புதன், 3 பிப்ரவரி, 2016

கிராம மக்களுடன் சாப்பிட்ட ராகுல்


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆந்திரபிரதேச மாநிலம்
ஆனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்ட்லா பள்ளிக்கு சென்றார். காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். இந்த திட்டத்தை காங்கிரஸ் அரசு கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முதல் முறையாக இந்த திட்டத்தை இங்கு தான் தொடங்கி வைத்தனர் என நினைவுகூர்ந்தார்.
நாட்டில் வறுமையை அகற்ற இந்த திட்டம் ஒரு மைல்கல்லாக அமைந்தது என கூறினார். மேலும் கிராம மக்களுடன் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை: