வியாழன், 21 ஜூலை, 2016

டெல்லி விமான நிலையத்தில் 59 கிலோ தங்கம் அதிகாரிகள் திருடி விட்டனர்! இன்னும் பல மோசடிகள்...

புது தில்லி:தில்லி விமான நிலையத்தின்  சுங்கத் துறை வசம் இருக்கும் தங்கக் கட்டிகளில் 'மின்னும் பொருள் எல்லாம் பொன் அல்ல' என்பது திடீர் ஆய்வின் மூலம் உறுதியாகியிருக்கிறது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த கிடங்கில் சீல் வைக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படும்.
இப்பகுதியில் நடந்த திடீர் ஆய்வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போன்று மின்னும் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 59 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 18.3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் எப்படி சென்றது என்றே தெரியாமல் மாயமாகியுள்ளது.
இது குறித்து தில்லி விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை காவல் ஆணையாளர் சஞ்சய் மங்கள் கூறியுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவும், சுங்கத்துறை கிடங்கில் இருக்கும் தங்கத்தின் அளவிலும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதில் பலவும் மஞ்சள் நிற உலோகமாக இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கத் துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரும், இந்த கிடங்கினுள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விமான நிலைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். தினமணி.காம்

கருத்துகள் இல்லை: