ஞாயிறு, 20 நவம்பர், 2016

மனோகர் பரிக்கர் :ஏ.கே. 47 வைத்திருப்போர் சுட்டுக் கொல்லப்படுவர்! ஆனா RSS காரய்ங்க மட்டும் வச்சுருக்கலாம்ல?

நாட்டின் நலன் கருதி ஆளும் மத்திய அரசு, பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். கோவாவில் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மனோகர் பாரிக்கர், ‘ஏ.கே.47 ரக இயந்திரத் துப்பாக்கியை வைத்திருப்பவர்களை சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படைகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இதை வைத்திருப்பவர்களுக்கு நல்ல நோக்கம் எதுவும் இருக்க முடியாது. அவர்களால் நிச்சயம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு ஏற்படுவது உறுதி.
ஆகவே, அப்படியொரு அதிரடி முடிவை எடுக்கவேண்டியிருந்தது. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தைரியமான முடிவை எடுத்தபின்னர், இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதலை முன்னெடுத்தது. 1986ஆம் ஆண்டு போபர்ஸ் ஊழல் நடந்தபின்னர், காங்கிரஸ் அரசு பாதுகாப்புப் படைக்கு என புதிய ரக ஆயுதங்கள் எதையும் வாங்கியது கிடையாது. சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தற்போது, தானியங்கி ஏவுகணைகள் மற்றும் ராணுவத்துக்குத் தேவையான பிற உபகரணங்களை வாங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின்கீழ் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கும் ஒப்புந்தம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக போர் விமானம் கப்பற்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்று பிரதமர் மோடி, தொடர்ச்சியாக தைரியமான முடிவுகளை எடுத்து வருகிறார். இப்போது கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நடவடிக்கையானது பொதுமக்களை ஏமாற்றியவர்களையே பாதிக்கும். கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: