செவ்வாய், 24 மே, 2016

விஜயகாந்த் :தோல்வியால் துவண்டு விடாதீர்!' மா.செ.,க்களுக்கு அறிவுரை

தேர்தல் தோல்வியால், துவண்டுவிட வேண்டாம்' என, மாவட்ட செயலர்களுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து, 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் உட்பட, அனைத்து வேட்பாளர்களும், 'டிபாசிட்' இழந்துள்ளனர். இந்த தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய தோல்வி,அக்கட்சியினரை சோகத்தில் மூழ்கடித்து உள்ளது. வேட்பாளர்களாக போட்டியிட்ட பலரும், கடன் நெருக்கடியில் சிக்கும் நிலையில்உள்ளனர்.  இப்போது சுப்பிரமணியம் சாமி  பிரேமா அண்ணி கிட்ட என்ன சொல்றாரு ?

இந்நிலையில், மாவட்ட செயலர்களின் ஆலோசனை கூட்டத்தை, தே.மு.தி.க., தலைமை துவக்கியுள்ளது. கட்சியில், 60 மாவட்ட செயலர்கள் உள்ளனர். நேற்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட, 20 மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இவர்களிடம், இரண்டு மணி நேரம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரம்கூறியதாவது:தோல்வியால் துவண்டுவிட வேண்டாம் என, மாவட்ட செயலர்களுக்கு, விஜயகாந்த் அறிவுரை கூறினார். அரசியலில், வெற்றி, தோல்வி என்பது சகஜம். எனவே, தொடர்ந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மற்றவர்களை போல விலகி செல்லாமல், தன் கோரிக்கையை ஏற்று, தேர்தல் < பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், மாவட்ட செயலர்கள் விரக்தியோடு காணப்பட்டனர். இன்று தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 20 மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார்.இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது நிருபர் --  தினமலர்.com

கருத்துகள் இல்லை: