திங்கள், 17 அக்டோபர், 2016

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத
மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தஞ்சை, கடலூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ரயில் மறியல் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் அஷ்ரப், ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போலீசார் மற்றும் மாநில போலீசாருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படை செயல்படும் என தெரிவித்தார். மறியலால் ரயில் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இது தவிர ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக சென்னையில் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். dinamaalar.com

கருத்துகள் இல்லை: