வியாழன், 29 செப்டம்பர், 2016

எல்லை கிராம மக்கள் வெளியேற்றம் .எல்லையில் இருந்து 10 கி.மீ தூரம்வரை

சண்டிகர்: இந்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். யூரி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து முப்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப், காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 10 கி.மீ., தூரத்தில் உள்ள கிராமத்தை வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்தை நோக்கி அகற்றப்பட்டு வருகின்றனர். அங்கு எல்லை பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். வாகா எல்லையில், வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: