சவுகார் ஜானகி – ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா நடித்த ‘‘அக்கா தங்கை’’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஏழையாக இருந்து, அதிர்ஷ்டவசமாக ஒரு செல்வந்த நீதிபதிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்ட அக்கா முதன் முதலாக தன் கணவரின் கண்கவர் மாளிகையில் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வருகிறாள். அந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முதல் நாள் நான் சவுகார்ஜானகியிடம் கூறினேன்:–
நான்:– அம்மா! நாளைக்கு எடுக்கப்போறது முக்கியமான சீன்! இப்போ நீங்க கூலி வேலை செஞ்சிப் பிழைப்பு நடத்தின அந்த ஏழை அக்கா இல்லே. ஒரு பெரிய நீதிபதிக்கு வாழ்க்கைப்பட்ட கோடீசுவரி!
அதனால முதல் முதல்லே உங்களுக்குச் சொந்தமான அந்த மாளிகைக்குள்ளே வரும்போது ‘சர்வாலங்கார பூஷிதையா’ அஷ்ட லட்சுமிகளும் ஒண்ணாச் சேர்ந்து உருவான மகாலட்சுமி மாதிரி  ஆடை ஆபரணங்கள் ஜொலிக்க ‘மேக்–அப்’ பண்ணிக்கிட்டு வரணும். அதுக்குத் தகுந்த மாதிரி...

Jeyamohan: இந்திய வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க பர்மாவுடனான உறவைச் சார்ந்து உள்ளது !


வடகிழக்கு இந்தியா
நான் பிரிவினைவாதம் இருந்த நாட்களில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து சென்றிருக்கிறேன். அங்கு சில இதழாளர்களின் தொடர்பு உண்டு. பலமுக்கியமானவர்களிடம் தனிப்பட்டமுறையில் பேசியிருக்கிறேன். என் கருத்துக்கள் அவற்றின் அடிப்படையிலானவை. இக்கட்டுரையில் சாதாரணமாகக் கிடைக்கும் நேரடித்தகவல்களை மட்டும் கொண்டு என்ன நடக்கிறது என்று ஒரு எளிய வரைபடத்தை அளிக்கிறேன்.
வடகிழக்கின் அனைத்துப் பிரிவினை இயக்கங்களும் பர்மாவை முதன்மையாகவும் அன்றைய வங்கதேசத்தை அடுத்தபடியாகவும் தளமாகக்கொண்டு வெளிப்படையாகவே செயல்பட்டவைதான். அவற்றுக்கு பர்மிய ராணுவச் சர்வாதிகார அரசு ஆயுதமும் பணமும் கொடுத்து ஊக்குவித்தது. இணையத்தில் சாதாரணமாக அவற்றின் அதிகாரபூர்வ வரலாற்றைப் பார்த்தாலே தெரியும் செய்திகள் இவை.
அரைநூற்றாண்டுக்காலம் பல கட்டங்களிலாக வடகிழக்குப்பகுதிகளை எந்தவிதமான வளர்ச்சியும் இல்லாமல் தேக்கநிலையில் வைத்திருந்தவை இந்தப் பிரிவினை இயக்கங்கள். அவற்றின் உருவாக்கம், அவற்றின் இனவாதக் கொள்கைகள், அவற்றுக்கிடையே உள்ள போர்கள் பற்றியெல்லாம் நேர்மையுடன் எழுதப்பட்ட எழுத்துக்கள் அனேகமாக இல்லை. 

நதி நீர் பங்கீட்டில் கேரள அரசு ஓரவஞ்சனை!

பரம்பிக்குளம், சிறுவாணி திட்ட நதி நீர் பங்கீட்டில், கேரள அரசு ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்வதால், தமிழகத்தில் குடிநீர் திட்டங்களும், பாசன நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.தமிழக - கேரள அரசுகள் இடையே முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 13 நதிநீர் பங்கீட்டு பிரச்னைகள் உள்ளது. இதில், கோவை மாவட்டத்திலுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் (பி.ஏ.பி.,), சிறுவாணி குடிநீர் திட்டங்களும் அடக்கம்.பி.ஏ.பி., திட்டம் தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையேயான ஒப்பந்தத்தில், 'கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்த பிறகே, பி.ஏ.பி., திட்டத்தில் ஆனைமலையாறு அணை கட்ட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு அணை கட்டினால், பி.ஏ.பி., திட்டத்தில் 2.8 டி.எம்.சி., தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.ஆனால், கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கும் நிலையிலும், கால்வாய் பணி நிலுவையுள்ளதாக கூறி, ஆனைமலையாறு அணை கட்ட அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டை போட்டுள்ளது. பி.ஏ.பி., திட்டத்தில், நல்லாறு அணை கட்ட தமிழக அரசு சார்பில் முயற்சித்தபோது, 'பாசன திட்ட ஒப்பந்தத்தில் இடம் பெறாத, நல்லாறு அணையை கட்ட அனுமதிக்க முடியாது' என கேரளா மறுத்து விட்டது.

1,500 கிலோ தங்க விற்பனை !அக்ஷய திருதியை டாஸ்மாக்கு விற்பனை அமோகம் ! மக்கள் பணம் கோவிந்தா ?

அக்ஷய திருதியையை முன்னிட்டு, பொது மக்கள், நேற்று, ஆர்வமுடன், நகைக் கடைகளில், தங்க ஆபரணங்களை வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று, ஒரு நாளில் மட்டும், தமிழகத்தில், 1,500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், நேற்று, அக் ஷய திருதியை கொண்டாடப்பட்டது. சில ஆண்டுகளாக, அக்?ஷய திருதியை அன்று, தங்கம் வாங்கும் பழக்கம், பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.மே தினத்தையொட்டி, நேற்று முன்தினம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை. இதனால், நேற்று, ஒரு நாள் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். எனவே, அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க, பெரும்பாலானோர், நேற்று, அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு, நகைக் கடைகளில் முகாமிட்டிருந்தனர். மூட நம்பிக்கை கொண்ட மூடர்களின் கூடாரமாக தமிழகம் திகழ்கிறது. இன்னும் பத்தாயிரம் பெரியார்கள் வந்தாலும், தமிழர்களை திருத்த முடியாது. ஜெயாவிற்கு ஓட்டு போட்டதில் இருந்தே தமிழர்களின் அறிவிலிதனம் புலப்படுகிறது.

வெள்ளி, 2 மே, 2014

கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி


கால் பந்துக்காக உயிரை விடும் தொழிலாளிகள்
லகத்தில் ரசிப்பதற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன, என்று ரசித்து, ரசித்து வாழ்பவரா நீங்கள்? அந்த ரசனைக்காக பல பேர் சாக வேண்டியிருப்பதை அறிவீர்களா? உங்கள் தங்கக் கனவுக்காக பல பேர் சுரங்கத்தில் சாக வேண்டியிருக்கிறது. உங்களின் ஷாப்பிங்மால் அனுபவத்திற்காகவும், மெட்ரோ ரயில் அழகுக்காகவும் பல பேர் உயிர் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வரிசையில் 2022 – ல் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான நிர்மாணப் பணிகளில் இதுவரை 920  இந்தியத் தொழிலாளிகள் பலியாகி உள்ளனர்  என தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 18 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த வேலையில், வேலை முடிவதற்குள் இன்னும் 4,000 தொழிலாளர்கள் வரை உயிரிழக்கக் கூடும் என தொழிலாளர் அமைப்புகள் எச்சரிக்கின்றன.

தலைமன்னார் - தனுஷ்கோடி கடல் பகுதியை கடந்து ஆஸ்திரேலியப் பெண் சாதனை


 தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடற்பகுதியை கயாக் படகு மூலம் தனியாக கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சாண்ட்ரா ஹேலன் ராப்சன் படைத்தார்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த சாண்ட்ரா ஹேலன் ராப்சன் (45). இவர் கடல்மார்க்கமாக தனது கயாக் படகில் உலகை சுற்றி வருகிறார். 2011 மே மாதம் ஜெர்மனியில் இருந்து தனது கயாக் படகு மூலமாகவே பல நாடுகளைக் கடந்து தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு 2016 ஆம் ஆண்டிற்குள் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்திய - இலங்கை அரசின் அனுமதியுடன் வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து புறப்பட்ட ஹேலன் ராப்சன் மாலை 4.15 மணியளவில் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவில் அருகே வந்தடைந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் : மே 26-ல் ஆஜராக தயாளு, ராசா, கனிமொழிக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்


தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம்
தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம்
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரும் மே 26-ல் ஆஜராகுமாறு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 10 பேர் மீதும், கலைஞர் டிவி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

MBA படித்த 18 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை ! அதிர்ச்சி புள்ளி விவரம்


எம்.பி.ஏ. மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் குறித்து இரண்டாம் நிலை
சென்ற ஆண்டைவிட 45 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பிசினஸ் ஸ்கூல்களில் அதிரடி சர்வே நடத்தியது அசோசெம். அதில், எம்.பி.ஏ. படித்தவர்கள் 18 சதவீதம் பேருக்குத்தான் இந்தியாவில் வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வெறும் பட்டத்தோடுதான் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது. மேலும்  பிசினஸ் ஸ்கூல்களில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கான சம்பளமும்
இதுகுறித்து, அசோசெம்மின் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில், ''பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, புதிய திட்டங்களின் தேக்கநிலை, அடிப்படை கட்டுமானம், ஹோட்டல், நிதிச்சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை வர்த்தக துறைகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாதது போன்ற காரணங்களால் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

அக்ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் கான்சர் வரும் ?

அட்சய திருதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக் கடைகளில் திருவிழா போல் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறந்து இருந்த காரணத்தால் விடிய விடிய மக்கள் நகை வாங்கிக் சென்றனர். அட்சயா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாது என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளை தீபாவளி, தை பொங்கலைப்போல இதை ஒரு பண்டிகையாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் பொதுமக்கள்.
tamil.oneindia.in
மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லை. மார்வாடிகளும் மலையாளிகளும் இந்த அக்ஷய திருதியை என்ற மிகப்பெரிய ஹம்பக்கை தமிழ்நாட்டில் விதைத்து விட்டனர், சென்ற ஆண்டு லலிதா ஜுவலறி உரிமையாளர்கள் இந்த அக்ஷய திருதியை என்ற மூட நம்பிக்கையை பற்றி முழுபக்க விளம்பரம் கொடுத்திருந்தனர். யார் என்ன சொன்னாலும் மூட நம்பிக்கையில் இருந்து தமிழ் மகா ஜனங்களை மீட்கவே முடியாது, அக்ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் கான்சர் வரும் என்று யாராவது பிராசாரம் பண்ணுங்களேன் ,

குண்டுவெடிப்பு விசாரணையிலும் ஜெயலலிதாவின் சுயநல அரசியல் தந்திரம் !

சென்னை : மத்திய அரசுடனான தமிழக அரசின் மோதல் போக்கு காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு இளம் பெண்ணின் உயிரை பலி கொண்டதுடன், 14 பேர் படுகாயம் அடைய காரணமான குண்டுவெடிப்பின் விசாரணையிலும் மாநில அரசின் செயல்பாட்டால் சிக்கல் எழுந்துள்ளது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுடன்
இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக கருத மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து , தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியுடன் கையாள மத்திய அரசு நினைக்கிறது.ஆனால் தமிழக அரசோ, வெடிமருந்து சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்காகவும், கொலை மற்றும் ரயில்வே பொருட்களை சேதப்படுத்திய குற்ற வழக்குகளாகவும் பதிவு செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது.  தேசிய புலனாய்ப்பு அமைப்பின் விசாரணை தேவையில்லை என மறுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். /// ஒருத்தர் தானே, அதுவும் தமிழ்நாட்டு ஆள் இல்லையே, அம்மா ஏன் கவலை பட போகிறார், இன்னமும் எத்தனை குண்டுகள் வெடித்தாலும் கூட ஜெயா கவலை படமாட்டார், மத்திய அரசுடன் இவரின் ஈகோ மோதல் தொடரும், ஜெயா ஆளும் மண்ணில் தீவிரவாத தாக்குதல் என்பது தனக்கும் தனது ஆட்சிக்கும் இழுக்கு தலை குனிவாக கருதுகிறார் போலும், ஆகையால் இந்த நடவடிக்கை, ஆனால் இதில் பங்களூரு மற்றும் தமிழ்நாடும் சம்பந்தபட்டிருப்பதால், இதை மத்திய அரசு விசாரிப்பதே நலம்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: அமலாக்கப்பிரிவு அதிகாரி இடமாற்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை!


டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணை நடத்தி வந்த அமலாக்கப்பிரிவு அதிகாரி ராஜேஷ்வர்சிங்கின் இடமாற்றத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரிடம் ஓரிருநாட்களில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட இருக்கின்றன.  இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததற்கு ஆதாயமாக கலைஞர் டிவி ரூ200 கோடி பெற்றது என்ற புகாரில் அமலாக்கப் பிரிவு அண்மையில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பட புரமோஷனிலும் நயன்தாரா அலம்பல் ! கடுமையான வெயிலில் நடித்ததால் உடலில் நீர்சத்து குறைந்து எனக்கு மயக்கம் !

புரமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற புகார் எழுந்ததையடுத்து
படம் தொடர்பாக பேட்டிகள் அளித்து வருகிறார் நயன்தாரா. அதிலும் அலம்பல் செய்வதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.படத்திற்கு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதையடுத்து ஹீரோயின்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சேகர் கம்முலா இயக்கிய ‘நீ எங்கே என் அன்பே’ (தெலுங்கில் அனாமிகா) பட ஆடியோ விழாவை  ஹீரோயின் நயன்தாரா புறக்கணித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘விரைவில் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பேன்‘ என்று நயன்தாரா பேட்டி அளித்தார். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி நடத்த போதிய அவகாசம் இல்லை என பட குழுவினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இணையதள மீடியாவை தொடர்பு கொண்டு நயன்தாரா பேட்டி அளித்து வருகிறார். ‘ஜன நெரிசலில் கேமராவை மறைத்து ஷூட்டிங் நடத்தினார்கள். கடுமையான வெயிலில் நடித்ததால் உடலில் நீர்சத்து குறைந்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. ஒவ்வொரு காட்சியும் 2 முறை படமாக்கப்பட்டது என்று படத்தில் நடித்த அனுபவத்தை குறைகளாக சொல்லி வருகிறார் நயன்தாரா. இதை அறிந்து டைரக்டர் சேகர் கம¢முலாவும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். - See more tamilmurasu.org/

வாரணாசியில் விஸ்வரூபம் எடுத்த அர்விந்த் கேஜ்ரிவால் !


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்

வாரணாசி, ஏப். 30- மோடி வாரணாசி தொகுதியில் நிற்கப்போகிறேன் என் றதும் கெஜ்ரிவால் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று அறிக்கை விட்டார். அறிக்கை விட்டதும் இல்லாமல், டில்லி தேர்தல் முடிந்த கையோடு தனது பரி வாரங்களோடு வாரணாசி சென்றுவிட் டார். நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், போட்டியிடும் பெரும்பாலானோர் பிரபலமாக இருப்பதால் கெஜ்ரிவால் வந்து பிரச்சாரம் செய்யவேண்டாம்; நீங்கள் வாரணாசியில் இருந்து முழுவது மாக மோடிக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்று அனை வரும் கூறிவிட, கெஜ்ரிவால் எந்த ஒரு தயக்கமும் இன்றி முழுமையாக பிரச் சாரத்தில் இறங்கிவிட்டார். 

வாசிக்கும் ஆர்வம் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது ! சென்னைப் புத்தகச் சங்கமம்


சென்னைப் புத்தகச் சங்கமத்தின் மூலம்
வாசிக்கும் ஆர்வம் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது
பரிதா நாயக் என்.பி.டி இணை இயக்குனர்

சென்னை ஏப். 30-  சென்னை புத்தகச்சங்கமத்தில் 8ஆம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா இணை இயக்குனர் பரிதா நாயக் அவர்கள் புத்தககண்காட் சியை பார்வையிட்டார். அரங் குகள் அனைத்தையும் பார் வையிட்ட பிறகு அவர் செய் தியாளர்களிடம் கூறியதாவது.
சென்னையில் ராயப் பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திட லில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்கும் சென்னை புத்தகச் சங்கமம் கோடைவிடுமுறை யில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட மக்களின் அறிவுத்தேடலுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ் கிறது. கடந்த ஆண்டு சென்னை புத்தகச்சங்கமத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து இந்த ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் நாங்கள் இணைந்து பெரிய அளவில் நடத்த ஏற்பாடு திட்டமிட்டு இந்த சென்னை புத்தகச்சங்மம் 2014 தற் போது நடந்து வருகிறது.

மே தினம் ! “அப்படின்னா என்ன?” ஊனமான சலவைத் தொழிலாளர்கள் !

கொள்ளிடம் ஆற்றில் தொட்டி கட்டி சலவை செய்யும் தொழிலாளர்கள்.கொள்ளிடம் ஆற்றில் தொட்டி கட்டி சலவை செய்யும் தொழிலாளர்கள்.
பிறப்பிலேயே ஊனம் தவிர்க்க இயலாதது. விபத்தால் ஏற்படும் ஊனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக அன்றா டம் உழைப்பதால் ஏற்படும் ஊனத்தை தவிர்க்க வழியின்றியும், அதற்கென மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொள்ள முடியாமலும் ஒரு சமூகம் தவிக்கிறது.
ஆற்றில் கை வைத்தால்தான் சோற்றில் கை வைக்கமுடியும்…
இந்நிலை திருச்சி அருகே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போன்ற பகுதியில் இருக்கும் அழகிரிபுரத்தில்தான். இங்கு 160-க்கும் அதிகமான சல வைத் தொழிலாளர்கள் குடும்பத் துடன் வசிக்கின்றனர்.

தனியார் எம்பிபிஎஸ் சீட்டுக்கு ரூ.80 லட்சம்?- புகார் ?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட்டுக்காக 80 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில் லட்சக் கணக்கில் நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீத (383) இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீதம் (2,172) இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மோடி:BJP ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம் !

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம் என
நரேந்திரமோடி அறிவித்தார்.
தெலுங்கானா விவகாரம்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற இடத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராஜம்பேட்டை தொகுதியில் பா. ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி புரந்தேசுவரியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கினார். அவர் கூறியதாவது:–
டெல்லியில் தாய், மகனை கொண்டு அமைந்துள்ள காங்கிரஸ் அரசு வாய்ப்பு வந்தபோது, தெலுங்கு மக்களை அவமதித்துவிட்டது. அவர்கள் ஆந்திராவை பிரித்து சீமாந்திராவையும், தெலுங்கானாவையும் உருவாக்கி விட்டார்கள். ஆனால் இரு தரப்பு மக்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் கனிமொழி, ராசாவுக்கு மீண்டும் சிக்கல்

2ஜி ஸ்பெக்ட்ரம்  வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கடந்த வாரம் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட கனிமொழி, ராசா மற்றும் எட்டு பேருக்கு மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜாமீன் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிபதிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்ட கனிமொழி 193 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். மேலும், இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐயாலும் இவர் விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கிற்காக 15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ராசா 2012ஆம் ஆண்டு மே மாதம் ஜாமீனில் வெளிவந்தார்.

ஏற்கனவே பிரதமர் ஆகிவிட்டது போன்ற கனவில் மோடி ! Right to dream !


தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே பிரதமரானதாக எண்ணிக்கொள்கிறார் மோடி: சோனியா காந்தி
உத்திரப் பிரதேச மாநிலம் பைசாபாத், பல்ராம்பூரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே பிரதமரானதாக எண்ணிக்கொள்கிறார் மோடி. பதவியைத் தேடும் வேட்கையுடன் மோடி இருக்கிறார். ஊழல் புகார்களில் சிக்கிய எத்தனை அமைச்சர்களை நரேந்திர மோடி நீக்கினார்.
மோடி அனைத்து வளங்களும் ஒரே கையில் வர வேண்டும் என்றும் தாமே அதிகாரத்தின் ஒட்டுமொத்த மையம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த நாட்டின் மக்களே தேசத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பர் என்பதை அவர் மறந்துவிட்டார்.
நரேந்திர மோடி தனக்குத்தானே பிரதமராக நினைத்து, அதை அறிவித்துக் கொண்டு, தான் ஏற்கெனவே இந்த நாட்டின் பிரதமர் ஆகிவிட்டதாக நடந்துகொள்கிறார்.
முடிவுகள் எல்லாம் வந்துவிட்டதுபோலும், அவர் முள்ளின் மீது அமர்ந்திருப்பதுபோலும் ஒரு தோற்றத்தை மோடி ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு கூறினார். 

Chennai வெடித்தது செல்போன் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டா?


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று குவஹாத்தி
எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்தது, செல்போன் ரிமோட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களும் விசாரணையில் குதித்துள்ளனர். விசாரணையின் இறுதியில்தான் வெடித்தது என்ன மாதிரியான குண்டு என்பது தெளிவாகத் தெரிய வரும்.   நேற்று ரயிலில் வெடித்த குண்டு குறைந்த சக்தி கொண்டது என்பதால்தான் பெரிய அளவில் விபரீதமோ, சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஒரு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே சதிகாரர்கள் இந்த குண்டுகளைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் பயத்தை விதைக்க முயன்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

Pakistan ISI ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் கைது ! கள்ள நோட்டுகள் பறிமுதல் !

ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் கைது: ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்
ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேன் கடந்த 29ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் முகமது சலீம், சிவபாலன் ஆகிய இருவரை போலீசார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் வீடுகளில் இருந்து ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.nakkheeran.in

வியாழன், 1 மே, 2014

நெருக்கடி நேரத்தில் ஜெ., கொடநாடு சென்று விட்டார் ! குண்டுவெடிப்பை தவிர்த்திருக்கலாம் 1

சென்னை: கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் உளவாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் சரியான விசாரணை நடத்தியிருந்தால் சென்னையில் இன்று நடந்த குண்டுவெடிப்பை தடுத்திருக்கலாம் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை குண்டு வெடித்தது. இதில் பெண் ஒருவர் பலியானார். தமிழகத்தை சேர்ந்தவர் யாரும் இதில் சிக்காமல் தப்பினர். 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தனது கண்டனத்தில் இது கோழைத்தனமானது, தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியின் வெளிப்பாடே இந்த சம்பவம் என்று கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ், ம.தி.மு.க,. மற்றும் இடதுசாரி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் ஏறிய வடமாநில பயணி மீது திரும்பிய போலீசின் சந்தேகம் !


சென்னை: கவுகாத்தி ரயிலில் குண்டுவெடித்த பெட்டியில் தவறான செல்போன் எண்ணைக் கொடுத்து முன்பதிவு செய்திருந்த வடமாநில மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை சுமார் 7.25 மணியளவில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர். மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.  இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி, குண்டுவெடித்த பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் விபரங்களை போலீசார் சரி பார்த்தனர். அதில் வட மாநில முகவரி கொடுத்து முன்பதிவு செய்த ஒருவரின் செல்போன் எண்ணை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்நபர் பெங்களூர் ரயில் நிலையத்தில் மற்ற பயணிகளுடன் ரயிலில் ஏறுவது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது. அந்த மர்ம நபர் யார் , அவருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைக்காக பெங்களூர் போலீசார் சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக தனது பையை எடுக்க வந்த பயணியை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

இந்தியர்களை பட்டினியால் சாகடித்த கவர்னர் மன்றோ ! கொங்குநாடும் மன்றோவும் Jeyamohan.


சென்னையில் கோட்டைக்குள் தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலை சுற்றுலா அடையாளங்களில் ஒன்று. அச்சிலையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இப்போது சிலை இருக்கிறதா என்று தெரியவில்லை.புகழ்பெற்ற பிரிட்டிஷ் சிற்பியான பிரான்சிஸ் சாண்ட்ரே [ Francis Leggatt Chantrey] யால் செதுக்கப்பட்ட அழகிய சிலை இது. மன்றோ குதிரையின் வெறும் முதுகில் பயணம் செய்ய விரும்பியவர் என்பதனால் சேணமற்றகுதிரைமேல் அமர்ந்திருப்பதாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மன்றோ இருந்தபோதே அமைக்கப்பட்ட சிலை என்பதனால் குதிரை கால்களை மண்ணில் ஊன்றி நின்றிருக்கிறது.அனறைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சீருடையின் கம்பீரமும் மன்றோவின் ஆளுமையின் நிமிர்வும் வெளிப்படும் சிலை இது

சர் தாமஸ் மன்றோ பிரிட்டனில் கிஸாஸ்கோ நகரில் 1761ல் பிறந்தவர். தந்தை அலகஸாண்டர் மன்றோ ஒரு வணிகர்.தாய் மார்கரெட் ஸ்டார்க். அவர்களின் குடும்பம் புகையிலை வணிகம் செய்துவந்தது. தாய்வழியில் தாத்தா மருத்துவர். சிறுவயதில் அம்மை வந்து அழகிழந்த மன்றோ அப்போதே செவித்திறனையும் பெரும்பாலும் இழந்திருந்தார்.

உலக பொருளாதாரம்: ஆறு ஆண்டுகளில் இந்தியா 10-லிருந்து 3-ஆவது இடம்: உலக வங்கி

உலக பொருளாதாரத்தில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா, ஆறு ஆண்டுகளில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கு மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
இந்த வரிசையில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2011-ஆம் ஆண்டு 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக உள்ளது.

சென்னை: ஐஎஸ்ஐ உளவாளி கைதுக்குப் பின் வெடித்த குண்டு காரணம் என்ன?

சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளிக்கும், இந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.15 மணிக்கு இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் ஜாகீர் ஹூசேன் என்ற ஐஎஸ்ஐ உளவாளியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அண்ணா மேம்பாலம், அமெரிக்க தூதரகம் ஆகியவற்றை தாக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இலங்கையில் இருந்து கடல்வழியே தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதற்காகவே சென்னையின் முக்கிய இடங்களை அவன் புகைப்படம் எடுத்துள்ளான். சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறையினரின் எச்சரிக்கைக்குப் பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் ஹூசைன் கைது செய்யப்பட்டான். உளவாளியின் கைதுக்குப் பின்னர், குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால், சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பிற்காக காரணம் இதுவரைக்கும் தெரியவில்லை. இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களும், மக்கள் அதிகம் கூடும் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது : 6 பேர் பலி...?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில்
குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சப்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் எஸ் 4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.
6 பேர் பலி?:சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். dinakaran.com

வரிசையை மீறிய சிரஞ்சீவி; தடுத்த வாக்காளர் ! அவந்தாண்டா உண்மையான ஹீரோ !

சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் என்.ஆர்.ஐ. வாக்காளர்.சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் என்.ஆர்.ஐ. வாக்காளர்.
ஆந்திரப்பிரதேச மாநிலம் ஹைதராபாதில் வாக்களிப்பதற்காக வந்த மத்திய அமைச்சரும், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவருமான சிரஞ்சீவி தனது குடும்பத்தாருடன் வரிசையில் செல்லாமல் நேரடியாக வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றபோது அவர்களை ஒரு வாக்காளர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 25 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து சிரஞ்சீவியும் அவரது மகள் சுஷ்மிதாவும் வாக்களித்துச் சென்றனர்.
தெலங்கானா பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தாருடன் வாக்களிக்க வந்தார் சிரஞ்சீவி. அப்போது, வாக்காளர்களின் வரிசை மிக நீண்டதாக இருந்ததால், சிரஞ்சீவி, அவரது மனைவி, மகள் சுஷ்மிதா, மகனும் தெலுங்குப் பட ஹீரோவுமான ராம்சரண் தேஜ் ஆகியோர் வரிசையில் காத்திருந்தவர்களை முந்திக் கொண்டு நேரடியாக வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை ராஜா கார்த்தி காந்தா என்ற வாக்காளர் தடுத்து நிறுத்தினார். ஜனநாயகத்துக்கு சிரஞ்சீவி ஒரு வில்லன் நிஜமான ஹீரோ அல்ல , 

மதுவிலக்கு கேரள அரசு காட்டிய துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும்


மது விற்று வருவாய் ஈட்டுவது மன்னிக்க முடியாத பாவம் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடுள்ள அறிக்கையில்,
கேரள மக்களின் மன ஓட்டத்தை நன்றாக புரிந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, மாநிலத்தில் உள்ள 752 மதுக் குடிப்பகங்களில் 418 குடிப்பகங்களை அதிரடியாக மூட வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மதுப் பழக்கத்தை படிப்படியாக குறைக்கவும், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
கேரள மக்களையும் மதுவையும் பிரிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அம்மாநிலத்தில் மது நுகர்வு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே தனிநபர் மது நுகர்வு விகிதத்தில் முதலிடம் வகிப்பது  கேரளா தான். அதுமட்டுமின்றி, கேரள அரசியலையே ஆட்டிப்படைக்கும் சக்தி மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு உண்டு. கேரளத்தில் மதுவுக்கு ஆதரவாக இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்,  அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  குடிப்பகங்களை மூட உத்தரவிட்டதற்காக முதல்வர் உம்மன்சாண்டிக்கு  பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் அமெரிக்கா அணுகுமுறை மாறும் ?

புதுடில்லி:புதுடில்லி: மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், அமெரிக்கா அணுகுமுறை மாறும் என அந்நாடு கூறியுள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, ஸ்டீபன் சோகேன் கூறியதாவது:பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கொள்கைகளை பார்க்கும்போது, லோக்சபா தேர்தலுக்கு பின், இந்தியாவில் பெரிய அளவில் மாற்றம் வரும் என, தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரத்தில், மோடி, மாற்றத்தை ஏற்படுத்தலாம். அந்த நாட்டின் வெளியுறவு கொள்கையிலும், அது, எதிரொலிக்கலாம்.மோடி தலைமையிலான ஆட்சி அமைவதில், சில இடையூறு இருந்தாலும், சாதகமான அம்சங்களும் உள்ளன.எனவே, இந்தியாவில்,பா.ஜ., ஆட்சி அமைந்தால், அந்த நாட்டுடனான, அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் அணுகுமுறையும் மாறும்.இவ்வாறு, அவர் கூறினார்  dinamalar.com யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் அடிமைத்தனம் மாறபோவதில்லை , காங்கிரஸ் பின்பற்றிய அதே கொள்கையைத்தான் பிஜேபி யும் பின்பற்றும் , இதில் என்ன பெரிய மாற்றம் வரபோகிறது . முடிந்தால் இந்திய - அமெரிக்க அணுசக்தி கொள்கை உடன்பாட்டை முறிக்க முடியுமா ? ஏனென்றால் பிஜேபி தான் இதற்கு பெரிய எதிர்ப்பை காட்டினார்களே ?

ஆமாம்... அந்த பெண்ணை 'லவ்' பண்றேன்!': திக்விஜய் சிங் அதிரடி அறிவிப்பு

புதுடில்லி: காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், 'டிவி' சேனல்
நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுடன், தனக்கு உறவு உள்ளதாக, வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவர், திக்விஜய் சிங், 67. மத்திய பிரதேச மாநில முதல்வராகவும், பதவி வகித்த அனுபவம் உள்ளவர். இவரின் மனைவி ஆஷா, 58, புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு காலமானார்.சமீப காலமாகவே, பிரபல 'டிவி'யின் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுக்கும், திக்விஜய் சிங்கிற்கும் உறவு உள்ளதாக, இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இத்தனை நாட்களாக, இதுகுறித்து மவுனம் காத்து வந்த திக்விஜய் சிங், நேற்று இதை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட விஷயத்தில், மற்றவர்கள் மூக்கை நுழைக்க கூடாது.67 வயதானால் காதல் போய்விடுமா? அரசியல் தலைவர் காதலித்தால் தவறா? திக்விஜய் சிங் மிகவும் மென்மையான போக்கும் வளர்ச்சியை நோக்கிய குணமும் கொண்டவர். அவரின் மீது பழிகளை அள்ளி தூவ கூடாது.

புதன், 30 ஏப்ரல், 2014

காதலுக்காக மதம் மாற மாட்டேன்’ டைரக்டர் விஜய் உறுதி

அமலா பாலை மணப்பதற்காக கிறிஸ்தவ மதத்துக்கு மாற மாட்டேன் என்றார் இயக்குனர் விஜய்.டைரக்டர் விஜய், நடிகை அமலா பால் காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அமலா பால் கேரளாவை சேர்ந்தவர். கிறிஸ்தவர். விஜய் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இந்து. திருமணத்துக்கு முன்பாக விஜய்யை கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்று அமலா பால் வற்புறுத்தி வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் அதை விஜய் ஏற்கவில்லை.இதுகுறித்து விஜய் கூறியது:அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புகிறார்கள். அவற்றில் உண்மை இல்லை. காதலிக்கும்போது மதம் பார்த்து காதலிப்பதில்லை. அப்படி இருக்கும்போது திருமணத்துக்காக மதம் மாறுகிறோம் என சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும். இது முழுக்க முழுக்க கலப்பு திருமணம்தான். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. தற்போதைக்கு சைவம் பட வேலைகளில் பிசியாக இருக்கிறேன். படம் விரைவில் ரிலீசாகும். அதற்கு பிறகு ஜூன் மாதம் எங்கள் திருமணம் நடைபெறுகிறது. ஹனிமூனுக்கு எங்கு செல்கிறீர்கள் என கேட்கிறார்கள். அது பற்றி முடிவு செய்யவில்லை. - See more at: tamilmurasu.org

கோச்சடையான் பில்டப் தாங்க முடியல்ல ! காசு துட்டு உதார் உல்டா அலப்பரை ரஜனி !

ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘கோச்சடையான்’
. மோஷன் கேப்சர்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய படமாக்கிய சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் என்.டி. டிவி இந்த வருடத்திற்கான சிறந்த தொழில்நுட்ப பனோரமா விருதுக்கு சௌந்தர்யாவை தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சௌந்தர்யாவுடன் அவரது அம்மாவான லதா ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்கள். சௌந்தர்யாவுக்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் விருது வழங்கி கௌரவித்தார். maalaimalar   இது போதல்லையா ? இத்தையும் கேளுங்க இந்திய சினிமா வரலாற்றிலேயே கோச்சடையன் போல ஒரு படம் வந்ததே இல்லையாம் சத்யஜித்ரெ போன்ற மறைந்த மாமேதை இயக்குனர்கள் கூட சௌந்தர்யாவின் திறமையில் பத்தில் ஒன்றுகூட கொண்டிருக்க வில்லை என்று ஒட்டு மொத்த இந்தியாவே கூறுகிறது ! ஹாலிவூட்டில் இருந்து சவுந்தர்யாவுக்கும் ரசனிக்கும் அழைப்புக்கு மேல் அழைப்பாக வந்து கொண்டிருக்கிறது இனி என்ன தமிழனின் சகல துன்பங்களும் தீர்ந்து இந்தியாவும் வல்லரசாகி விடும் எல்லாம் கோச்சடையன் மகிமை  

Pakistan : மோடி இந்திய பிரதமரானால் அமைதி குலையும் !

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என கடந்த சனிக்கிழமை குஜராத் செய்தி சேனல் ஒன்றிற்கு  மோடி பேட்டி அளித்த போது கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான்  தாவூத் எங்கு வாழ்ந்து வருகிறார் என்பதை முதலில் மோடி முடிவு செய்யட்டும் என தெரிவித்தார். மேலும் தாவூத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்துவோம் என கூறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் அளவிற்கு பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல  என கடுமையாக பதிலளித்துள்ளார்.
மேலும் மோடி தனது எல்லையை கடந்து பாகிஸ்தான் மீதும் முஸ்லீம்கள் மீதும் அவர் கொண்டுள்ள பகைமையை வெளிப்படுத்துகிறார். அவர் இந்திய பிரதமரானால் அமைதி குலையும் என கூறியுள்ளார்.dinamani.com

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு: கைதான உளவாளி வாக்குமூலம்

சென்னை மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர்.அவனிடம் இருந்து சேட்டிலைட் போன், இந்திய வரைபடம், அமெரிக்க டாலர், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை தமிழரான இவன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. இவர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு பல முறை வந்து சென்றுள்ளான். ஐ.எஸ்.ஐ. உளவாளியான தீவிரவாதி ஜாகிர்உசேன், கியூ பிரிவு போலீசில் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:–
சென்னை மற்றும் பெங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்று வதற்காக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் என்னிடம் பேசி சம்மதிக்க வைத்தார்.
இதற்காக எனக்கு பெரிய அளவில் பண உதவிகள் செய்வதாக அவர் ஆசை காட்டினார். ஒரே ஒரு குழுவால் மட்டுமே குண்டு வெடிப்பு போன்ற நாசவேலைகளை செய்து விட முடியாது. இதனை செயல்படுத்துவது எப்படி? என்பது பற்றி பல கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் முதல்கட்டமாக எனக்கு தீவிரவாதிகளை சென்னை மாநகருக்குள் அழைத்து வந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்யும் பணிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கு முன்னதாக கள்ள நோட்டுகளை மாற்றிக் காட்டும் பரீட்சையும் எனக்கு வைக்கப்பட்டது.
இதன்படி பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நான் கடந்த 18–ந்தேதி சென்னைக்குள் ஊடுருவினேன்.

Facebook மூலம் விபத்தில் நினைவு இழந்தவரை குடும்பத்துடன் இணைத்த டாக்டர்கள்!

கடந்த மார்ச் மாதம் இரவு 8 மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விபத்தில் அடிப்பட்ட ஒருவர் அழைத்து வரப்பட்டார். உயிருக்கு போராடிய அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்றனர் மருத்துவர்கள். உடனடியாக அவருக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்கப்பட்டது. மூளையில் இருபக்கமும் இரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் அறிந்தனர். இதையத்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இரத்தம் தேவைப்பட்டதால், கல்லூரி மாணவர்களிடம் ரத்தம் பெறப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சை செய்தனர்.
இருப்பினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவர் யார் என்று தெரிந்துகொள்வதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மருத்துவர்கள் பேசி பார்த்தனர். இரண்டு வாரம் கழித்து இந்தி மொழியில் பேசினால் அதனை புரிந்துகொண்டு அவர் கை, கால்களை அசைத்தார்.

ஒரு மாணவர் கூட பாஸாகாத 54 முன்னணி என்ஜினியரிங் காலேஜ்கள்... அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் உள்ள 54 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள், பள பளா கட்டடங்கள் என்று தமிழகத்தில் புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தரம் என்னவோ மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. இதனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது கடந்த வாரம் வெளியான அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள். அதன்படி, இந்த ஆண்டில் முதல் செமஸ்டரில் 54 கல்லூரிகளில் ஒருவர் கூட பாஸ் ஆகாத கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நித்யா மேனனிடம் பெண் இயக்குனர் அஞ்சலி மேனன் கெஞ்சல்

சென்னை: கால்ஷீட் தர மறுத்த நித்யா மேனனிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டு கெஞ்சினார் பெண் இயக்குனர்.‘வெப்பம், ‘180, ‘மாலினி 22 பாளையங்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவரிடம்  ‘பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டு இயக்குனர் அஞ்சலி மேனன் அணுகினார். ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டார்.

தயாளு அம்மாள், கனிமொழி, ராசா உள்பட 19 பேர் மீது இன்று விசாரணை !

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா 19 பேருக்கு எதிராக மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை பரிசீலிக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகும் தேதியை நிர்ணயித்து அதற்கான சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் துவங்கியது.

ஐதராபாத்: தெலுங்கானாவிலுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இத்தேர்தலுக்காக தெலுங்கானாவில் மொத்தம் 30,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 2 கோடியே 81 லட்சம் பேர் தங்களது வாக்கை பதிவு செய்ய உள்ளனர். ஆளுநர் நரசிம்மன் மக்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நக்சல் ஆதிக்கம் நிறைந்த 5 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நிகழ்வுகளை போலீஸார் ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து வருகின்றனர். dinakaran.com

ஜெர்மனியில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 18 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் !

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் ஜெர்மனி நாட்டு வங்கியில் கருப்புப் பணத்தை வைத்திருக்கும் 18 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அதில், பல்வேறு அறக்கட்டளை வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த போதிலும், அரசியல்வாதிகளின் பெயர்கள் ஏதும் இடம் பெறவில்லை. > "மத்திய அரசின் இந்தப் பட்டியல் மீது ஆலோசனை நடத்தி மே 1ஆம் தேதி முடிவெடுக்கப்படும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அறிக்கை தாக்கல்: "கருப்புப் பணத்தை வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து, ரஞ்சன் பிரகாஷ் தேசாய், மதன் பி. லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

பிரபுதேவா சம்பளம் ரூ.30 கோடி: இந்தி பட உலகம் அதிர்ச்சி

பிரபுதேவா சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம். இதனால் இந்திபட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேறு எந்த இந்தி இயக்குனரும் இவ்வளவு தொகை சம்பளம் வாங்கியதில்லையாம். இந்தி டைரக்டர் ரோஹித் ஷெட்டி வாங்கிய ரூ.20 கோடிதான் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. இப்போது அவரையும் பிரபுதேவா மிஞ்சி விட்டார். இவர் வாங்கும் சம்பளம் இந்தியில் முன்னணி கதாநாயகர்கள் சம்பளத்துக்கு இணையானது என்கின்றனர். தமிழ்ப்பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் இவ்வளவு தொகை சம்பளமாக வாங்கியது இல்லை. பிரபுதேவாவை இந்தி திரை உகம் பெரிய டைரக்டராக கொண்டாடுகிறது. இவர் இந்தியில் சலன்மான்கானை வைத்து ‘வாண்டட்’, அக்ஷய்குமாரை வைத்து ரவுடி ரத்தோர், கிருஷ்குமார், சுருதிஹாசன் ஜோடியாக்கி ராமையா வஸ்தாவையா, சாகித்கபூர், மோனாக்கி சின்ஹாவை ஜோடியாக்கி ஆர்.ராஜ்குமார், அஜய்தேவ்கானை வைத்து ஆக்ஷன் ஜாக்சன் படங்களை எடுத்துள்ளார். தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை டைரக்ட் செய்துள்ளார்.

ஏழை மக்களின் வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் திட்டம்: அரசு ஆய்வு

எரிபொருள் பயன்பாட்டிற்காக இந்தியாவில் தற்போது 59 மில்லியன் டன் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. இது இங்கு உபயோகப்படுத்தப்படும் டீசலைவிட சற்றே குறைவான அளவாகும்.கடந்த 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 47 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளில் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவர்களின் பயன்பாட்டிற்காக மானிய விலையில் அளிக்கப்படும் இந்த எண்ணெயில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிக பணத்திற்காக கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றது. இதனைத் தடுக்கவும், இதற்கான அரசு மானிய ஒதுக்கீட்டு செலவைக் குறைக்கவும் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணையை உபயோகிக்கும் பெரும்பான்மை வீடுகளில் சோலார் விளக்குகளைப் பொருத்தும் திட்டத்தை அரசு முன்வைத்துள்ளது.

அகிலேஷ் யாதவ்: 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர் ???


தேர்தலுக்கு பின்னர் மத்தியில் 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர் என்று அவரது மகனும், உத்திரப்பிரதேச முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ்,
மத்தியில் 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர். பலமுறை முதல் அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள முலாயம் சிங், நரேந்திர மோடியை விட அதிக அனுபவம் உள்ளவர். உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் ன்றார். nakkheeran.in

1,300 அடிவரை ஆழ்துளை அமைக்கும் அவலம் ! தமிழகத்தில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு போனது

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய அக்கறை காட்டாததால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. தண்ணீருக்காக, 1,200 - 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.'மழை இந்த வருஷமும் ஏமாத்திடுச்சே... தண்ணிக்கு அல்லாட வேண்டியது தான்...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், தமிழக மக்கள் கூறுவது வழக்கம். மழை பெய்யவில்லை என, வருத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், கொட்டிய மழைநீரையும் சேமிக்காமல், வீணடித்துவிட்டு, 'வருண பகவான் ஏமாத்திட்டாரு' என, குறைகூறுவது சரியல்ல.<குடிநீர் உள்ளிட்ட அனைத்து, தமிழக நீர் தேவைக்கும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை தான் பிரதானம். ஆண்டின் சராசரி மழை அளவு, 925 மி.மீ., என்றாலும், இந்த அளவை தமிழகம் எட்டிப் பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன.போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெய்யும் மழை நீரில், 40 சதவீதம் வரை, கடலில் வீணாக கலக்கிறது.  நிலத்தடி நீர் எந்தளவிற்கு குறைகிறதோ, அந்தளவிற்கு கடல் மட்டத்திலிருந்து நிலமும் கீழிறங்குகிறது என்று ஐ.நா சபையில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. புவி வெப்பத்தால், கடல் நீர் மட்டம் மேலோங்குகிறது. அதே போல, நிலத்தடி நீரை உருஞ்சுவதால், நிலம் கீழே செல்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரே வழி, இந்தியாவில் உள்ள எல்லா நதிகளையும் இணைப்பதுதான்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

பிரியங்கா காங்கிரசுக்கு ஆக்சிஜன் கொடுத்துவிட்டார் ! பிரியங்கா அலையில் சிக்கி பாஜக நிச்சயம் பெரும் பாதிப்பை ?


ரேபரேலி: தம்பி ராகுல் காந்தியை விட ரேபரேலி மற்றும் அமேதியில் அக்கா பிரியங்கா காந்திதான் அமர்க்களப்படுத்தி வருகிறார். இரு தொகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பிரியங்கா அலைதான். இந்த அலையில் சிக்கி பாஜகவினர் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். சாதாரணமான கைத்தறிப் புடவை, படு சிம்பிளான தோற்றம், எளிமையான, புத்திசாலித்தனமான பேச்சு, சொல்லும் விஷயத்தை தெளிவாகச் சொல்லுதல், குற்றச்சாட்டுக்களை ஆணித்தரமாக வைத்தல், குற்றச்சாட்டுகளுக்குப் பதிலிளிக்கும்போது தெளிவாக அதை விளக்குதல், அநாகரீகமாக பேசாமல் இருத்தல்.. என ஒரு தெளிவான தலைவருக்கு இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும பிரியங்காவிடம் நிரம்பி வழிவதால் மக்களிடையே ஏகோபித்த ஆதரவை அவர் பெற்று விட்டார்.  பிரியங்காவின் பிரமாதமான பிரசார ஸ்டைல், அவரது தம்பி ராகுல் காந்தியையே இரு தொகுதிகளிலும் ஓரம் கட்டி விட்டது. கூடவே மோடி அலையும் அடிபட்டுப் போய் விட்டது.

எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இந்தி நடிகர் மரணம்


ஹலோ ஹம் லல்லன் போல் ரஹே ஹெய்ன்,
‘பாபர், ‘மனோரஞ்சன் போன்ற படங்களில் நடித்தவரும், ராமாயணம் இந்தி சீரியலில் கும்பகர்ணனாக நடித்தவர் இந்தி நடிகர் ராகேஷ் தீவானா(45). இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
உடல் எடையை குறைத்தால் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நண்பர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் எடையை குறைக்க இரப்பையின் அளவை குறைக்கும் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி இவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பிறகு ராகேஷ் உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் அவர் திடீரென்று இறந்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் மாணவிகள் பாலியல் பலத்காரம் ! 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள்


லண்டன்,
மெற்படிப்புக்கு பெயர்போன லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் 12.200 கல்லூரி மாணவ மாணவியியர் பயின்று வருகிறார்கள் இதில் 43% மாணவிகள் அடங்குவர். கேம்பிரிட்ஜ் பல்கழகத்தில்  படித்து வரும் மாணவிகள் பாலியில் ரீதியாக துன்புறுத்தபட்டு வருவதாக புதிய சர்வே ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இதில் சில மாணவிகள் தட்டுதடுமாறி கற்பழிப்பு வரைக்கும் செல்வதாக இந்த சர்வே தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கபட்ட் மாணவிகள் போலீசிடம் போவதற்க்கு தயங்குவதாக கூறபடுகிறது.
2000 பேரிடம் இது பற்றி சர்வே எடுத்தபோது இது போன்ற புகழ்பெற்ற பல்கலைகழத்தில் இது போன்ற சம்வங்கள் நடப்பது சர்வசாதரணம் என்று தெரிவித்துள்ளனர்.

அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி என்று பேனர்கள்! சினிமா கனவுகாட்சிகளில் திருமணம் Never be reality !


தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் செல்வம், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன் எம்.பி. ஆகியோர் தேர்தலில் களம் இறங்கினர். தேர்தல் நாளன்று ஓரிரு சிறு, சிறு அசம்பாவித சம்பவங்களைத் தவிர அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்புக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திரைப்படங்களில் கனவுகாட்சிகளில் திருமணம் நடைபெறுவதாக காட்டப்பட்டால் பின்பு அக்காதல் தோல்வியடையும் என்பது பாமர ரசிகனுக்கும் தெரியும் !இதுவும் இந்த வகை போன்று தெரிகிறது ,

மோடியின் தொகுதியில் காங்கிரஸ் அனல் பறக்கும் பிரசாரம் !மோடிக்கு கடும் சவால் !

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வதோதராவில், அனல்பறக்கும் பிரசாரம், இன்று (ஏப்., 28) நிறைவடைகிறது. மோடிக்கு நெருக்கடி அளிக்க, இரு நாட்களாக காங்கிரசார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இந்த கோடையில் அனல் காற்று வீசும், இந்தியாவின் மேற்கு பகுதி நகரான வதோதராவில், நேற்று அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு நிகராக, கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.பிரதமர் வேட்பாளர் போட்டியிடுவதால், நாடு முழுவதும் கவனிக்கும் தொகுதியாக வதோதரா மாறி விட்டது. வதோதராவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, காங்., சார்பில் ராகுலுக்கு நெருக்கமானவரான மதுசூதன் மிஸ்திரி உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.நாடு முழுவதும் பிரசாரம் செய்த மோடி, தன் தொகுதியான இங்கு, ஒரே நாள் 20 நிமிடங்கள் மட்டும் பிரசாரம் செய்தார். எனினும் பா.ஜ., மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். மோடிக்கு கடும் நெருக்கடி தரும் விதத்திலும், ஓட்டு வித்தியாசத்தை குறைக்கவும், தீவிரமாக பணியாற்றுகிறது காங்கிரஸ்.

மிரட்டிய ஜெ.,: மிரண்ட அமைச்சர்கள் ! அடுத்தடுத்து ஆஸ்பத்திரியில் அடிமைகள் அனுமதி !

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தாலும், தமிழக அமைச்சர்களுக்கு
என்னவோ, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் தான், நிம்மதி கிடைக்கும் என, தெரிகிறது. தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.,வுக்கு பாதகமாக அமைந்தால், சில அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்களின் பதவி பறிபோகும் என்ற, அச்சமே இதற்கு காரணம்.கட்சியின் பொதுச்செயலரான, ஜெயலலிதா, இப்படி பதவி பறிப்பு மிரட்டலை, மறைமுகமாக விடுத்துள்ளதால், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் என, சிலருக்கு, ரத்தக் கொதிப்பு அதிகரித்துள்ளதாகவும், அதனால் தான் அடுத்தடுத்து, மருத்துவமனையில் சேர்ந்து, முழு உடல் பரிசோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
அம்மாவுக்கும் கோவிந்தா அடிமைகளுக்கும் கோவிந்தா  அம்மா வும் இந்த கும்பிடு சாமிகளும் தமிழக வளர்ச்சியை , விவசாயத்தை , தொழில் வளர்ச்சியையே ஏன் மொத்த தமிழகத்தையும் ICU யூனிட்டில் படுக்க போட்டு விட்டார்கள் ...எவ்வளவு சீக்கிரமாக அதிமுக ஆட்சிக்கு சங்கு ஊதுரமோ அப்பத்தான் தமிழகம் பிழைக்க வழி ...

திங்கள், 28 ஏப்ரல், 2014

மோடியை கைது செய்ய ஆணித்தரமான ஆதாரம்: சிபல் ! இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் case


குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கில் மோடி மற்றும் அமித் ஷா மீது ஆணித்தரமான ஆதாரம் உள்ளபோதும் அவர்களை கைது செய்யாமல் பாதுகாப்பது யார்? என்று கபில் சிபல் கேள்வியெழுப்பினார். அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:- இன்று நாடு முழுவதும் பல்வேறு வகைகளை பற்றி பேச்சு நிலவி வருகிறது. ஆனால் இது குஜராத்தின் என்கவுண்டர் வகைகளில் ஒன்றாகும். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்சாராவுக்கும், அம்மாநில உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் என்கவுண்டருக்கு முன்னும், என்கவுண்டரின் போதும் என்ன நடந்தது என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது. பல்வேறு காவல்துறை அதிகாரிகளும் தங்கள் விரல்களை இவர்களை நோக்கி காட்டியபோதும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வன்சராவின் ராஜினாமா கடிதத்தில், களத்தில் இருந்த அதிகாரிகளான தாங்கள் அரசின் ரகசிய உத்தரவை செயல்படுத்தியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் இது மோடியின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்கமுடியாது. மேலும் சிபிஐ மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்படுவதாக கூறப்பட்டாலும், அது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை. இவ்வாறு கபில்சிபல் கூறினார். 

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உள்பட 683 பேருக்கு தூக்கு தண்டனை


 எகிப்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த போராட்டங்களின்போது, படுகொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மோர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உட்பட 683 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, ராணுவத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு தலைநகர் கெய்ரோ உள்பட பல இடங்களில் கடந்த வருடம் போராட்டம் நடத்தப்பட்டது. அவரது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மோர்சிக்கு ஆதரவான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் 529 பேருக்கு கடந்த மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஏர்செல் -மேக்ஸிஸ் வழக்கிலிருந்து தப்புகிறார் தயாநிதி மாறன்? கைவிட்டது மலேசியா..

Dayanidhi Maran's illegal telephone exchange was ... come to know about the 323 lines being provided at Maran's house.டெல்லி: ஏர்செல் - மேக்ஸிஸ் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிரான இந்த வழக்கில், தயாநிதிக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்யும் திட்டத்தை சிபிஐ கைவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. போதுமான ஆதாரங்கள் கிடைக்காததாலும், மலேசியாவிலிருந்து இந்த வழக்கு தொடர்பாக எந்தவிதமான பதிலும் வராததாலும் குற்றப்பத்திரிக்கையைக் கைவிட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதுள்ள ஆதாரங்களை வைத்து தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்வது சரியாக இருக்காது என்றும் சிபிஐ கருதுகிறதாம்.
அதேசமயம், சிபிஐயின் விசாரணைக் குழு தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டோர் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்ய ஆர்வமாக உள்ளனராம். ஆனால் சிபிஐ உயர் அதிகாரிகளோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனராம்.சொந்த வீட்டில் 323 lines  டெலிபோன் இணைப்புக்களை திருட்டு எக்ஸ்சேஞ் நடத்தியதிலும் தப்பி விடுவாரா ?

பத்மநாபா கோவில் கொள்ளை : அடிமைகளை கொண்டு சம்பாதித்த சொத்துக்கள் நாட்டுடமையாக்க படவேண்டும்


கோபால் சுப்ரமணியம்அடிமை உழைப்பினால் விளைந்த இந்த செல்வம் அரச பரம்பரைக்கோ இல்லை, பரதேசி பத்மநாபசாமிக்கோ சொந்தமானது இல்லை. சுரண்டப்பட்ட அடிமைகளுக்கு தான் சொந்தம். இப்போது கேரளம் மற்றும் இந்திய உழைக்கும் மக்களுக்கு தான் அவை சொந்தம்.சிவன் சொத்து குல நாசம்”, என்பது ‘இந்து மத காவலர்களுக்கு’ கிடையாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சொத்துக்களை அதன் அறங்காவலர்களான மன்னர் குடும்பத்தினரே கொள்ளையடித்து வருவது உச்சநீதிமன்றத்தின் விசாரணை மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் கோவிலின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து மன்னர் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான ஐந்து நபர் கமிட்டிக்கு நிர்வாக அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலின் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு முன்னாள் மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் விநோத் ராயை நியமித்த நீதிமன்றம், பத்மபநாபா கோயிலின் செயல் அதிகாரியாக குருவாயூர் கோவில் தேவஸ்தானத்தில்  முன்னாள் ஆணையரான சதீஷை  நியமித்திருக்கிறது.
பத்மநாபா கோவில்
பத்மநாப சாமி கோவில்பத்மநாபசாமி கோவிலின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்ற கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரச குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு வழக்கில், முன்னாள் அரசு வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) கோபால் சுப்பிரமணியத்தை நீதிமன்ற நண்பனாக நியமித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி ஒரு மாதத்திற்கும் மேல் கோவிலில் ஆய்வு செய்து அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. அடிமைகளை கொண்டு சம்பாதித்த சொத்துக்கள் நாட்டுடமையாக்க படவேண்டும்

அட்சய திருதியை மோசடி ! மலையாளிகளும் மார்வாடிகளும் கண்டு பிடித்த Trick


​​ஹிந்து மற்றும் ஜெயின் பிரிவினர்கள் வருடத்தில் உள்ள நான்கு புனித நாள்களில் ஒன்றாக அட்சய திரிதியைக் கருதுகிறார்கள். இந்த தினம் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த தினத்தைக் குறிக்கிறது.
மேலும் இந்த தினத்தில்தான் வேத வியாசரும், விநாயகரும் சேர்ந்து இதிகாச புராணமான மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. “அட்சய” என்பதற்கு சமஸ்கிருத மொழியில் என்றும் குறைவில்லாத என்று ஒரு பொருள் இருக்கிறது. இந்த நாள் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும். இந்த நாள் நாளடைவில் ஒருவர் புதிதாக தொழில் தொடங்குவது, வீடு ​வாங்குவது​, மொபைல் போன்​ 

சவுதிஅரேபிய அரசுக்கு எதிராக இளவரசி போர்க்கொடி



வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் மன்னர் ஆக அப்துல்லா இருக்கிறார். இவரது மூத்த மகள் இளவரசி சகர் (42). இவர் மற்றும் 3 சகோதரிகளும் ஜெட்டா நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர் தோன்றி பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளி யிடப்பட்டது. அதில் அவர் மன்னருக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார்.
இந்த சிறையில் இருந்து எங்களை விடுவித்து சுதந்திரம் மற்றும் உரிமையை பெற்று தாருங்கள். அது உங்களது (மக்களின்) போராட்டத்தாலும், புரட்சி யாலும்தான் முடியும். நாங்கள் உங்கள் வழி நடப்போம்.
உங்களை விட்டு செல்ல மாட்டோம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்று கூறியுள்ளார் www.maalaimalar.com/

சகாயம் IAS : 1999 - 2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்


சென்னை: என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் சகாயம் ஐஏஎஸ். மனுக்கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள அங்குசம் என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்தக் காட்சி, தேசிய கீதம் இசைத்த பிறகு முடிந்தது. படம் முடிந்ததுமே, அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும் 'தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள்', என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கோ ஆப்டெக்ஸ் இயக்குநர் சகாயம் ஐஏஎஸ் பங்கேற்றார்.
இங்கே இந்த நூல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நேர்மையான கருத்தை இந்த சமூகத்தில் விதைக்க முடியுமா என்று மனுக்கண்ணன் கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன். லஞ்சம் என்பது எழைகளுக்கு எதிரானது. பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் விரோதமானது. தேசத்துக்கு தடையானது.

மதவாத நாடானால் இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது: மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா!


ஸ்ரீநகர்: இந்தியா மதவாத சக்திகளுக்கு போய் மதவாத நாடாக மாறினால் ஜம்மு காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருபகுதியாக இருக்காது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை ஏற்க மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று பேசுகிறார்கள்.. அவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.. அப்படி இந்தியா ஒரு மதவாத நாடாக மாறினால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்காது. மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா! அப்படி நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போடுகிறவர்கள் ஆற்றிலோ கடலிலோ குதித்து சாக வேண்டியதுதான். மதவாத சக்திகளிடம் இருந்து எங்களை காப்பாற்றி நாட்டை முன்னேற்றபாதைக்கு அழைத்துச் செல்ல கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.

ராபர்ட் வதேராவின் நில முறைகேடு வீடியோவை வெளியிட்டது பாஜக !


ராபர்ட் வதேரா மீதான நிலஅபகரிப்பு புகார்களுக்கு சோனியாகாந்தி குடும்பத்தினர் பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. ராபர்ட் வதேராவின் நில முறைகேடு தொடர்பாக 8 நிமிடங்கள் கொண்ட வீடியோ மற்றும் 6 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பாஜகவின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், குஜராத் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் பிரியங்கா காந்தி, தன்னுடைய கணவர் ராபர்ட் வதேராவின் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து பதில் சொல்ல வேண்டும். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராபர்ட் வதேரா வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்களில் மட்டும் ராபர்ட் வதேரா நிலம் வாங்குவது ஏன்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எவ்வாறு ப.சிதம்பரம் காப்பாற்றப்பட்டாரோ, ரயில்வே ஊழல் வழக்கில் எவ்வாறு பவன்குமார் பன்சால் காப்பாற்றப்பட்டாரோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வரகிறாரோ, அதேபோல் ராபர்ட் வதேராவையும் காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு மேல் போபர்ஸ் வழக்கு குறித்து நான் பேசவில்லை என்றார்.
கடந்த சில நாட்களாக உத்திரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, குஜராத் மாநில வளர்ச்சி குறித்து விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ஆளு முகமே சொல்லுது !போயும் போயும் பிரியங்காவுக்கு இவன்தான் கிடைத்தானா ?