சனி, 23 ஜூலை, 2016

விஜயகாந்த் ; விமானங்கள் காணமல் போவதை மத்தய அரசு தடுக்கவேண்டும்

விஜயகாந்த் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம். விஜயகாந்த் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம்.
விமானங்கள் காணாமல் போவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற ராணுவ விமானம் நேற்று தீடீரென மாயமானது. இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு விபத்து ஜூன் மாதம் 8ஆம் தேதி டோர்னியர் ரக விமானம் பயிற்சிக்காக புதுச்சேரி வரை சென்று விட்டு, சென்னை திரும்பும் போது மாயமானது. இதில் 3 பேர் பயணித்த விமானியும், துணை விமானியும் இறந்துள்ளனர்.  கப்டன் சார் இதையும் கோபாலசாமிகிட்டேயே சொல்லுங்க அவருதாய்ன் உங்களுக்கு எது தேவையோ அதை கச்சிமா செய்து முடிப்பாரு.. உங்களுக்கு ஒய்வு தேவைன்னு அவருக்குதாய்ன் ஏற்கனவே தெரிஞ்சு புரிஞ்சு ... இந்த நெலமை..  

எனவே, மீண்டும் அதேபோல் ஒரு செய்தி வந்து இருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மாயமான 29பேர் குடும்பங்களுக்கு தனது ஆறுதல்களை தெரிவித்ததுடன், விரைவில் அவர்கள் நலமுடன் திரும்பி வர பிரார்த்தித்துக் கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.  tamilthehindu.காம்

கருத்துகள் இல்லை: