ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

துணை ஜனாதிபதி பதவிக்கு அ.தி.மு.க. முயற்சி .. வழக்குகளை ஊத்தி மூட வசதியாக.. தம்பிதுரைக்கு வாய்ப்பு? ?

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக் காலம், ஓராண்டுக்குள்
முடிவடைய உள்ளதால், அப்பதவியில் அமர, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், 50 எம்.பி.,க்கள் கொண்ட, அ.தி.மு.க.,வுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது; அதற்கான முயற்சியில், கட்சி மேலிடம் இறங்கி உள்ளது. டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில், இப்போது அதிகமாக விவாதிக்கப்படும் விஷயம், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது தான். ஆளும் கட்சியான பா.ஜ.,விலிருந்து எந்த தலைவர் இந்த பதவிக்கு வருவார் என்ற பேச்சும், கூட்டணி கட்சிகளிலிருந்து யாராவது நியமிக்கப்படுவரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள, ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், அடுத்த ஆகஸ்டில் முடிவடைகிறது. அதற்கு முன்பாக, இந்த பதவிக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் நடத்தும். ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்கள் வாக்களிப்பர்.இத்தேர்தல் நடக்க இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும், அதற்கான பூர்வாங்க வேலை இப்போதே தொடங்கி விட்டது. தன் கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டும் என, அ.தி.மு.க., துாது விடுவதாக, டில்லி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


லோக்சபா, ராஜ்யசபா என, இரண்டு சபைகளிலும், அ.தி.மு.க.,வுக்கு, 50 எம்.பி.,க்கள் உள்ளனர். இதனால், துணை ஜனாதிபதி பதவி, அ.தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட வேண்டும் என, கட்சித் தலைமை விரும்புவதாக சொல்லப்படுகிறது. அப்படி எனில், அப்பதவிக்கு பொருத்த
மானவர் யார் என்ற பேச்சும் நடக்கும் அல்லவா!

ஐந்தாவது முறை, எம்.பி.,யாக உள்ள, தம்பிதுரை தான், துணை ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது முறையாக லோக்சபா துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரை, சபையின் சட்ட திட்டங்களை நன்கு அறிந்தவர்; சபையை நடத்துவதில் தேர்ந்தவர். அடுத்தமுறை, பிரதமர் மோடி- - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி பதவி வழங்குவது குறித்த கோரிக்கையை, ஜெ., முன்வைப்பார் என்றும்
சொல்லப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர்  தினமலர்.com

கருத்துகள் இல்லை: