வியாழன், 27 அக்டோபர், 2016

நேஷனல் ஜியோகிராபி ஆப்கான் பெண் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத் உலகப் புகழ்பெற்ற, 'நேஷனல் ஜியாகிரபிக்' இதழின் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த, ஷர்பாத் குலா என்ற அந்த சிறுமி குறித்து அதன் பின் எந்தத் தகவலும் இல்லை. படம் வெளியான, 18 ஆண்டுகளுக்குப் பின், 2002ல், ஆப்கானிஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில், குலாவை தேடிக் கண்டுபிடித்தார் மெக்கரி. அப்போது குலாவுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்தது. அதில், குலா, போலியான பெயரில், பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், குலா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு, 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கப்படும்.

அகதிகளால் திணறும் பாக்., : போலி தேசிய அடையாள அட்டைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, இதுவரை வழங்கப்பட்ட, ஒன்பது கோடிக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளின் விபரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதுவரை, 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலி அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.போலி அடையாள அட்டை வழங்கியதாக, 18 அதிகாரிகள் மீது விசாரணை நடக்கிறது; எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும், பாகிஸ்தானில் அகதிகளாக இருந்த, 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள், சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.பாகிஸ்தானில், 14 லட்சம் ஆப்கன் அகதிகள் உள்ளனர்; உலகிலேயே அதிக அகதிகள் உடைய நாடுகளில், பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது என, ஐ.நா., சபை புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. வரும், 2017, மார்ச் மாதத்துக்குள், அனைத்து அகதிகளையும் சொந்த நாட்டுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
அட்டையில் வெளியான, ஆப்கன் பெண், மோசடி வழக்கில், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, 1979ல் சோவியத் யூனியன் ஆக்கிரமித்தது; அப்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள், பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.ஆப்கன் அகதிகளின் சோக வாழ்க்கையை விளக்கும் வகையில், நேஷனல் ஜியாகிரபிக் இதழில், 1984ல் ஒரு கட்டுரை வெளியானது. அந்த இதழின் அட்டையில், 12 வயதுள்ள பச்சை கண்கள் உடைய, ஒரு ஆப்கன் சிறுமியின் படம் வெளியானது. சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அந்த புகைப்படத்தை, புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸ்டீவ் மெக்கரி எடுத்திருந்தார்.  தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: