திங்கள், 5 டிசம்பர், 2016

சசிகலா தலைமையில் அவசர கூட்டம்!


இன்று காலை ஆறு மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா தங்கி இருக்கும் அறைக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முதலில் சென்றார்கள். அவர்களை தொடர்ந்து தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், முன்னாள் காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரும் சசிகலா அறைக்கு சென்றார்கள். அவர்களுடன் கிட்டதட்ட ஒரு மணிநேரம் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. சரியாக 7.30 மணிக்கு சசிகலா அறையில் இருந்து நால்வரும் வெளியே வந்தார்கள். ராமானுஜமும், ராம்மோகன் ராவும் தனியாக ஒரு அறையில் பேசிக் கொண்டு இருந்தார்கள். எடப்பாடியும் பன்னீரும் தனியாக ஏதோ ஆலோசனை செய்தார்கள். அமைச்சர்கள் அனைவரும் தரை தளத்தில் உள்ள ரிசப்சனில் காத்திருந்தார்கள். அவர்களுக்கு யாரிடம், என்ன கேட்பது என்று புரியவில்லை. தொடர்ந்து வந்தபடியே இருக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு, ‘நல்லா இருக்காங்க...’ என்ற ரிப்பீட் பதிலையே சொன்னபடி இருக்கிறார்கள். மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: