ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நக்கீரன் அம்பலப்படுத்திய நத்தம் விஸ்வநாதன் கைதாவாரா?

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ;அமலாக்கத்துறை அதிகாரிகளின் மூன்று நாள் விசாரணைக்குப் பின்னர், சென்னையில் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியா னது.>பின்னர், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என நத்தம் விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. >ரெய்டில் சிக்கிய ஆவணங்களுடன் நத்தம் விஸ்வநாதனை அமலாக்கத்துறை அலுவல கத்திற்கு சென்றனர் அமலாக்கத்துறை  போலீசார்.  நத்தம் விஸ்வநாதன் வழக்கறிஞரும் உடன் சென்றார்.   அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஸ்வநாதனிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது.   விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என்ற நிலை இருந்தது.  அமலகாக்கத்துறை அதிகாரியின்     விசாரணை நாளையும் இருப்பதால் நத்தம் விஸ்வநாதன் இன்று கைது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.  நாளைய விசாரணையில் நத்தம் விஸ்வநாதன் கைது செய்யப்படலாம் என்று தகவல்.


அதிமுக அமைச்சரவையில் மின் துறை மற்றும் கலால் துறை முன்னால் அமைச்சராக இருந்தார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் மின் கொள்முதல் மற்றும் நிலக்கரி கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது .;சட்டமன்ற தேர்தலின் போது கரூரில் ரூ. 5 கோடி பணம் பிடிபட்டது. இது நத்தம் விஸ்வநாதன் மகன் அமருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இதன் பின்னர் சட்டமன்ற தேர்தலில் நத்தம் விஸ்வநாதன் தோற்றுப்போனார். பின்னர் அவருக்கு இறங்குமுகம் ஆரம்பமானது. அவரது ஆசி பெற்ற ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவருடன்  சம்பந்தப்பட்ட சைதை துரை சாமி மகன் வெற்றி துரை சாமி, கீர்த்திலால் மற்றும் சேதுராமன் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறை போலீஸார்,  சென்னையில் விசாரணை நடத்தி வந்தனர்.  நாளை மீண்டும் விசாரணை நடைபெறவிருக்கிறது.  நாளைய விசாரணையில் கைது செய்யப்படலாம் என தகவல். sp;நக்கீரன் புலனாய்வு இதழில் நத்தம் விஸ்வநாதனை அம்பலப்படுத்தி வெளியிடப்பட்ட செய்தியின்  எதிரொலியாக அமலாக்கத்துறையினர் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தி எதிரொலி:<அ
வசர அவசரமாக அதிகாலை வேளையில் 40 வீடுகளின் கதவைத் தட்டியது வருமானவரித்துறையின் ரெய்டு படை. செப்டம்பர் 12-ந்தேதி நடந்த அதிரடியில் சென்னை மாநகர மேயர் சைதை துரை சாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கீர்த்திலால் என்கிற பிரபல வைர வியாபாரி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகிய நான்கு பேரின் நாற்பது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடங்கும்.

;செப்டம்பர் 12, 13 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த ரெய்டுகளில் சுமார் 150 கோடி ரூபாய் பணம் மற்றும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ""இந்த ரெய்டு இத்துடன் நிற்காது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தற்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வீடுகளில் தொடரும் நாங்கள் மேலிடத்தின் அனுமதி வேண்டி காத்திருக்கிறோம். அவர்கள் அனுமதி கிடைத்தால் வைத்தி       லிங்கம், ஓ.பன்னீர் வீடுகளுக்கு பாய்வோம்' என்கிறார்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள்.


யார் அந்த மேலிடம் என கேட்டதற்கு ""வேறு யார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதான்'' என்றவர்கள், ரெய்டு பின்னணியை விவரிக்கத் தொடங்கினர். ""மேயரின் சென்னை சைதாப்பேட்டை வீட்டிற்கு ரெய்டுக்கு போனபோது, "நான் யார் தெரியுமா? சென்னை நகர மேயர். "என் வீட்டிற்கு ரெய்டுக்கு வர என்ன துணிச்சல். இந்திய ஜனாதிபதியை போல சென்னை நகரின் முதல் குடி மகன் நான். இதோ முதல்வருக்கு நான் போன் போடுகிறேன்' என எகிறினார். அதற்கு, "உங்களது மகன் வெற்றி உங்களுடன் வசிக்கிறார். அவரைத் தேடித்தான் நாங்கள் வந்தோம். போயஸ் கார்டனுக்கு பேசுங்கள். அவர்களுக்கு நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்தது தெரியும் என்றோம். அவர் ஆடிப்போய்விட்டார். முதல்வரை சந்திக்கச் செல்வதாக சொன்னார். அவரை அனுமதித்தோம். இந்த ரெய்டு முழுவதும் அருண்ஜெட்லி, தமிழக முதல்வர் ஜெ. ஆகியோருக்கு தெரிந்தே நடந்தது' என்றார்கள்.

""மேயர் துரைசாமியின் சேலையூர் மாடம்பாக்கம் பண்ணை வீட்டிலும், சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் அமைந்துள்ள கீர்த்திலாலின் தேனாம்பேட்டை நகைக் கடையிலும் ஏராளமான பணம் சிக்கியது. நத்தம் விஸ்வநாதனின் மகள் வீடு அமைந்துள்ள எம்.ஆர்.சி. நகர் பிளாட்டில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. நத்தத்தின் மருமகன் கண்ணன் வீட்டில் வெளிநாட்டில் அவர் செய்த முதலீடுகள் பற்றிய ஆவணங்கள் சிக்கின'' என்றனர் அதிகாரிகள்.





""அ.தி.மு.க.வின் முக்கியஸ்தர்களான நத்தம் மற்றும் சைதை துரைசாமி வீட்டில் ரெய்டு நடத்த மத்திய அரசோடு இணக்கமான போக்கு கொண்ட ஜெ. எப்படி அனுமதித்தார்?'' என அவர்களிடம் கேட்டதற்கு, ""நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி இருவர் மீதும் ஜெ.வுக்கு நல்ல நம்பிக்கை இல்லை'' என்றனர். 

""கரூர் அன்புநாதன் வீட்டில் தேர்தல் நேரத்தில் போலி ஆம்புலன்ஸ் மூலம் பண விநியோகம் நடத்தியதாக தேர்தல் கமிஷனால் நடவடிக் கைக்கு உள்ளானபோதே நத்தம் விஸ்வநாதன் பற்றியும் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி ஆகியோரை பற்றிய ஆவணங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அப்பொழுதே இந்த இருவரை பற்றியும் நாங்கள் ஒரு பெரிய ஃபைலே தயாரித்து வைத்திருந்தோம்'' என்றவர்கள், அந்த ரகசிய கோப்புகளில் உள்ள தகவல்களை வைத்து வருமானவரித்துறை தயாரித்த ரகசிய குறிப்புகள் அடங்கிய ஃபைலை நமக்கு தந்தார்கள்.<


அந்த ஃபைலின் பக்கங்களைப் படித்த நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. பி.அன்புநாதன் எனப்படும் இந்த நபரின் மொத்த சொத்து மதிப்பு 2005-2006ல் இரண்டரை கோடி. தற்பொழுது அவர் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார். அதற்கு மிக முக்கிய காரணம் நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர் செல்வம், வைத்தி   லிங்கம் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர்தான். ஆரம்பத்தில் திருட்டு வண்டிகளை போலி ஆர்.சி. புத்தகங்கள் மூலம் விற்று வந்த அன்புநாதனுக்கு 2011ம் ஆண்டு செந்தில் பாலாஜி மூலம் நத்தம் விஸ்வநாதன் அறிமுகம் கிடைக்கிறது. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நடத்திய பண விநியோகத்தை அன்புநாதன் தனது போலி பதிவெண் கொண்ட வாகனங்கள் மூலமாக மேற்கொண்டதால்... அவருக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை நத்தம் விஸ்வநாதன் தருகிறார்.

இதுவரை அவரது பாஸ்போர்ட் விவரங்களி லிருந்து பார்க்கும் போது 2012-லிருந்து 2016 ஆண்டு வரையிலான நான்கு வருடங்களில் 90 நாடுகளுக்கு போய் வந்திருக்கிறார். அந்த நாடுகளில் நத்தம், ஓ.பி., வைத்தி ஆகியோரின் பணத்தை ஹவாலா முறையில் கொண்டு போய் முதலீடு செய்திருக்கிறார். அதில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் ஹாங்காங் ஆகியவை முக்கியமான நாடுகள்.





அதில் தாய்லாந்திலுள்ள Kasi Korn Bank (K.Bank)  மிக முக்கியமானது. துபாயில் உள்ள Deira city என்கிற இடத்தில் 1900 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகத்தை நத்தம், ஓ.பி., வைத்திலிங்கம் ஆகியோருக்கு மனோஜ்குமார் கார்க் (Manoj Kumar Garg) என்ற பினாமி பெயரில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அன்புநாதன். அன்புநாதன் இந்த 3 அமைச்சர்களின்         பணத்தை சிங்கப்பூரை சேர்ந்த Kit Huat Trading Company என்கிற கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறார்.

சீனாவில் Loxley Holdings மற்றும் China Bank of Communication ஆகிய நான்கு கம்பெனிகளில் முதலீடு செய்திருக்கிறார்.

அன்புநாதன் இந்தியா முழுவதும் இந்த மூன்று அமைச்சர்கள் பணத்தை முதலீடு செய்ய     ஏயடத GVPR ENGINEERS LIMITED என்கிற கம்பெனியை ஹைதராபாத்தை தலைநகரமாகக் கொண்டு நடத்துகிறார். அதன்மூலம் பியர்லெஸ் என்கிற இன்சூரன்ஸ் கம்பெனியின் முதலாளியான பரஸ்மால் லோதாவை பயன்படுத்தி தனது முதலீடுகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்கிறார்.

இந்த பரஸ்மால் லோதா மூலம் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து நத்தம் விசுவநாதனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதேபோல் கொரிய கம்பெனியான ஹுண்டாய் கம்பெனியை நத்தம் விசுவநாதனுக்கு அறிமுகப் படுத்துகிறார்.


ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் சட்ட ரீதியான உதவியை ஜெ.வுக்கு பெற்றுத்தரும் அன்புநாதன், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்கும் வைபவத்துக்கு அழைக்கப் படுகிறார்... அதில் பங்கெடுக்கிறார்.

இப்படிச் செயல்படும் அன்புநாதனும்            நத்தம் விசுவநாதனும் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி (98400 48944) மற்றும் அவரது மகன் வெற்றி (98408 31881) ஆகியோருடன் அன்புநாதன் தனது பினாமி பண பரிவர்த்தனை களுக்காக பயன்படுத்தும் 99445 66669 மற்றும் 89739 65790 ஆகிய எண்களில் தொடர்ந்து பேசிவருகிறார்.

  கர்நாடக மாநிலத்தில் பல முதலீடு       களை செய்திருந்தார்கள் சைதை துரை          சாமியும் அவரது மகனும். அவை அன்புநாதன் மூலமாகத்தான் செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் மடிவாலாவில் 50 கோடி மதிப்புள்ள நிலத்தை துரைசாமியும் அவரது மகனும் அன்புநாதன் ஆகிய மூவரும் சேர்ந்து விற்றிருக்கிறார்கள்'' என பல அதிரடி விவரங்கள் வருமான வரித்துறையினரின் ஃபைலில் காணப்படுகிறது.

இந்தியாவின் ஒரு வைர வியாபாரியான பிரபுலாலுக்கு அடுத்தபடியாக பெல்ஜியம் நாட்டிலிருந்து நேரடியாக வைரம் இறக்குமதி செய்யும் கீர்த்திலால், நத்தம்+துரைசாமி கூட்டணியுடன் இணைகிறார். அவருக்காக சென்னை நகரின் மாநகராட்சி வணிக வளாகங்களை திறந்துவிடுகிறார் துரைசாமி. வணிகம் பெருகுகிறது. அதனால் கீர்த்திலாலும் வருமான வரி வளையத்தில் நத்தத்துடன் சிக்குகிறார். 

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நத்தம், ஓ.பி., வைத்தி, தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி என கார்டனுடன் நெருக்கமாக இருந்த ஐவரணி மீது ஜெ.வுக்கு சந்தேகம் வந்தது.

ஜெ. சிறையிலிருந்த காலகட்டத்தில்...

பல்லாயிரம் கோடி பார்த்ததாக அவர்கள் விசாரணை வளையத்தில் வறுத்தெடுக்கப்பட்டனர். அதில் வைத்தி அப்ரூவரானார். 

ஓ.பி.எஸ்., அன்புநாதன் மூலம் துபாயில் வாங்கிய ஓட்டலை ஒப்படைத்தார்.

எடப்பாடி, தங்கமணி டோட்டல் சரண்டர் ஆனார்கள்.

ஆனால் நத்தம் பாம்பிற்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீன் போல செயல்பட்டு எஸ்கேப் ஆனார்.

நத்தமும் துரைசாமியும் கீர்த்திலாலுடன் கூட்டணி போட்டு கொள்ளையடிப்பதை தெரிந்து கொண்ட ஜெ.விடம், "கருப்புப் பணத்தை கைப்பற்றுகிறோம்' என அருண்ஜெட்லி சொல்ல ரெய்டுக்கு ஓ.கே. சொன்ன ஜெ., நத்தத்தின் பதவியையும் பறித்துவிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்தால் மேயர் துரைசாமி முன்னாள் மேயர் ஆகிவிடுவார் என்பதால் அவரை விட்டு வைத்திருந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் மீது வருமானவரித்துறை பாய்ந்திருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும்? கைது செய்யப்படுவார்களா என்பது ஜெ.+ஜெட்லி கூட்டணியின் முடிவைப் பொறுத்தது என்கிறார்கள் உயரதிகாரிகள்.

-தாமோதரன் பிரகாஷ்
படம் : அசோக்
------------------



த்தம் விஸ்வ நாதனுக்கு அறிமுக மாவதற்கு முன்பே சைதை துரைசாமிக்கு கரூர் அன்புநாதன் நெருக்கம். இவரிடம் தான் கடந்த 5 வருடங்களில் கோடிக்கணக்கான பணத்தை அன்புநாதன் மூலம் முதலீடு செய்ததை சைதை துரைசாமியின் மகன் வெற்றி தான் கவனித்துக்கொண்டார். மின்சாரத்துறை அமைச்சராக நத்தம் இருந்த போது, நத்தத்தின் மகன் அமர்நாத்தும் துரைசாமியின் மகன் வெற்றியும் பிஸ்னெஸ் பார்ட்னர்களாக உருவாகியிருந்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து சித்தார்த் எனர்ஜி என்கிற சூரியஒளி மின் உற்பத்தி நிறு வனத்தை துவக்கினார்கள். அந்த சமயத்தில்தான், சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக தமிழக அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டார் தொழிலதிபர் அதானி. அவரின் பவர் ப்ராக் ஜெக்ட்டுக்காக  தூத்துக்குடி, நெல்லை மாவட்டங் களில் நிலங்களை பர்ச்சேஸ் செய்து கொடுக்கும் பணியை நத்தத்திடம் ஒப்படைத்திருந்தது கார்டன். இதனை மகன் அமரிடம் கொடுத்தார் நத்தம். அப்போது, அமரும் வெற்றியும் இணைந்து மக்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி அதனை மார்க்கெட் ரேட்டில் அதானிக்கு விற்பனை செய்தனர். இதில் மட்டுமே 500 கோடிக்கும் மேல் புழங்கியது. தமிழகத்தின் மின் பற்றாக் குறையை சமாளிக்க 11 தனியார் நிறுவனங்களிடமிருந்து விதிகளுக்குப் புறம்பாக அதிக விலை கொடுத்து ஜெ. அரசு மின்சாரம் வாங்கியதில் கிடைத்த கமிஷன் தொகை மட்டும் 3,500 கோடி. தவிர, இந்தோனேஷியாவில் 12 நிலக்கரி வயல்கள் வாங்கப்பட்டன. அதில் 3 வயல்களில் மறைமுக பார்ட்னராக வெற்றி இருக்கிறார் என்கிறார்கள் தமிழக மின் வாரிய அதிகாரிகள். இத்துடன், சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதை தனி பிஸ்னெஸ் சாக செய்து வருகிறார் வெற்றி. அஜீத்தும் வெற்றி யும் நீண்டகால நண்பர்கள். வெற்றிக்காக அஜீத் தந்த கால்சீட்டை சத்யஜோதி நிறுவனத்தின் மூலம் பயன்படுத்தி படம் எடுத்து வருகிறார் வெற்றி. இதில், 90 சதவீத தொகை துரைசாமியினுடையது என்கிறார்கள் சினிமா புள்ளிகள். ஆர்.எம்.வீ. குடும்பத்தின் படத்தயாரிப்பு நிறுவனத்துடன் சைதை துரைசாமி நெருக்கமாக இருக்கிறார் என்பது சமீபத்தில்தான் கார்டனுக்கு தெரிய வந்திருக்கிறது.இந்தோனேஷியாவில் 12 நிலக்கரி வயல்கள் வைத்திருப்பது போல 10 கப்பல்களும் மிதக்கிறதாம். ஒரு கப்பல் மூலம் 50,000 டன் என மாதத்திற்கு 5 லட்சம் டன் இறக்குமதி செய்கின்றன இந்த கப்பல்கள். இதன் மூலம் சுமார் 4,800 கோடி ரூபாய் கப்பல் பிஸ்னெஸ்சில் மட்டும் பார்த்திருக் கிறார் நத்தம். இதில், 3 சதவீத வருவாய் வெற்றிக்கு கிடைத்துள்ளதாக கூறு கின்றது விபரங்கள் அறிந்த வட்டாரம். வெளிநாடுகளில் கிடைக்கும் வருவாய்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை சரி செய்வதற்காகவே சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங், போர்ச்சுகல் நாடுகளில் சில வங்கிகள் இயங்குகின்றன. அந்த வங்கிகளில் எவ்வளவு வேண்டுமானாலும் கறுப்பு பணத்தை பதுக்கி பிறகு வெள்ளையாக்கி விட முடியும். அப்படி வெள்ளையாக்கியதுதான் ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி பறக்கும் காசா கிராண்டே நிறுவனத்தில் பல ஆயிரம் கோடிகளை நத்தமும் சைதையும் செய்த முதலீடு என்கிறார்கள். மேலும், இந்தியாவில் தங்க - வைர வர்த்தகத்தில் முதலிடத்தில் இருக்கும் கீர்த்திலாலிடமும் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

நில வணிகம், கட்டுமான நிறுவனங்களில் முதலீடு, சினிமா தயாரிப்புகளில் முதலீடு என கடந்த 5 வரு டங்களில் சைதை துரைசாமி கணக் கில் காட்டப் படாத தொகை மட்டுமே பல ஆயிரம் கோடி கள். சி.ஐ.டி. நகரிலுள்ள அவரது வீடு, சேலையூரிலுள்ள அவரது பண்ணை வீடு இரண்டிலும் நடத்தப் பட்ட சோதனையில் இதற்கான 150-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. சோதனைக்காக சி.ஐ.டி. நகர் வீட்டிற்குள் நுழைந்தபோது, யோகா முடித்துவிட்டு வெளியே வந்த துரைசாமி பதறி விட்டார். போன் செய்யவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. ரெய்டு குறித்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்கமளிக்க சைதை துரைசாமி முயற்சித்தும் முடியவில்லை. அதேசமயம், ஜெ.வின் நம்பிக்கையான அதிகாரிகள் மூலம், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்பது குறித்து தன்னிலை விளக்கத்தை ஜெ.வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் சைதை. மதியம் 12 மணிக்கு நத்தம் மற்றும் சைதை வீடுகளில் நடக்கும்  ரெய்டை ஜெ. உறுதிப் படுத்திக் கொண்டதும், அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பதவிகளி லிருந்து நத்தம் விஸ்வநாத னுக்கு கல்தா கொடுத்தார்.

-இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின், அசோக்


 பெரிய்ய்ய... கல்லூரி!


திண்டுக்கல் வேம்பார்பட்டியிலுள்ள தனது வீட்டில் கட்சிக்காரர்களுடன் நத்தம் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தபோது, திருச்சி ரிஜிஸ்ட்ரேசன் கொண்ட 3 குவாலிஸ் கார்கள் வீட்டு முன்பு பிரேக் போட்டு நின்றன. வருமானவரித்துறையினர் என அறிந்து அதிர்ந்து போனார் நத்தம். ராஜசேகரன் தலைமையில் ஒரு பெண் அதிகாரி உட்பட பத்து பேர் அதிரடி சோதனையில் இறங்கினர். அவர்களை நத்தம் தடுக்க முயல, அதிகாரிகள் எச்சரித்தனர். விஷயமறிந்து மீடியாக்களும் பத்திரிகைகளும் குவிய, லோக்கல் ர.ர.க்கள் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.


""தனது என்.பி.ஆர். கல்லூரியில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதித்தார் அண்ணன் நத்தம்.  அந்த கிரிக்கெட் டீமில் மதுரை அணியை அழகிரியும் திண்டுக்கல் அணியை அண்ணனும் வாங்கியிருந்தனர். மதுரை டீம் விளையாடியபோது அழகிரி வந்து பார்த்துவிட்டு போனார். கிரிக்கெட் போட்டிகள் நடத்துற அளவுக்கு மிகப் பெரிய கல்லூரியை நடத்துகிறார் என்பதையும் அழகிரி வந்து போனதையும் சமீபத்தில்தான் கார்டனுக்கு போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில்தான் கட்சிப் பதவி பறிபோயிருக்கிறது'' என்று ஆதங்கப்பட்டனர்.

-சக்தி

கருத்துகள் இல்லை: