வெள்ளி, 25 நவம்பர், 2016

எதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்றுக் கூச்சல்களே; ரூபாய் நோட்டு போராட்டம் பற்றி Paytm முதலாளி கருத்து…

1thetimestamil.com :ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் செல்லாதவை என்று ஒரு நாளின் இரவில் வெளியிடப்பட்ட அறிவிப்பால், பெரும்பான்மை இந்தியா தெருவில் நின்று கொண்டிருக்கிறது.
வங்கிகளில் இருப்பில் இருக்கும், தங்களுடைய, முறையான வரி கட்டிய சொந்தப்பணத்தை எடுக்கமுடியாமல், 70-கும் அதிகமானவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத பிரதமர், பாராளுமன்றத்திற்கு வராமல் தவிர்க்கிறார். அப்படியே வந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அதற்கு பதிலாக, அவருடைய NMapp-ல் கேள்வி  கேட்டு, ஆண்ட்ராய்ட் வைத்திருக்கும் மக்கள் மட்டுமே வாக்களிக்கும்படியான கருத்துக்கணிப்புகளைநடத்துகிறார்,.

இது போன்ற சூழலலை வைத்து , தன்னுடைய வியாபாரத்தை செழிப்பாக்க முனைந்திருக்கும் Paytm நிறுவனம், பிரதமரை பாராட்டி முழு பக்க அளவில் விளம்பரங்கள் செய்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
செல்லாத நோட்டுக்கள் காரணமாக Paytm நிறுவனத்தின், ஒரு நாளைய வியாபாரம் என்பது 120 கோடியை தாண்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுடைய நான்கு மாத வியாபார இலக்கை, இந்த ஒரு மாதத்திலேயே கடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் Paytm  நிறுவன “முதலாளி” விஜய் ஷேகர் ஷர்மா NDTV-க்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் “ஸ்மார்ட்போன் என்கிற ஒன்று மட்டும் இருந்துவிட்டால், அனைத்தையும் நாம் மாற்றி விட முடியும்” என்று கூறியுள்ளார்.
paytm-founder-PTI-L.jpg
செல்லாத நோட்டுக்கள் தொடர்பான அறிவிப்பால் விளையப்போகும் நன்மைகளை யோசித்தால், இந்த எதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்று கூச்சல்களாக தோன்றும்.  இப்போதைய வலி என்பது எதிர்காலத்தில் விளையப்போகும் மிகப்பெரும் லாபத்திற்கான அடித்தளம்” என்றும் Paytm  நிறுவன “முதலாளி” விஜய் ஷேகர் ஷர்மா குறிபிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: