திங்கள், 26 செப்டம்பர், 2016

அரியலூர் விபத்து 11 பேர் மரணம் .. சரக்கு வெண் மீது டேங்கர் லாரி மோதியதில் 9 பெண்கள் உட்பட ..

அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியவர்களின் சரக்கு வேன் மீது டேங்கர் லாரி மோதியதில் 9 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் பலி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த 30 பேர் ஒரு சரக்கு வேனில் நேற்று காலை புதுக்குடி கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர். அங்கு துக்க காரியம் முடிந்த பின்னர் மாலை அவர்கள் அனைவரும் அதே சரக்கு வேனில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந் தனர். இரவு சுமார் 9 மணி அளவில் கச்சிபெருமாள் அருகே சரக்குவேன் வந்தபோது, அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியானவர்கள் விவரம் வருமாறு:- டிரைவர்-கிளனர் 1.சித்ரா(வயது30), 2.செந்தாமரை(50), 3.செல்வி(40), 4.ராணி(40), 5.சரஸ்வதி(50), 6.மருதுபாண்டி(22), 7.மணிகண்டபிரபு(22), 8.காசியம்மாள், 9.ராஜம்மாள்(55), 10.முனியம்மாள்(60), 11.காமாட்சி. இவர்களில் மருதுபாண்டி சரக்கு வேன் டிரைவர் ஆவார். மணிகண்ட பிரபு அந்த சரக்கு வேனில் கிளனராக இருந்தார். இவர்கள் அனைவரும் கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மேலும் 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியவர்களின் சரக்கு வேன் மீது டேங்கர் லாரி மோதியதில் 9 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: