திங்கள், 23 மே, 2016

தருண் விஜய் எம்பி தாக்கப்பட்டார்.. தலித் கோவில் நுழைவு போராட்டம்


டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், கோவில்களில் நுழைவதற்கு தடை உள்ளது. அதை பாரதீய ஜனதா எம்.பி., தருண் விஜய் தீவிரமாக எதிர்ப்பதுடன், பிரசார இயக்கம் நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த 20–ந் தேதி அங்கு சக்ரதா பகுதியில் உள்ள சில்குர் தேவதை கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட இனத்தவரை அழைத்துச் சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது அவர் தாக்கப்பட்டார். காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கவர்னர் கே.கே.பால், முதல்–மந்திரி ஹரிஷ்ராவத் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் மந்திரி ஹரிஷ் ராவத் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், அந்த வழக்கில் சர்தார்சிங், நயின் சிங், ராஜேந்திர சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை: