செவ்வாய், 19 ஜூலை, 2016

சேலத்தில் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் பெயரை உச்சரிக்காத ஸ்டாலின்

சேலம்: சேலத்தில் நடந்த விழாவில் பேசிய, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை உச்சரிக்காதது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம், கோட்டை மைதானத்தில், மக்கள் தே.மு.தி.க.,வை, தி.மு.க.,வுடன் இணைக்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதற்காக பல இடங்களில், அலங்கார தோரணங்களும், விளம்பரத் தட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு இடத்தில் கூட, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் படம் இல்லை. கூட்ட ஏற்பாடுகளை செய்த, சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மட்டுமின்றி, அவரது மகன் ராஜாவுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை தவிர்த்தனர்.    அப்போதும் லடாய் தான்..வீரபாண்டியார் இவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.எல்லாம் நேரடியாக தலீவருடன்தான் டீல் செய்வார்..தலீவரும் அவரை எதிர்க்க மாட்டார்..பின்னாளில் அழகிரி க்கு ஆதரவளித்தனர் வீரபாண்டியார் என்பது தெரிந்ததே.. ..வீரபாண்டியாருக்கு அந்நாளில் புல்லட் ஆறுமுகம் என பெயரே உண்டு..சேலத்தில் இருந்து மதராசுக்கு புல்லட் மோட்டார் சைக்கிளிலேயே சென்று வருவாராம்.....

 மாலை, 4:00 மணிக்கு கூட்டம் துவங்கும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு, 7:30 மணிக்கு, ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அதற்கு முன் வந்த, வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் ஆகியோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தனர். விழாவில், ம.தே.மு.தி.க., நிர்வாகிகளை தொடர்ந்து, தி.மு.க., சார்பில், ஸ்டாலின் மட்டும் பேசினார். நிகழ்ச்சிகளை தொகுத்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கலையமுதன் ஆகியோர் மட்டுமின்றி, சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்டோரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குறித்து, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இறுதியாக பேசிய ஸ்டாலின், துவக்கத்தில் அனைத்து நிர்வாகிகளின் பெயரையும் தெரிவித்துவிட்டு, கடைசியாக மாவட்ட செயலர்கள் ராஜா, சிவலிங்கம் பெயர்களை குறிப்பிட்டார். தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: