திங்கள், 5 டிசம்பர், 2016

புதிய இடைக்கால முதல்வர் இன்று அறிவிக்கப்படும்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றமில்லாததைத் தொடர்ந்து, அவரது உடல் நிலை தேறும் வரை ஒரு இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை இன்று பிற்பகலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பார் என தகவல் பரவியுள்ளது. கடந்த 74 நாட்களாக தொடர் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. New Interim CM for Tamil Nadu?  இதைத் தொடர்ந்து மாநிலம் முழுக்க பரபரப்பும் இறுக்கமான சூழலும் நிலவுகிறது. ஜெயலலிதா நலம் பெற்று வரவேண்டும் என்ற பிரார்த்தனைகள் நாடு முழுவதும் தொடர்கின்றன. இந்த சூழலில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க, உடனடியாக பொறுப்பு அல்லது இடைக்கால முதல்வரை அறிவிக்க ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலிருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆளுநர் பேசி வருகிறார். முதல்வரை அருகிலிருந்து கவனித்து வரும் சசிகலாவுடன் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர். இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மூன்று முறை சசிகலா தங்கியுள்ள அறையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. இன்று பிற்பகல் அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, புதிய இடைக்கால முதல்வர் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.tamiloneindia.com

கருத்துகள் இல்லை: