புதன், 20 ஏப்ரல், 2016

ஜெயலலிதா பிரசாரத்தில் தொடரும் உயிர் பலி : சேலத்தில் ஒருவர் சாவு..

சேலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர், வெயில் கொடுமை தாங்க முடியாமல் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஏற்கனவே விருதாச்சலத்தில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் இருவர் பலியாகினர்.அதன்பின், அருப்புக்கோட்டையில் ஜெயலிதா கலந்து கொண்டு பேசிய போது, ஒரு பெண் போலீஸ் அதிகாரி மயக்கம் அடைந்தார்.இந்த சம்பவங்களுக்கு பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கொளுத்தும் வெயிலில் பொது மக்களை கட்டாயப்படுத்தி அமர வைப்பதாகவும், மணிக்கணக்கில் காக்க வைத்து அவர்களை வெயிலில் வாட்டி வதைப்பதாகவும் புகார் எழுந்தது.  வெய்யில் அடிச்சா அதுவுல காயவச்சு கருவாடாக்கி கொல்லு....மகாமகம் போனா  குளிக்க வச்சுன்னாலும் கொல்லு...


மேலும், ஜெயலலிதா தனது பிரச்சார கூட்டங்களை கொளுத்தும் வெயிலில் நடத்துவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.இந்நிலையில், சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடைபெற்ற மேற்கு மண்டலம் மற்றும் கேரள அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார்.இதனால், காலை 11 மணி முதல், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை, அதிமுகவினர் அமர வைத்ததாக கூறப்படுகிறது.

மாலை 4 மணிக்குதான் ஜெயலலிதா பேசத் தொடங்கினார்.அப்போது வெயிலில் கொடுமை தாங்க முடியாமல், அதிமுக தொண்டர் பச்சையண்ணன் என்பவர் மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மேலும், மயக்கமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், வெயில் கொடுமை தாங்க முடியாமல் ஏற்கனவே 2 பேர் பலியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். webdunia.com

கருத்துகள் இல்லை: