வெள்ளி, 25 நவம்பர், 2016

500, 1000 நோட்டுகள் ஒழிப்பை ஆதரிப்பதா..? நடிகர் மோகன் லாலுக்கு கடும் எதிர்ப்பு!


Political parties condemned Mohan Lal's pro demonetisationதிருவனந்தபுரம்: 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை ஆதரித்த நடிகர் மோகன்லாலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை மலையாள நடிகர் மோகன்லால் வரவேற்புத் தெரிவித்தார். தேச நலனுக்காக எடுக்கப்பட்ட நல்ல முடிவு என்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் மக்கள் கியூவில் நிற்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுவதை அவர் கண்டித்தார். மதுபான கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கியூவில்தானே நிற்கிறார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
மோகன்லால் கருத்துக்கு கேரள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கேரள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவரான பன்யன் ரவீந்திரன் திருவனந்தபுரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், "1000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை மோகன்லால் ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
மோகன்லால் நடித்த அனைத்து படங்களையும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் வெற்றி பெற வைக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை உங்கள் படங்களைப் பார்க்கச் செலவிடுகிறார்கள். அந்த மக்கள் மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை அவமதிப்பதுபோல் பேச வேண்டாம்," என்று கண்டித்துள்ளார்.
அமைச்சர் கண்டனம்
இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள அமைச்சர் மணி பேசுகையில், "மோகன்லாலுக்கு நரேந்திர மோடி மீது திடீர் காதல் பிறந்திருக்கிறது. இதற்கு காரணம் அவரிடம் இருக்கும் கருப்பு பணம்தான். கறுப்புப் பணத்தை மோடி மூலம் வெள்ளையாக்கத்தான் இந்த திடீர் காதல்," என்றார்.
கேரள காங்கிரஸ் துணைத் தலைவர் சதீசன் கூறும்போது, "மோகன்லால் சாதாரண அடித்தட்டு மக்களின் பாதிப்பை உணராமல் பேசுகிறார். மோடி நடவடிக்கையால் நடுத்தர மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். கோவில்கள், மதுக் கடைகளில் வரிசையில் நிற்பதும், தன் சொந்தப் பணத்தை எடுக்க வரிசையில் நிற்பதும் ஒன்றாகுமா?" என்றார். tamioneindia.com

கருத்துகள் இல்லை: