புதன், 20 ஏப்ரல், 2016

போலீஸ் குதிரை சக்திமான் மரணம்....பாஜக எம் எல் ஏ கணேஷ் ஜோஷியின் கொடூரம்....


The 13-year-old was given a prosthetic leg and was confined to the police lines. It was a well trained horse and part of Uttarakhand Mounted Police for years. “The horse passed away at 5.30 PM. He was suffering from medical-related complications. The exact cause will be known only after post-mortem,” IG Garhwal Sanjay Gunjyal said.
டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாரதீய ஜனதா கட்சியின் பேரவை உறுப்பினரால் தாக்கப்பட்ட போலீஸ் குதிரை சக்திமான்
இன்று மரணமடைந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, காவல் துறையைச் சேர்ந்த சக்திமான் குதிரையை பாஜக பேரவை உறுப்பினர் கணேஷ் ஜோஷி தாக்கி காலை உடைத்ததாகப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜோஷி பின்னர் பிணையில் விடுதலையானார். இந்த தாக்குதில் குதிரை சக்திமானின் இடது பின்னங்கால் வெகுவாக பாதிக்கப்பட்டது.   இந்த பாஜக அரசியலவாதி சதா குங்குமத்தோடு பக்தி பழம் போல் காட்சி அளிக்கிறான் இவனுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் ...
குதிரை எழுந்து நிற்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குதிரையின் கால் அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் குதிரைக்கான செயற்கை காலை தானமாக வழங்கினார். இந்நிலையில், இன்று குதிரை சக்திமான் இறந்ததாக, அதை பராமரித்து வந்த போலீஸார் கூறினர். குதிரை சக்திமான் இறந்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஹாரீஸ் ராவத், ``நான் அதிர்ச்சி அடைந்தேன். இதை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. குதிரை நன்றாக குணமாகி வருகிறது என நினைத்திருந்தேன்'' என்றார்.   வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: