சனி, 26 நவம்பர், 2016

கிரிமினல் பாபா ராம்தேவின் ஆஷ்ரமத்தில் யானை பலி! 150 ஏக்கர் யானைகள் வசிக்கும் நிலம் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது


செல்வம், செல்வாக்கு இரண்டும் நிறைந்த யோகா குருவாக இந்தியாவில் திகழ்கிறார் பாபா ராம்தேவ். அவருக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவன தளத்தில் யானை ஒன்று குழியில் மாட்டிக்கொண்டு உயிரிழந்ததால், ராம்தேவின் நிறுவனத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தேஸ்பூரின் பாலிபரா பகுதியில் இருக்கும் ஏ.ஐ.டி.சி. காம்ப்ளெக்ஸில் 150 ஏக்கர் நிலத்தை, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஹெர்பல் மற்றும் மெகா ஃபுட் பார்க் நிறுவனத்துக்காக அஸ்ஸாம் அரசு ஒதுக்கியிருந்தது. இந்நிறுவனத்தின் புராஜெக்ட் தளம் ஒன்றில் இருந்த குழியில் சிக்கிய பெண் யானை ஒன்று பல மணி நேரங்கள் துடித்து இறந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் பிரமிளராணி பிரமா, ராம்தேவின் நிறுவனத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமென வனத்துறை அதிகாரிகளை வலியுறுத்தியிருக்கிறார்.

புதன் அன்று, தன் குட்டி குழியில் விழுந்த பிறகு 10 அடி ஆழம் இருக்கும் குழியில் பெண் யானையும் விழுந்திருக்கிறது. அதன் பின்னே, ஆண் யானை ஒன்று இதன் மீது விழ, யானைக்கு தலையில் காயமும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஆண் யானை சமாளித்துக் கொண்டு வெளியே வந்த பிறகும், பெண் யானையால் வெளியே வர முடியவில்லை. குட்டி யானையை அதிகாரிகள் காப்பாற்றினாலும், சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழந்திருக்கிறது. “இந்த துயரமான சம்பவம் யானைகள் அதிகமாக நடக்கும் பகுதியில் நடந்திருக்கிறது. ராம்தேவுக்கு அஸ்ஸாம் அரசு ஒதுக்கிய நிலமே யானைகளின் வசிப்பிடமான காட்டுப்பகுதிக்குள் என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் சர்ச்சை. இது தொடர்பாக உள்ளூர் மக்கள் எவ்வளவோ முறை எச்சரிக்கை விடப்பட்டும் விதிகளை மீறி இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும் என அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு புராஜெக்ட் நடத்திக் கொண்டிருப்பவர்கள் அதிக எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய குழியை கவனித்துக் கொள்ள ஏன் யாரும் நியமிக்கப்படவில்லை. இது முற்றிலுமான அலட்சியத்தையும், பொறுப்பினமையுமையே காட்டுகிறது. இந்த விஷயத்தை வெகு சாதாரணமாக நினைத்து விட்டார்கள்” என அமைச்சர் பிரமா பதஞ்சலி நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். சம்பவ இடத்தில், நவம்பர் ஆறாம் தேதி அஸ்ஸாம் முதலமைச்சர் தன் அமைச்சரவை உறுப்பினர்களோடு பதஞ்சலி நிறுவன புராஜெக்டுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: