சனி, 23 ஏப்ரல், 2016

கூட்டத்துக்கு ஆட்கள் சப்பிளை பண்ணும் கம்பனி.....திருச்சியில் பாஜக பிரமுகரின் கடத்தல் தொழில்

திருச்சி,: -பொதுக்கூட்டங்களுக்கு, ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனம், கட்சிகளின் கூட்டங்களில், 'விசிட்டிங் கார்டு' கொடுத்து, 'கேன்வாஸ்' செய்து வருகிறது. கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், அதிகளவில் கூட்டத்தை காட்டும் கலாசாரம் உள்ளது. இதற்காக, கட்சி நிர்வாகிகள், தனியார் நிறுவனங்களை நாடி வருகின்றனர். சேர், பாத்திரங்கள் வாடகைகைக்கு விடும் கடைகள் போல், ஆட்களை, அரசியல் கூட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் சில  செயல்படுகின்றன. அதில் ஒன்று, 'தேர்தல் இறுதிச்சுற்று மேன்பவர்' நிறுவனம். இது, பா.ஜ., பிரமுகர் ஒருவரால், சென்னையை தலைமையிடமாக கொண்டு நடத்தப்படுகிறது.    இவர்களை உடனடியாக பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும்....இது ஆட்கடத்தலுக்கு வழி வகுக்கும்.....மற்ற மாநிலத்து ஆட்களை கூட கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலுக்கு சேர்த்து விடுவர்.... பட்டியில் ஆட்களை அடைப்பது போன்று அடைத்து வைத்து கூட்டங்களுக்கு அழைத்து போயி அப்படியே திரும்ப அழைத்து வந்து பட்டியில் அடைத்து விடுவர்..........
இந்த நிறுவனத்திடம், ஆட்கள் எவ்வளவு வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும்; அவர்கள் ஏற்பாடு செய்து விடுவர்.
அதற்கான கட்டணத்தை, கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே செலுத்தி விட வேண்டும்.ஆட்களை கூட்டத்துக்கு அழைத்து வந்து, அந்த நிறுவனமே அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று விடும்.

காத்திருக்கும் நேரத்தைப் பொறுத்து,போக்குவரத்து, உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து, ஒரு ஆளுக்கு, 500 ரூபாய் முதல், 800 ரூபாய் வரை தனியார் நிறுவனத்தால் வசூலிக்கப்படுகிறது. இவர்களால் அதிகபட்சம், 10 ஆயிரம் பேர் வரை தர முடியுமாம்.

இந்த தனியார் நிறுவனத்தால் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரத்திற்கு மட்டுமின்றி, தலைவர் கள், வேட்பாளர்களின் பாதுகாப்புக் கும் ஆட்கள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இந் நிறுவனத்தின் ஆட்கள், தற்போது, திருச்சியில் நடைபெறும் கட்சிக் கூட்டங்களில், விசிட்டிங் கார்டு கொடுத்து, ஆர்டர் பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.தினமலர்.கம

கருத்துகள் இல்லை: