வியாழன், 29 செப்டம்பர், 2016

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? ஜெயமோகனுக்கு சூரிய ரத்தினாவின் சாட்டை அடி

Suriya Rethnna :  எழுத்தாளர் ஜெயமோகன்,
1.அண்மையில், ‘பொய்யெழுத்தின் திரை’ என்ற தலைப்பில் என் ‘நான்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது. எனக்கு முதலில் தோன்றிய எண்ணம்,“Is this guy worth my time?”ஆனால் என் கவனத்தை ஈர்த்து, என்னை எழுதத் தூண்டிய விஷயம் - 1.மூவரும் சிங்கப்பூர் வளர்த்தெடுத்த பெண் எழுத்தாளர்கள். அண்மைய கால நிரந்தரவாசிகள் அல்ல. ஏன்? 2.எழுத்துலகில் தடம் பதிப்பதற்கு ஏற்கனவே பெண்கள் தடுமாறும்போது, அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் ஏன் இந்த கதகளி?
2. முதல் விஷயம் - உங்களுடைய விமர்சனம் ‘நான்’ நூலின் பெயரையும் என் பெயரையும் சேதப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அதில் என்னுடைய அனுமதியின்றி என்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? அதில் விமர்சிக்கப்பட்ட இன்னொரு பெண் எழுத்தாளரின் புகைப்படம் போடப்படவில்லை. இதிலிருந்து உங்களின் வக்கிர நோக்கம் என் புகைப்படத்தோடு என் பெயரைச் சேதப்படுத்துவதே ஆகும் என்பது தெளிவாகிறது.
பெயர் சேதத்திற்கும் என்னுடைய அனுமதியின்றிப் புகைப்படப் பயன்பாட்டிற்கும் உங்கள் மீது சிங்கப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டேன். இதைப் பற்றிய மேற்கொண்டு எடுக்கவிருக்கும் சட்ட நடவடிக்கைகள் விரைவில் உங்களுக்குத் தெரிய வரும்.
3. இரண்டாவது விஷயம் – நான் எழுதுவது எனக்காகவும் சிங்கப்பூர் வாசகர்களுக்காகவும்தான். கூடவே, தனக்கு என்ன தேவை என்பதை என்னிடம் தெளிவாகக் கூறிவிடும் பதிப்பகம், அல்லது நிறுவனங்களுக்காகவும் எழுதுகிறேன். உங்களுக்காக அல்ல. My stories are not designed to suit your idiosyncrasy. ‘நான்’-உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த சிறுகதை தொகுப்பு. என் பதிப்பகத்தாருக்கும் எனக்கும் உள்ள புரிதலின்படி – எல்லா தரப்பு வாசகர்களும் படிக்கக்கூடியதாக எளிமையாக இருக்க வேண்டும். முக்கியமாக உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்களிடையே துணைப்பாடப் புத்தகமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற குறுங்கதைகளாக இருக்க வேண்டும், தங்களாலும் வருங்காலத்தில் எளிமையான கதைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடையே ஊட்ட வேண்டும். இளையர்களிடையே கலந்துரையாடலுக்கும் நாடகமாக்கப்படுவதற்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும், போன்றவை எங்களின் நோக்கம். அதற்கு ஏற்ற வகையிலேயே இந்தக் கதைகள் எழுதப்பட்டன. அந்த இலக்கை நாங்கள் வெற்றிகரமாக அடைந்துவிட்டோம். Target Audience யார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு வெளியிடப்பட்ட படைப்புதான் ‘நான்’. அகராதியில் தேடித் தேடி வார்த்தைகளைப் பொறுக்கிப் போட்டு, கிலோக்கணக்கில் கனக்கும் புத்தகங்களை எழுதி, தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களைப் பயமுறுத்தும் வேலையைச் செய்வதில் எனக்கு ஆர்வமில்லை. அப்படிச் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.
4. மூன்றாவது விஷயம் - வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் சிங்கப்பூரின் வெவ்வேறு வகையான பல இன மக்களையும் கலாசாரத்தையும் வாழ்க்கை முறையையும் கொஞ்சம் சிங்கப்பூர் வரலாற்றையும் காட்டுவதற்கான ஒரு சின்ன முயற்சி என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். அந்த முயற்சிக்குத்தான் விருது கிடைத்தது. விருது கொடுத்தது உங்கள் நாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம். எனக்கு `அடிப்படை அறிவு` இல்லை என்று சொல்வதன் வழியாக அந்த விருதைக் கொடுத்தவர்களுக்கும் அந்த அறிவு இல்லை என்று சொல்ல நினைக்கிறீர்களா?
5. விமர்சனம் என்பது ஒரு படைப்பைக் கடித்துக் குதறுவது அல்ல. (அது வெறிநாய்கள் செய்யும் செயல்.) மாறாகக் குறைநிறைகளைச் சுட்டிக் காட்டி, மேம்படும் வழிகளைச் சொல்வது. ஆங்கிலத்தில், ‘constructive criticism’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள். உங்கள் விமர்சனத்தில் அது எங்கே?
* இந்த நாட்டு அரசும் நிறுவனங்களும் ஊக்கப்படுத்துவதால், விருதுகளும் பரிசுகளும் விரைவிலேயே சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு வந்துவிடுகின்றன என்றும் தமிழகத்து இலக்கிய மேதைகள் கனவு காண முடியாத பரிசுகள் என்றீர்கள். ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி? உங்கள் பாக்கெட்டிலிருந்து பத்துக்காசு குறையுதா? எங்களுக்குக் கொம்பு முளைக்குது, வால் முளைக்குது, உங்களுக்கு என்ன பிரச்சினை? அதோடு, உங்களுடைய இலக்கியப் பார்வையை எங்களுடன் இலவசமாகவா பகிர்ந்து கொள்கிறீர்கள்? எங்கள் நாட்டுப் பணம் உங்களுக்குக் கிடைத்தால் பரவாயில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மிளகாய்தூள் வைத்தது போல எரிகிறதா?
* நான் என்ன வாசிக்கிறேன் அல்லது வாசித்திருக்கிறேனா என்று என் செயல்களுக்கு விளக்கு பிடிப்பதுதான் உங்கள் பகுதிநேர வேலையா? நீங்கள் ஓர் அறிவுஜீவி எனில் உங்கள் அறிவை ‘மூன்று பத்து வெள்ளி’க்கு விற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது.
*“…சூர்யரத்னாவின் கதைகள் எல்லாமே நேரிடையாக நான் என ஆரம்பிக்கின்றன….” – என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ‘நான்’ என்கிறfirst person narrator பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. பயன்படுத்தினேன். ஒவ்வொரு ‘நானும்’ ஒரு பிரச்சினையை எதிர்நோக்கினாலும் அதிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டும் கதைகள் இவை. இவை இந்த நாட்டுக்கே உரிய language, setting, characters முதலியவற்றைக் காட்ட முயற்சித்திருக்கின்றன. இதற்குச் சிறந்த உதாரணம். நீங்கள் உதாரணம் காட்டிய அதே ‘குறையொன்றும் இல்லை’ கதைதான். சிங்கப்பூரின் பழைய ‘பூகிஸ்’ வட்டாரத்தின் வரலாற்றை மீண்டும் வாசகரின் மனக்கண் முன் நிறத்துவதே கதையின் நோக்கமாக இருந்தது. இது கூடத் தெரியாத உங்களிடம் ………….Oh wait! அடுத்த முறை Geylang வட்டாரத்தை மையப்படுத்தி ஒரு கதை எழுதுகிறேன். அது ஒரு வேளை உங்களைக் கவருமோ என்னவோ? நீங்கள் மஞ்சள் காமாலைக் கண்ணோடு இலக்கியத்தை மஞ்சள் நிறத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வெளியே வாருங்கள், உலகம் வண்ணமயமானது.
* சினிமாக்களைத்தான் கதைக்கான கருக்களுக்கு நம்பியிருக்கிறேன் என்று நீங்கள் எந்த ஆதாரத்தில் கூறுகிறீர்கள்? ஒரு ராஜா ராணியிடம் கதையைக் குறிப்பிட்டிருந்தீர்கள். கடைசியிலே that was the best you could do? How lame! சிங்கப்பூர்ச் சூழலைப் பற்றி you know nuts! என்பதை இப்படிக் கடை போட்டுச் சொல்லியிருக்க வேண்டாம்! காரணம், இங்கே கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல், அதிகமாக வெளிநாட்டவர்கள் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர்க் குடிமகனாக மாறியிருந்தவர்களாக இருந்தாலும் சரி, நிரந்தரவாசியாக இருந்தாலும் சரி, இந்திய நாட்டின் தொடர்பு இருக்கும் வரை இங்குள்ள சில இந்தியப் (சிங்கப்பூர்) பெண்களுக்கு, ‘ஊர்க்காரன் வேண்டாம்’ என்ற மறுப்புணர்வு இந்தப் பயத்தின் அடிப்படையில் எழுந்ததே இக்கதை. ஆனால் அத்தகைய ஒரு சூழலை எதிர்நோக்கும் ஒரு சிங்கப்பூர்ப் பெண்ணின் தைரியம்தான் ஒரு ராஜா ராணியிடம் கதை. இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் சிங்கப்பூர் வாழ்க்கையிலிருந்தும் என்னுடைய நேரடி அனுபவத்திலிருந்தும் எடுத்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு கதைக்கும் நீங்களாக ஏன் எதையாவது கற்பனை செய்து அர்த்தம் கூறுகிறீர்கள்? எப்போதிலிருந்து நீங்கள் என்னுடைய mouth piece ஆனீர்கள்?
* “In 2014, Jeyamohan criticized the undue attention that some women writers were cornering without having produced any literary work off merit. This generated a controversy as some activists sought to portray his remarks as misogynist…….”இணையத்தில் உங்களைப் பற்றி ஏற்கனவே வந்திருக்கும் தகவல் இது. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். காவல் அதிகாரிகளிடமும் காட்டினேன். (Misogynist –‘….reflecting or exhibiting hatred, dislike, mistrust, or mistreatment of women….’). உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள் - If you have issues that you can’t handle, please don’t bring your war to my doorstep. And………
“கொக்கென்று எண்ணினாயோ கொங்கணவா?”  முகநூல் பதிவு சூரிய ரத்தினா

கருத்துகள் இல்லை: