செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கண்ணகி நகர் காவல் நிலைய பெட்ரோல் குண்டு வீச்சு: பின்னணி என்ன?

thetimestamil.com   : இசையரசு: இசையரசு“கண்ணகி நகர் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு” என பரபரப்பாக கடந்த நாள் செய்தி வெளியானது. இந்த பரபரப்புக்குப் பின் இருக்கும் சில உண்மைகள் உங்கள் பார்வைக்கு.
15 ஆயிரம் 500 குடும்பங்கள் அடைக்கப்பட்டுள்ள கண்ணகி நகருக்கும், 2000 ஆயிரம் குடும்பங்கள் (தற்போது மட்டும் ) அடைக்கப்பட்டுள்ள எழில் நகருக்கும் சேர்த்து இருப்பது ஒரே ஒரு காவல் நிலையம் தான். இத்தனை ஆயிரம் குடும்பங்கள் வசிக்கத் தேவையான, குடிநீர், மருத்துவமனை, பள்ளிகள், பால்வாடிகள், ரேஷன் கடைகள், கழிவு நீர், குப்பை அகற்றும் பணிகள், பஸ்வசதி, வேலைவாய்ப்பு, நூலகம், இடுகாடு, மின் நிலையம் என மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமலிருக்கிறதோ… அதில் மிக முக்கியமான ஒன்றுதான் இந்த போலீஸ் நிலையம்.

போலீஸ்காரர்கள் பெரும் பணிச் சுமையிலும் மன அழுத்தத்திலும்  பணியாற்றி வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் பல்வேறு பகுதிகளை கொண்டு வந்து ஒரே இடத்தில் குடியமர்த்தினால் அங்கு என்ன சிக்கல்கள் வரும் ..? இதற்கு அரசின் அக்கறையின்மையும் புரிதலின்மையும் தவறான  கொள்கைகளுமே முதன்மைக்காரணம். இதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டிய அரசின் அதிகார மையங்கள்,  “சும்மா வூடு கொடுக்கிறோம்… இங்கேயிருந்து அதாவது சென்னையிலிருந்து ஒழிஞ்சிப்போங்கோ” என நினைக்கின்றன. “அதுக்கப்புறம் நீங்க வாழ்ந்த இன்னா .. செத்தா இன்னா” என்று எருமை மாட்டின் மீது மழை பெய்ததைப்போல இன்னமும் கருணா/ ஜெயா அரசுகள் இருந்ததின் இருப்பதின் முன்விளைவுதான் இந்த காவல் நிலைய தாக்குதல்.
இவர்கள் எதைச் செய்யத் தவறினார்கள்…
சென்னையிலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட சேரி மக்களை இங்கு(கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்) அடைக்கும் போது…
கண்ணகி நகருக்கு வரும் மக்களில் எத்தனை இளம் குற்றவாளிகள் இருக்கிறார்கள் ..?
பழைய குற்றப் பின்னணி உள்ள குற்றவாளிகள் யார் யார் என்ற விவரங்கள் சேகரித்து தொடர்ந்து அவர்களை கண்காணித்தல்
இளம் குற்றவாளிகள் உருவாவதற்கான சமூக, வாழ்விட உளவியலை முன்னறிந்து அரசுடன் கலந்து அதற்கான புதிய காவல் குழுக்களை உருவாக்குதல்.
இடம் பெயர்க்க்கப்பட்ட சேரி மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுத்து மகிழ்ச்சையான சூழலை உருவாக்குதல் …
சென்னையிலிருந்து துரத்தப்பட்ட சேரி மக்களின் மறுவாழ்வுக்கான வழிகளை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் …கேட்கவும் நிறைவேற்றவும் தான் யாருமில்லை. இறுதியாக சிந்தாதரிப்பேட்டையிலிருந்து வந்த ஒன்றிரண்டு பகுதிகளை சேர்ந்த சிலர் செய்யும் இதுப்போன்ற வன்முறையால் மீதி உள்ள 17 ஆயிரம் அப்பாவிக் குடும்பங்களையும் காவல் துறையின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாக்கிவிடாதீர்கள்…
இசையரசு, ஊடகவியலாளர்; சமூக செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை: