செவ்வாய், 19 ஜூலை, 2016

இரு மடங்காகிறது எம்.பி.,க்கள் சம்பளம்

லோக்சபா, ராஜ்யசபா விற்கு M பி க்கள் சரிவர செல்வதில்லை. அப்படியே சென்றாலும் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசுவதில்லை, பெரும்பாலோனோர் சபையிலே தூங்குகிறார்கள். இந்த லட்சணத்தில் மக்களுக்கு சேவை செய்யாதவர்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் இருந்து இவர்களுக்கு 100 மடங்கு சம்பள உயர்வு தேவையா? ஒருவேளை மோடி ஊர் சுற்றித் திரிவதை யாரும் பேசாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடா என்று புரியவில்லை?. மொத்தத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து இந்தியாவை வறுமை நிறைந்த ஆப்ரிக்க நாடுகள் போல் ஆக்கிவிடப் போகிறார்கள். வாழ்க ந.மோடி அவர்களே. இந்திய மக்களை பற்றி கவலைப்படாத சுயநல அரசியல்வாதிகளே நீங்களும் வாழ்க. (வயிற்றெரிச்சல் தாங்கவில்லை) புதுடில்லி, :எம்.பி.,க்களின் சம்பளத்தை, 100 சதவீதம் உயர்த்துவதற்கான பரிந்துரைக்கு, அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பள உயர்வு குறித்து, ஆய்வு செய்த எம்.பி.,க்கள் கமிட்டி, 'சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தலாம்' என, கூறி பரிந்துரைத்தது. இப்பரிந்துரைகளுக்கு, அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, கேபினட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அடுத்தகட்டமாக, பிரதமர்மோடியின் ஒப்புதல் கிடைத்தால்,நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில், பார்லிமென்ட்டின் அனுமதி பெறப்படும். பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்:
* எம்.பி.,க்களின் சம்பளம், 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாயாக உயரும் 
* எம்.பி.,க்களின் பயணப்படி உள்ளிட்ட, பிற செலவுக்கு அளிக்கப்படும் தொகை, இரு மடங்காக உயர்ந்து, 90 ஆயிரம் ரூபாயாகஇருக்கும்
* அவர்களின் அலுவலக செலவு, ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் தொகையும், 100 சதவீதம் உயர்த்தப்படும்* எம்.பி.,க்களின் அரசு இல்லங்களில், மேசை, நாற்காலி போன்ற மரப்பொருட்கள் வாங்குவதற்கான படி, இரு மடங்காக உயர்ந்து, 1.5 லட்சமாக வழங்கப்படும்
* மாதம், 1,700 ரூபாய் மதிப்பில், இலவச 'வை - பை' வசதி
* முன்னாள் எம்.பி.,க்களுக்கு ஓய்வூதியத் தொகை, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 35 ஆயிரம் ரூபாயாக உயரும்.

கருத்துகள் இல்லை: