புதன், 15 ஜூன், 2016

SRM பச்சமுத்து: மதன்னா யாருன்னே தெரியாது.... கட்சி விரோத செயலால் 25.02.2016 தேதியே நீக்கிவிட்டேன்...

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பெயரை பயன்படுத்தி மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, வேந்தர் மூவிஸ் மதன் மீது அந்தக் கல்விக் குழும உரிமையாளர் பாரிவேந்தர் சார்பில் அவரது வழக்கறிஞர் பாலு, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 40 வருடமாக எங்களது பல்கலைக்கழகம் எந்த புகாருக்கும் ஆட்படாமல் நற்பெயர் ஈட்டி நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரெடுத்துள்ளது. எங்கள் கல்லூரிகளில் பணமாக எந்த தொகையும் வசூலிக்கப்படுவதில்லை. நான் ஐஜேகே கட்சியின் நிறுவனரும் ஆவேன். என்து கட்சியில் 5 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக மதன் என்பவர் இருந்து வந்தார்.
அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து 25.02.2016 அன்று விலக்கப்பட்டுவிட்டார். வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் நடத்தினார். அப்போது எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியும் அவர் தொடர்ச்சியாக எனது பெயரை பயன்படுத்தி நடத்தி வந்தார்.  


இந்த நிலையில் மேற்சொன்ன எங்கள் நிறுவனத்தின் பெயரில் ஏற்படுத்திய மோசடியில் ஈடுபட்ட மதன் அதிலிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் செய்த மோசடியை மறைப்பதற்காகவும் தொலைபேசி வாட்ஸ்அப் மூலமாகவும் பொய்யான தகவல்களை பரப்பிவிட்டு சட்ட நடவடிக்கையில்இருந்து தப்புவதற்காக மோடியாக பெற்ற பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டு மேலும் தற்கொலை செய்வதாக மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். எங்களுக்கு கிடைத்த தகவல்படி அவர் வாரணாசியில் இருந்தபடியே தனது குடும்பத்தின் மூலமாக 28.05.2016 வரை பணம் வசூலித்து வந்தததகத் தெரிய வந்தது. ஆகவே அவரது மனைவி ம்ற்றும் பெற்றோரை விசாரித்தாலே இந்த உண்மை வெளிவரும்.

மேலும் நாங்கள் கேள்விபட்டவரை எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல போலி ஆவணங்களை தயார் செய்து என்னுடைய கையெழுத்தை போலியாக உபயோகித்து எங்கள் நிறுவனத்தின் பெயரால் மிக பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடி செயலுக்கு இன்னும் பல உடந்தையாக இருந்துள்ளனர். அதுகுறித்து தகவல்களை நாங்கள் திரட்டி வருகின்றோம். மேற்படி செய்கையின் மூலம் எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் அளவிட பட முடியாதது. மேலும் பல அவதூறு செய்திகளை வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். ஆகவே இதற்கு காரணமான மதன் மீது எங்கள் நிறுவனத்தை பெயரை பயன்படுத்தி மோசடி செய்தய்காக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறியுள்ளார்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: