திங்கள், 5 டிசம்பர், 2016

பன்னீர்செல்வம் முதல்வர்.. சசிகலா பொதுசெயலாளர் .. அதிமுக பொதுகுழு தீர்மானம் !

அதிமுக எம் எல் ஏக்கள் யாரும் பஜகாவினருடன் பேசகூடாது .எந்த  பாஜகவினராவது பேசுவதற்கு  அணுகினால் உடனே அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. மேலும் எல்லா அதிமுக எம் எல் ஏக்களையும் கடும் கண்காணிப்பு வளையத்துக்குள் திவாகரன் ,நடராஜன்(சசிகலா) போன்றோர் வைத்திருப்பதாக தெரியவருகிறது .ஒரு மாநிலத்தின் முதல்வர் மரண அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constutional law சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன.
மேலும் இது பற்றிய வேறு சில தகவல்கள்: இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம்…ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும்.
பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும் . பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படுத்துவர்.
மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தடுத்து, மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துக்கொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நடு இரவு அல்லது வெடியற்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் சொல்லுவார்.
இது தான் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுது நடந்தது. இதே விஷயத்தை தான் தற்பொழுதும் கடைபிடிப்பார்கள். முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: