திங்கள், 22 ஆகஸ்ட், 2016

சிங்கபூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

சிங்கப்பூர், சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல் நல குறைவினால் இன்று காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூரின் 6வது அதிபராக கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்துள்ளார். கடந்த ஜூலையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த 3 வார காலம் கோமா நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.
dailythanthi.com

 நாதன் சிங்கப்பூர் அரசில் பல உயரிய பதவிகளை வகித்தவர். கடந்த 1988-ஆம் ஆண்டு மலேசியாவுக்கான உயர் ஆணையராகவும், 1996-இல் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார். அதன்பிறகு, 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இருமுறை பதவி வகித்தவர். சிங்கப்பூர் அதிபராக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை ஏற்க நாதன் மறுத்துவிட்டார். அவருக்கு பிறகு, டோனி டான் கெங் யாம் அதிபராக பதவியேற்றார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் "பிரவாசி பாரதிய சம்மான்' விருது கடந்த 2012-ஆம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்ட

Read more at: ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: