புதன், 25 மே, 2016

பங்களாதேஷ் இந்து தொழிலதிபர் வெட்டி கொலை

வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் படுகொலை: பணம் கொடுக்க மறுத்ததால் போதை அடிமைகள் வெறிச்செயல்வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் ஒருவர் போதை அடிமைகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாக்கா: வங்காளதேசத்தில் வலைதள பதிவர்கள், கட்டுரையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என அடுத்தடுத்து அண்மைக்காலங்களில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று இந்து மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்காளதேசத்தின் வடமேற்கில் உள்ள கைபாந்தா என்ற இடத்தில் ஷூ விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் திபேஷ் சந்திரா பிரமானிக். 68 வயதான இவர் இன்று கடையில் இருந்தபோது, போதைக்கு அடிமையான நபர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளானர்.
ஆனால், பிரமானிக் மறுக்கவே, அவர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு பிரமானிக்கின் தொண்டைபகுதியில் வெட்டியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே பிரமானிக் இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விசாரணையை துவக்கிய போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கொலை நடப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பும் இதே போன்று போதைக்கு அடிமையான சில நபர்கள் பணம் கேட்டு பிரமானிக்கை மிரட்டியதாகவும், இவர் கொடுக்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவரது மகன் தெரிவித்தார்.

எனினும், இந்த கொலை நடைபெற்றதற்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: