சனி, 16 ஜனவரி, 2016

தடையை மீறி மஞ்சு விரட்டு..போலீசார் தடுத்ததால் பாலமேட்டில் பரபரப்பு ! மக்கள் காளைகளை அவிழ்த்து...

மதுரை: பாலமேடு அருகே தடையை மீறி வட மஞ்சு விரட்டு நடத்தியதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைவிதித்து. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. Near Palamedu despite the ban of jallikattu மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.40 கோடி வரை விலையா?- ராமதாஸ் சந்தேகம்

கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ள பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிகளில் உடனடியாக புதிய வேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும், புதுமைகள் படைப்பதற்கும் அடிப்படைத் தேவை ஆரோக்கியமான, கல்வி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளைப் போல முடங்கிக்கிடக்கின்றன.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இத்தனை பல்கலைக்கழகங்கள் தலைமை இல்லாமல் தடுமாறும் அவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

கலைஞர்: கச்சா எண்ணெய் 105 டாலரில் இருந்து 30 டாலராக குறைந்தும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்க மறுக்கிறார்கள்?

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி உயர்வை உடனடியாகக்
குறைப்பதற்கு மத்திய அரசு முன் வர வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பெட்ரோல், டீசலுக்கு எத்தனை முறை தான் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தப் போகிறதோ? அதனை ரத்து செய்ய முன் வராத மத்திய அரசு, ஒரு மாதக் காலத்திற்குள்ளேயே மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை உயர்த்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 30 அமெரிக்க டாலர் தான் என்ற அளவுக்கு உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இன்னமும் 65 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்ற விலையில் தான் நிலைமை உள்ளது.

ஜெயலலிதா :என் அர்ப்பணிப்பு வாழ்வை எடுத்துக்கூறி (முடியல்ல) தேர்தல்பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெ. கடிதம்

இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக, அனைத்துத் தரப்பு
மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து வழங்கி வரும் எனது தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மடல் வழியாக என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு விஷம்தான் காரணம்..சசிதரூரின் மனைவி

டெல்லி:காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான />இந்த சூழலில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பலத்த சந்தேகங்களை உருவாக்கியது. சுனந்தாவின் உடல் பிரேத பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவமனை நடத்தியது. பிரேத பரிசோதனை குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் சுதீர் குப்தா கூறுகையில், சுனந்தாவிற்கு இயற்கைக்கு மாறாக உடனடி மரணம் நேரிட்டுள்ளது. அவரது உடலில் சில காயங்கள் இருந்தன. ஆனால் இந்த காயங்களுக்கும், அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

எவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்படை’ என்று..மதிமாறன்

மிகக் கொடூரமாக அமைந்துவிட்டது இசைஞானி யின்ஆயிரமாவது படம். அவருக்கு மட்டுமா? நேற்று இரவு எனக்கும் தான். பொங்கல் எனக்கு இப்படியா விடிய வேண்டும்? இசைஞானியாலும் நமக்குக் கெடுதல், அவரால் இந்த மாதிரி படங்களையும் நாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு வகையில் என் நிலைமையாவது பரவாயில்லை. இசைஞானி இளையராஜா வின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. பாவம். ரீ ரெக்கார்டிங்காகத் தாரை தப்பட்டை யின் கொடூரக் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாரோ?
அவுரும் வழக்கம்போலச் சிறப்பா வாசிக்கிறாரு.. பாடலும், பின்னணி இசையும் ஒட்டல. துறுத்திகிட்டு நிக்குது. குறிப்பா கர்நாடக சங்கீத பாணியிலான பாடல்கள்.

மே.வங்கத்தில் காங்கிரஸ் கம்யுனிஸ்டு கூட்டணி? மம்தா பானர்ஜியை நம்பமுடியாது என காங்கிரஸ்...

கோல்கட்டா: 'துரோகி' திரிணமுல் காங்கிரசை வீழ்த்த, 'எதிரி' மார்க்சிஸ்டுடன்
கைகோர்ப்பதில் தவறில்லை' என, கட்சி காங்கிரஸ் மேலிடத்தை, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, இந்த மாநிலத்தில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், 34 ஆண்டுக்கு மேல், தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் அரசை, 2011ல் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வியடைய செய்தது; அப்போது, மம்தாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இப்போது, நடக்க உள்ள தேர்தலில், மம்தாவை வீழ்த்த, மார்க்சிஸ்டுடன் கைகோர்க்க காங்கிரஸ் துடிக்கிறது.  நாம என்னதாய்ன் பண்றது?   மம்தா , மாயா, ஜெயா, ஷீலாதீட்சித் , உமாபாரதி ,சுஷ்மா சுவராஜ்  இவக எல்லாரும் மனிதர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மரியாதை கொடுக்கிற சுபாவம் கொண்டவங்க , சிறந்த ஜனநாயக வாதிங்கம்ம்ம் உண்மைய சொன்னாக்கா ஆணாதிக்க வாதின்னு சொல்லிடுவாய்ங்க .....நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்குங்க

யார் கவர்ச்சியாக நடிக்கவில்லை? இனியா...

ஜி. அசோக்:  வாகை சூட வா', "மௌன குரு', "அம்மாவின் கைப்பேசி' என
கதைகளுக்கான கதாநாயகியாகப் பங்கெடுத்து வந்தவர் இனியா. ஆனால், இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே உலா வருகிறார். சமீபத்தில் வெளியான "கரையோரம்' படத்துக்கான புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தவரிடம் பேசியதிலிருந்து..நல்ல சினிமாவுக்கான நடிகை என்ற அடையாளம் அவ்வப்போது தென்பட்டு வந்தது... ஆனால், இப்போது...?
"வாகை சூட வா', "மெளனகுரு', "அம்மாவின் கைப்பேசி' ஆகிய படங்களுக்குப் பின் கதாநாயகியாக நடிக்கவில்லை. ஆனால், "வாகை சூட வா' தொடங்கி இப்போது நடித்த "கரையோரம்' படம் வரை... நான் நடித்த எல்லாப் படங்களுமே நல்ல படங்கள். பணத்துக்காக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. அப்படிப் பார்த்திருந்தால் ஹீரோயினாக எல்லாவிதப் படங்களிலும் நடித்திருக்க முடியும்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

Disempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்பவர்கள் உங்கள் அருகிலேயே...

Disempower என்பது ஒருவருக்கு உரிய உரிமையை அல்லது சக்தியை நாம்
பறித்தெடுப்பது என்று கூறலாம்
இந்த சொல் Dis Em powering நமது சமுகத்தில்  மிக அழுத்தமாக மாற்றவே முடியாத அளவு அல்லும் பகலும் நடை பெரும் ஒரு சமாசாரம் தான் . அநேகமானோர் பிறருக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்று உண்மையில் அவர்களது சுயத்தை பறிமுதல் செய்யும் காரியத்தை தான் செய்கிறார்கள் .
வாழைபழத்தை உரித்து வாயுக்குள் வைத்தல் உதவி அல்ல
கேட்ட உடனேயே அவற்றை நிவர்த்தி செய்து விடுவது உதவி அல்ல .
அவரே தனக்கு வேண்டிய வாழைப்பழத்தை தான் விரும்பிய நேரத்தில் தான் விரும்பிய விதத்தில் பிறரின் நேர்முக அல்லது மறைமுக வற்புறுத்தல் எது மின்றி உண்பதற்கு நாம் செய்யும் வசதிகளை தான் உதவி என்று கூற முடியும்
தனது சுயத்தை இழந்த மனிதரால் ஒரு போதும் நல்ல ஒரு படைப்பை  ஒரு போதும் உருவாக்கவே முடியாது . சுயம் இழந்த மனிதர் தனது சுயம் எது என்று தேடி திணறுவதிலேயே வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது .
இந்த சுயம் இழந்த மனிதர்கள் நல்ல வெற்றிகரமான மனிதர்களாக முடியாது என்று கூற முடியாது  .

இளையராஜாவின் 1000 ஆவது அட்டகாசம் தாரை தப்பட்டை

சென்னை: சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கரகாட்ட கலையை மையமாகக்கொண்டு இன்று வெளியாகி இருக்கும் படம் தாரை தப்பட்டை. இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம் என்ற பெருமையுடன் வெளியாகி இருக்கும் தாரை தப்பட்டை படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்நிலையில் தணிக்கைக் குழுவினரால் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட தாரை தப்பட்டை ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.
தாரை தப்பட்டை படத்தின் முதல் பாதி கதை மிகவும் பழமையாக இருக்கிறது, இரண்டாவது பாதிக்காக காத்திருக்கிறேன்" என்று கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

தமிழக முதல் சீர்திருத்த திருமணம் செய்த சம்பூரணத்தம்மாள் காலமானார்..12.10.1941-ல் அண்ணா தலைமையில்

அண்ணா தலைமையில் 1941-ல் சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட சம்பூரணத்தம்மாள் (95), திருச்சியில் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார்.
திருச்சி திருவானைக்கா துரைசாமி தோட்டத்தில் 12.10.1941-ல் சின்னையா- சம்பூரணத்தம்மாள் ஆகியோருக்கு சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.
பெரியார் வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டில் அண்ணா நடத்தி வைத்த முதல் சீர்திருத்த திருமணம் அது. இவர்களது மகன்கள் இளங்கோவன், தமிழ்மணி, புகழேந்தி மற்றும் மகள் மணி மேகலை. இவர்களில் இளங்கோ வன் ஏற்கெனவே காலமாகிவிட் டார். கள்ளக்குறிச்சி முன்னாள் திமுக எம்எல்ஏ கேசவலுவின் மனைவிதான் மணிமேகலை. 24 ஆண்டுகளுக்கு முன்பே சின்னையா இறந்துவிட்டார்.

வைகோ : தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி...

மதுரை ஒத்தக்கடை நான்குவழிச் சாலையில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் நிர்வாகிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. மதுரை ஒத்தக்கடை நான்குவழிச் சாலையில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் நிர்வாகிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் பிரமிக்கத்தக்க மகத் தான திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது.

நல்லகண்ணு : இதெல்லாம் கூட்டு அல்ல தேர்தல் கூட்டணி மட்டுமே...சாமி முன்னேறிட்டீங்க..

நல்லகண்ணு ‘நச்’ பேட்டிஆ.விஜயானந்த், படங்கள்: கே.ராஜசேகரன்சென்னை சி.ஐ.டி காலனியில், குடிசை மாற்றுவாரிய வீட்டின் முன்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. வீட்டில் இருந்த பழைய மரக் கட்டில், பீரோ உள்ளிட்ட மரச்சாமான்களை, பழுதுநீக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. மழை வெள்ளம், நல்லகண்ணு வீட்டைப் புரட்டிப்போட்டதன் அடையாளம் அவை.
வெள்ளத்தில் தத்தளித்த நல்லகண்ணுவை மீட்க, படகு ஒன்று வந்தது. அப்போது, ‘நீரில் சிக்கிப் பரிதவிக்கும் எல்லா மக்களையும் மீட்டு விட்டு என்னிடம் வாருங்கள். அப்போதுதான் வருவேன்’ எனப் பிடிவாதம் பிடித்தார். அவர்தான் நல்லகண்ணு. தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றின் பங்கேற்பாளராகவும், சாட்சியாகவும் இருக்கும் நல்லகண்ணுவிடம் நெடுநேரம் பேசியதில் இருந்து...

மெரினாவில் ”காணும் பொங்கல்” குழந்தைகளுக்கு ”போன் நம்பர் வளையம்”- காவல்துறை!

சென்னை:
பொங்கல் விழாவிற்கு மெரினாவிற்கு வரும் குழந்தைகளின் கைகளில் போன் நம்பர் அடங்கிய வளையம் மாட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகள் மாயமானால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய் விடுவார்கள். அவர்களை தேடிக் கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு சிரமமாகவே இருந்து வந்தது. மாயமாகும் குழந்தைகள் எங்காவது அழுது கொண்டிருக்கும். அவர்களை யாராவது பார்த்து போலீஸ் உதவி மையத்தில் கொண்டு போய் விடுவார்கள்.

மத்தியஅரசின் சோலார் மின்சார திட்டம் தமிழகத்துக்கு கோவிந்தா...அதிமுகவுக்கு கமிஷன் கிடைக்கலையா ? ஆந்திராவுக்கு செல்கிறது

தேசிய அனல் மின் கழகமான, என்.டி.பி.சி.,யின் பிரம்மாண்ட சூரிய சக்தி மின்
நிலையத்தை, தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து, மானியம், கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. 'ராஜஸ்தான், தமிழகம், குஜராத் மற்றும் ஜம்மு - காஷ்மீரில், பிரம்மாண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அரசு, 2014ல் அறிவித்தது.தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்கள், மத்திய அரசிடம் நிதி பெற்று, சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து வருகின்றன. ஆனால், தமிழகம் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் உள்ளது.  45% கமிஷன் கிடைத்து இருக்காது. 1000 கோடி ப்ராஜக்ட் போனா என்னா, சூரிய மின்சாரம் இல்லன்னா என்ன?

திமிங்கிலங்கள் 1973 ஆம் ஆண்டும் இதே திகதியில் தமிழக கரையில் ஒதுங்கின...தற்கொலையாக இருக்கலாம் சந்தேகம் வலுக்கிறது

1973 ஆம் ஆண்டும், இப்போதும் ஒரே தேதியில் திமிங்கிலங்கள் தமிழக
கரையொதுங்க என்ன காரணம்?கடந்த இரு நாட்களில் தமிழகத்தின் தென்பகுதி கடலோரம் கரையொதுங்கி உயிரிழந்துள்ள திமிங்கிலங்களின் எண்ணிக்கை எழுபதை தாண்டி அதிகரித்துள்ளது. தமிழக தென்கடலோரத்தில் திமிங்கிலங்கள் இப்படி கூட்டமாக வந்து உயிரிழப்பது இது முதல்முறையல்ல.
இதற்கு முன்பு 1973 ஆம் ஆண்டும் இதேபோல திமிங்கிலங்கள் கூட்டமாக கடற்கரையின் இதே இடத்தில் வந்து இறந்தது ஏன் என்கிற கேள்விக்கான பதில் தேடுவது கடல்வாழ் உயிரியல் துறை முன் இருக்கும் மிக முக்கிய சவால் என்கிறார் கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புகான இந்திய வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமரன் சதாசிவம்.

சோ: அதிமுகவில் நிறைய நிறைகள் உள்ளது... திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறக்கூடாது.....மதுவிலக்கு சாத்தியம் இல்லை....EX டாஸ்மாக் தலைவர் வேற எப்படி பேசுவார்?

சென்னை: ஓட்டுக்களை சிதற விடக்கூடாது திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 46-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. உடல் நலம் குன்றிய நிலையிலும் சோ ராமசாமி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் அவர் பேசியது: வெள்ள நிவாரணத்தில் தமிழக அரசு ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் குறைகள் இருந்தாலும் நிறைய நிறைகள் இருக்கின்றன. பார்ப்பான் படுத்தாலும் பார்ப்பாந்தாய்ன்...நஞ்சுன்னாலும் அப்படிப்பட்ட நஞ்சு. எந்த பினாயில் போட்டு கழுவினாலும் போகாத அழுக்கு 

வியாழன், 14 ஜனவரி, 2016

பொன்.ராதாகிருஷ்ணன் : இறைச்சிக்காக அடிமாடாக கொண்டு செல்வதை பீட்டா தட்டிக் கேட்கல....ஜல்லிகட்டு மட்டும் கேவலமாகிவிட்டதா?

கடலூர்: பல லட்சம் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதையோ அடிமாடாக கொண்டு செல்வதையோ பீட்டா போன்ற அமைப்புகள் தட்டிக் கேட்காமல் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்க போராடுகிறது என்று சாடியுள்ளார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். Pon. Radhakrishnan condemns கடலூரில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஜல்லிக்கட்டு அனுமதிக்காக அனைத்துவித ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

எம் எஸ்.சுப்புலட்சுமியின் பாடல் காப்பிரைட்...அவா வித்துட்டா...இனி இலவசமா கேட்கமுடியாது...

பலரும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பிராமணர் என்று தவறாக
எண்ணுகின்றனர் . உண்மையில் சுப்புலட்சுமி ஒரு இசைவேளாளர் குடுபத்தை சேர்ந்தவர், வீணை வாத்திய விற்பன்னர்  மதுரை சண்முகவடிவு அவர்களின் மகள்தான் சுப்புலக்ஷ்மி.  இவரின்  இசை திறமையையும் அழகையும் அப்படியே கபளீகரம் செய்த சதாசிவம் அய்யர் இரண்டாவது திருமணமாக சுப்புலட்சுமியை திருமணம் செய்தார் .அவரின் பணத்தில்தான் கல்கி பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது, அந்த பத்திரிக்கை பின்பு பிராமண பத்திரிகையாகவே  உருமாறி போனது வேதனை. தமிழர் வரலாறும் முழுவதும் இப்படிபட்ட சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டே வருகிறது,இப்போது
காசுக்கு ஆசைப் பட்டு எம்.எஸ்.குடும்பம் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை விற்று விட்டது மிக கேவலமான செயல் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை மறைந்த பாடகி எம்.எஸ். அவர்கள் பாடி அது இன்றும் பல கோடி இந்து மக்கள் வீட்டில் காலையில் ஒலிக்கிறது.

நடிகர்கள் அம்பாசிடர் டிக்கியில் நகையையும் பணத்தையும்... வீடுகளில் நிலவறை! பல நடிகர்கள் கணக்குக்கு வராத...

சென்னையில் பல நடிகர்கள் வீடுகளில் நிலவறை உள்ளது. இரண்டாவது பல
நடிகர் நடிகைகள் இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் சாதாரண அம்பாசிடர் காரில் டிக்கியில் நகையையும் பணத்தையும் போட்டு சும்மா சுற்ற விட்டுக் கொண்டிருப்பார்கள்.
அவ்வப்பொழுது டிரைவருக்கு போன் செய்து ‘அதை வாங்கி வா இதை வாங்கி வா’என்று சொல்வார்கள்.டிக்கியில் என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாதாம்.
சரிதான்.
அடப் பாவிகளா,அந்த காரை நோட்டம் போட்டு ஒருத்தன் திருடினா என்னடா செய்வீங்க?  vadhini.com

மந்திரி தந்திரி வழக்கு கலைஞர் நேரில் ஆஜாரக முடிவு. ஜெயலலிதா பற்றிய ஆனந்தவிகடன் எழுதிய...

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் 18-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தானே நேரில் சென்று ஆஜராவதென முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜெயலலிதா நான்காண்டு காலத்தில் சாதித்தது என்ன என்று "ஆனந்த விகடன்" 25-11-2015 தேதிய இதழில், வெளியிட்ட கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை நான் அப்படியே எடுத்து அறிக்கையாக 21-11-2015 வெளியிட்டிருந்தேன்.
அந்த கட்டுரையை நான் எடுத்துக் காட்டியதற்காக, என் மீது அவதூறு வழக்கு ஒன்றை இந்த ஆட்சியினர் தொடுத்திருக்கின்றனர்.

கேரளாவுக்கு அடிமாட்டுக்கு சென்ற மாடுகளை பிடித்து போராட்டம் ( படங்கள் )

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பால்கேரளாவுக்கு அடிமாட்டுக்கு சென்ற>மாடுகளை பிடித்து போராட்டம் ( படங்கள் )தமிழகத்தில் ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு விலங்கின ஆர்வலர்கள் காளைகள் துன்புருத் தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிகட்டு நடத்துவதற்கு தடை பெற்றனர். இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.  இந்தாண்டு போட்டிகள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல அமைப்புகள் மத்திய மாநில அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக ஒரு அரசானையை பிறப்பித்தது. இந்த அரசானைக்கு எதிராக விலங்கின ஆர்வலர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு தடைபெற்றனர். இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே போன்று புதுக்கோட்டையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது.

சுவிடன் இசை நிகழ்ச்சியில் பாலியல் தாக்குதல் ...அராபிய அகதிகள் அட்டகாசம்.


ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் சில காலம் முன்பாக நடந்த இசை நிகழ்ச்சி
ஒன்றில், பெரும்பாலும் குடியேறி இளைஞர்களால் பெண்கள் மீது பரவலான பாலியல் தாக்குதல் நடந்ததாகத் தெரியவருகிறது. அந்நேரம் வந்த புகார்கள் பற்றி வெளியில் சொல்லத் தவறியதற்காக ஸ்வீடன் பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. bbc.tamil.com

ஜல்லிகட்டு தடை...தமிழ்நாட்டுக்கு என்ன செய்தியை சொல்கிறது?

ஜல்லிக்கட்டுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டதைத் தொடர்ந்து,
தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், 'மாநில அரசே அவசர சட்டம்வர முடியும்.அப்படி தமிழக அரசு, அவசர சட்டம் கொண்டு வருமானால், அதற்கு, மத்திய அரசும் முழு ஆதரவாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.'தடையை மீறுவோம்...' மாடுபிடி வீரர்கள் ஆவேசம்: 'ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதி கிடைக்கவில்லை எனில், திட்டமிட்டபடி, ஜல்லிக்கட்டை நடத்துவோம்' என, மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். மாடுபிடி வீரர்கள் கூறியதாவது:

PETA..ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் ‘பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! – அதிர்ச்சி பின்னணி


PETA ஜீவகாருண்யம் பேசும் பேட்டா அமைப்பு 1998 இல் இருந்து இதுவரை  19,200 நாய்கள் பூனைகளை கொன்று குவித்துள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் சுமார்  320 மில்லியன் டாலர்கள் செலவில் கொன்று எரிக்கும் கம்பனிக்கு ஒப்பந்தம் மூலம் கொடுக்கபடுகிறது
தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,  விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ (PETA – People for the Ethical  treatment of animals ) இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறது.
” ஜல்லிக்கட்டு” என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுள்ள பீட்டா நிறுவனத்தின் மறுமுகத்தைம்   ‘ஹாஃபிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகை  அம்பலப்படுத்தியுள்ளது. அதன் சுருக்கமான விவரம் இது…
யார் இந்த PETA?

புதன், 13 ஜனவரி, 2016

SMS தகவல்.....கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துக்கொண்டு செல்ல தேவையில்லை

கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டு, போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பவரா நீங்கள்? இனி கவலை வேண்டாம். மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இ-வாகன் பீமா என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி வாகனங்களுக்கான காப்பீடுட்டு நடைமுறைகள் முழுவதும் டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனால் வாகனங்களுக்கான காப்பீட்டு ஆவணங்கள் வாகன உரிமையாளரின் ஸ்மார்ட் போனுக்கு மின்னஞ்சலாக அனுப்பப்படும். மின்னஞ்சல் வசதி இல்லாதவர்களுக்கு குறுஞ்செய்தி வடிவில் அனுப்பப்படும். மேலும் க்யூ.ஆர். குறியீடு ஒன்றும் கொடுக்கப்படும். இந்த க்யூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் காப்பீட்டு விபரங்களை அதிகாரிகள் தெரிந்துக்கொள்ள முடியும்.

தடையை மீறுமா ஜல்லிக்கட்டு காளை? மீறக்கூடிய சாத்தியம் அதிகமாக தெரிகிறது....வாழ்த்துக்கள்

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு வாய்ப்பு குறைவு! மூத்த வழக்கறிஞர் விஜயன்:பிராணிகள் வதைச் சட்டப் பிரிவு, 3, 11 மற்றும், 22ன் படி, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. சட்டப் பிரிவு - 3, 11 ஆகியவை பிராணிகள் வதை, காயம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கின்றன. சட்டப் பிரிவு - 22, பிராணிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதில், 22க்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது; 3 மற்றும், 11வது பிரிவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் ஆணையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், 3 மற்றும், 11வது சட்டப் பிரிவுகளை மையமாக வைத்து, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சதியில் உச்ச நீதிமன்றமும் பங்கு பெற்றுள்ளது.....எல்லா கேசும் வருடக் கணக்காக இழுப்பாங்க....ஆனா, இந்த வழக்கு மட்டும் ஒரே நாளில் விசாரணைக்கு வருது, தீர்ப்பு கொடுக்குறாங்க?...எல்லாமே முன்கூட்டி திட்டமிட்ட மாதிரியே இருக்கு?....

ஒருத்தன கூட உயிரோட விடக்கூடாது: மாணவர்களை சரமாரியாக அடிக்கும் கல்லூரி ஆசிரியர்


ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் வெளியே சென்று வந்தததற்காக, ஆசிரியர் ஒருவர் கதவை சாத்தச் சொல்லி மாணவர்களை தாக்கியுள்ளார். மேலும், ஒருத்தனக் கூட உயிரோட விடக்கூடாது. அடிச்சு கொல்லுங்க என சத்தமாக பேசுவதம் வீடியோவில் பதிவாகி உள்ளதால், வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.nakkheeran,in

சிம்புவின் அத்தனை அடாவடிகளையும் நியாயபடுத்திவரும் பெற்றோரே குற்றவாளிகள்

வாழ்க்கையில் பலரால் ஏளனம் செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தன் விடாமுயற்சியால் தொடர்ந்து போராடி வென்ற டி ஆர், தன் மகனையும் தன்னைப்போல் போராடி பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி தன் சொந்த உழைப்பால் முன்னேற்றம் அடைய வைக்காமல் தனது கடும் உழைப்பால் பெற்ற அமுதத்தை, அது அமுதம் என அவரது மகன் உணர்வதற்கு முன்பே ஸ்பூனால்  ஊட்டி வளர்த்தார். அதன் விளைவே இன்று அவர் தன் மகன் பொருட்டு தமிழகத்து தாய்மார்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலையோ என வருந்த வைக்கிறது. பெற்றோர்களுக்கு பீப் சாங் தரும் எச்சரிக்கை! சமூகத்தில் கவனம் செலுத்துவதற்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. பீப் சாங்கிற்கு பொருள் விளக்க அகராதி எழுதுவது  நோக்கம் அல்ல. அது ஆபாசமான பாடலா, இல்லையா? இதற்கு முன் யாரெல்லாம் எழுதினார்கள்? எனும் ஆய்வு செய்வதைவிட, இன்றைய பெற்றோர் சமூகத்திற்கு, பீப் சாங் பிரச்னை ஓர் எச்சரிக்கைப் பாடத்தைப் போதிக்க முனைகிறது. அதுவே இவற்றையெல்லாம் விட முக்கியம் என தோன்றுகிறது.

ஜல்லிகட்டு தடையை நக்மா வரவேற்கிறார்.....இதுதாண்டா காங்கிரஸ்...

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு நடிகை நக்மா வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நின்று கொண்டு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் நக்மா. தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் விவசாய குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சத்யமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. Nagma welcomes Jallikkattu ban இதில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா, செயலாளர் ஹசீனா சையத், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் நக்மா. அப்போது செய்தியாளர்கள், ஜல்லிக்கட்டு தடை குறித்து கேட்டபோது இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. மக்களை திசை திருப்புதவற்காகவே கலாச்சாரம், உணர்வு என்று கூறி மக்களை குழப்புகிறார்கள்.

திமிங்கிலங்கள் மரணம்.....மிகப்பெரிய ஆபத்துக்கு அறிகுறியா? கதிர் இயக்கமா? கடலில் நஞ்சா? என்னதான் நடந்தது?

கரையொதுங்கிய திமிங்கிலங்கள். | படம்: என்.ராஜேஷ்.
கரையொதுங்கிய திமிங்கிலங்கள். | படம்: என்.ராஜேஷ். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் சுமார் 20-25 இறந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கின.< பாறைகள் நிரம்பிய இந்தக் கடல்பகுதியில் மோதி திமிங்கிலங்கள் காயமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. திங்கள் மாலை கல்லாமொழி கடற்கரையில் 52 திமிங்கிலங்கள் தென்பட்டன, ஆனால் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் அவை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்கிழமை காலையில் மீண்டும் திமிங்கிலங்கள் தென்பட்டன. சுமார் 20 முதல் 25 திமிங்கிலங்கள் இறந்து கரையொதுங்கின. இவை ஒவ்வொன்றும் 1 முதல் 3 டன்கள் வரை எடை கொண்டிருந்ததாகவும் சுமார் 5 மீ நீளம் கொண்டிருந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.

Pizza பெட்டிகளில் ரசாயனம் பெண்களுக்கு ஆண்தன்மை...does pizza increase testosterone?

லண்டன்: பீட்சா வைக்கப்படும் அட்டைப்பெட்டிகள், ஈரமாகாமல் இருப்பதற்காக பீட்சாவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், புற்றுநோய் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இந்த வேதிப்பொருட்கள், மனிதர்களின் பாலினத்தை மாற்றும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பீட்சா அட்டைபெட்டிகள் பல, அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்காட்லாந்து டாக்டர் கூறுகையில், பீட்சா அட்டைப்பெட்டியில் பயன்படுத்தப்படும் பெர்புளூரோல்க்கில்ஸ் என்ற வேதிப்பொருள், பெண் நத்தைகளின் பாலினத்தை மாற்றக்கூடியது. இந்த அபாயம் மனிதர்களிடமும் ஏற்படும் அச்சம் உள்ளது. பாலினமாக மாற்றும் என்சைம்களை அதிகளவில் சுரக்க இது காரணமாக உள்ளதாக கூறினார்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருச்செந்தூர் :செத்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள், டால்பின்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை உயிரிழந்து விட்டன. இதற்கு காரணம் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் நச்சுக்கள் கடலில் கலந்து திமிங்கலங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குலசேகரன்பட்டினம், கல்லாமொழி பதுவைநகர் கடற்கரைக்கு நேற்று மாலையில் சென்ற மீனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். பின்னர் அவர்கள் திமிங்கலங்களை கடலில் விட முயற்சி செய்தனர். ஆனாலும் திமிங்கலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்கியவாறு இருந்தன. இதில் 30க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன.

மேற்கு வங்காளத்தில் மதச்சண்டை...3 மாவட்டங்களில் இந்துக்கள் இப்போ சிறுபான்மை..

நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறைக்குக் காரணம் அஞ்சுமன் அஹ்லே சுன்னத் ஜமாஅத் என்ற தீவிரவாத அமைப்பு. இதற்கு பின்புல அரசியல் ஆதரவு தர ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. எல்லாம் ஒட்டுமொத்த ஓட்டு படுத்தும் பாடு!
கமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி
கமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி
2015, அக்டோபரில் மாட்டிறைச்சி உண்டார் என்பதால் ஒரு இஸ்லாமியர் உ.பி.யில் கொல்லப்பட்டபோது நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்ததை நாடறியும். அந்த நிகழ்வை வைத்துக்கொண்டு மோடி அரசை கடுமையாக விமர்சித்த அவர்கள், இப்போது எங்கே போனார்கள்? கும்பலாகத் திரண்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தான் தாத்ரியிலும் நிகழ்ந்தது. அதன் எண்னிக்கை தான் வித்தியாசம். இப்போது, மால்டா மாவட்டம் பற்றி எரிகிறபோது, இதை ஊதிப் பெரிதாக்காதீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள்.

அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜார்....பீப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையாமுங்கோ

பீப் பாடல் தொடர்பாக கோவை காவல்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் பெண்களை அவதூறு செய்யும் வகையில் சிம்பு பாடிய பீப் பாடல் இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீதும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கனடாவில் இருந்த அனிருத், நேற்றிரவு கோவை காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தனக்கும் பீப் பாடலுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்ததாவது: கோவை காவல்நிலையத்துக்கு நேரில் சென்று என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.மாலைமலர்.com

ஏறுதழுவுதலும் கலாச்சார அரசியலும்"....ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோருபவர்களின் பின் உள்ள அரசியல்

சு.தியடோர் பாஸ்கரன் (2013 பிப்ரவரி உயிர்மை இதழில் வெளியான கட்டுரை) சென்னை: நியூயார்க் நகரத்தில், மெட்ரொபாலிடன் அருங்காட்சியகத்தின் கிரேக்க பிரிவில் சுற்றிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த சில ஜாடிகளில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் என்னை ஈர்த்தன. கி,மு 2ஆம் நூற்றாண்டு காலத்திய இந்த ஒரு மீட்டர் உயரமுள்ள ஒயின் ஜாடிகளின் மேற்புறத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் கோட்டோவியங்களாக வரையப்பட்டிருந்தன. கிரீசுக்கு அருகிலுள்ள கிரீட்(Crete), மைசீன் (Mycene) தீவுகளில் அகழ்வாராய்ச்சியில் வெளிக் கொணரப்பட்ட சுவரோவியம் ஒன்றிலும் ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது.
மணிமேகலை, போன்ற நூல்களிலும், கிரேக்க பயணி டாலமி குறிப்புகளிலும் தமிழ்நாட்டிற்கும் கிரேக்க, ரோமானிய நாடுகளுக்கும் இருந்த வாணிப உறவு பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஸ்ட்ராபோ தமிழகத்திலிருந்து ஒரு குழு சக்ரவர்த்தி அகஸ்டஸ் தர்பாருக்கு வந்திருந்த்தை பதிவு செய்திருக்கின்றார். ஜல்லிகட்டு நட்த்தும் பழக்கம் இங்கிருந்து அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து வந்ததா என்று தெரியவில்லை. 

மேற்கு வங்காள முஸ்லிம் பெரும்பான்மையினர் இந்து சிறுபான்மையோர் மீது தாக்குதல்..மால்டா பகுதியில் ...


மேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக
பா.ஜ.க. அமைத்த உண்மை கண்டறியும் குழுவை மால்டாவிற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்நிலையில், பா.ஜ.க. பொதுச்செயலாளரும் மாநில பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா தலைமையில், பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் மற்றும் சித்தார்நாத் சிங் ஆகியோர் கொண்ட குழு இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தனர்.

தமிழ் திரையுலகில் தீண்டாமை தாண்டவம்...கேட்டாலே கொலைவெறி வந்துடுமா? Why டி ?

குருட்டு அதிர்ஷ்டமோ.. திறமையோ... இத்தனை சீக்கிரத்தில் இவ்வளவு
பெரிய உயரத்துக்கு வருவோம் என்று அந்த இசையமைப்பாளர் கனவு கூடக் கண்டிருக்க மாட்டார். இன்றைய இசையமைப்பாளர்கள் யாராலும் கற்பனை செய்து பார்த்திராத உயரம் இது. ஆனால் தான் அடைந்திருக்கும் உயரத்துக்கும் அவரது சின்ன புத்திக்கும் சம்பந்தமே இல்லை. Top music director's real face exposed உயர்ந்த சாதி என்ற நினைப்பு மனம் முழுக்க அழுக்காக வியாபித்திருப்பதன் விளைவு, தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களையே சாதி பார்த்து சிறுமைப்படுத்துகிறதாம் இந்த ஜென்மம். அந்தப் பாடகரின் கானா பாடல்களால்தான் இவர் இசையே உச்சத்துக்குப் போனது. ஆனால் அந்தப் பாடகர் ஒவ்வொரு முறை தனது வீட்டில் உள்ள ஸ்டுடியோவுக்கு வந்து போன பிறகு, அவர் உட்கார்ந்த இடத்தைக் கழுவி தீட்டுக் கழிக்கிறாராம் இந்த அற்ப பிறவி. உடன் பணியாற்றும் பாடலாசிரியருக்கும் இதே தீட்டுக் கழிப்பு ட்ரீட்மென்ட்தானாம். இந்த இசைப் பார்ட்டி இன்று சினிமாவில் காலெடுத்து வைக்கவும், உச்சம் தொடவும் காரணமாக இருந்த இயக்குநரும் அதே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவருக்கும் இதே ட்ரீட்மென்ட்தானா? தெரிஞ்சா சொல்லுங்கப்பா! tamil.filmibeat.com/

சவுக்கு.com : ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 16

thiru art 21-10-15-1தலித்துக்கள். அந்த இனத்தில்  பெண்கள் பொதுவாக சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். வயலில் வேலை செய்தவர்கள். அவர்களுக்கு முக்காடு போட்டு வீட்டுக்குள் உட்கார் என்றால் ஜீரணிக்க இயலவில்லை. மதம் மாறிய பல குடும்பங்களில் உள்ள பெண்களை நான் சந்தித்தபோது தங்கள் அதிருப்தியை ஜாடைமாடையாக தெரிவித்தனர்.
இந்துத்துவ அமைப்புக்கள் இது இந்து மதத்துக்கு எதிரான சதி என்று கூறி, மதம் மாறியவர்களை மீண்டும் இந்துவாக்கும் முயற்சியில் இறங்கின. வாஜ்பாய்கூட அங்கே வந்து போனார். அவ்வளவு களேபரம்.
.இந்த நிலையில்தான் ஆங்கில வார ஏடு ’டைம்’ ஒரு புகைப்படக்காரரையும் நிருபரையும் அனுப்பி வைத்தது. அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளனாக நான் போனேன். அப்போது அவர்களிடமிருந்த வசதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல், காரில் ஐஸ் பாக்சில் பீர், வேண்டியதற்கு மேல் உணவு. எனக்கு அதெல்லாம் அதிசயமாக இருந்தது.

ஜல்லி அனுமதிக்கு அவசர சட்டம் பிறக்குமாறு மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை....

ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: கலைஞர் வலியுறுத்தல் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு அவசர ஆணை பிறப்பித்த நிலையில், உச்ச நீதி மன்றம் அதற்கு திடீரென்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அறிவிப்பாணையை கடந்த 7ஆம் தேதியன்று வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கேற்ற நடவடிக்கை களைச் செய்யும்படி பணித்து, அவர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதி மன்றத்தில் இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை ...

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா தீர்ப்பு.
 ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது, மத்திய அரசின்கீழ் இயங்கினாலும், தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். 22 உறுப்பினர்கள் கொண்ட அந்த வாரியத்தில் சிலர் மட்டுமே அரசு அதிகாரிகள், பெரும்பாலானோர் அதிகாரிகள் அல்லாதவர்கள்.

2015 இல் வெளியான 500 தமிழ்ப்படங்களையும் கடாசிய காக்கா முட்டை...

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500
படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது.
காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன.
தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "'வேதாளம்', 'ஐ' போன்ற மெகா பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களும் மக்களைப் பரவலாகச் சென்றடைந்தன.
காஞ்சனா 2- வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' திரைப்படம், 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, சுமார் 100 கோடியை வசூலித்தது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட் படமான 'காக்கா முட்டை', அதன் முதலீட்டைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு பணத்தை வாரிக் குவித்து, தேசிய விருதையும் தட்டிச்சென்றது.

தூத்துக்குடி அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | படம்: என்.ராஜேஷ்.
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | படம்: என்.ராஜேஷ்.
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் வெளிநாட்டினர் 23 பேர் உட்பட 35 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘சீமேன் கார்டு ஓகியோ’ என்ற ஆயுத கப்பலை, கடந்த 2013 அக்டோபர் 12-ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர்.

ஜெயலலிதாவால் முடக்கமுயன்று நீதிமன்ற அல்டிமேட்டத்தல் தப்பி பிழைத்த அண்ணா நூலகம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே?: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் கடிதம்
உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதம்: ’’அன்பு - அறிவு - ஆற்றல் ஆகியவற்றின் திருவுருவாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்ப்பெயரை இணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இன்றைய தலைவி ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தைத் தமிழக மக்கள் கொடுத்திருக் கிறார்கள் என்ற ஆணவ எண்ணத்தால், அவர் இந்த ஐந்தாண்டுகளில் அரங்கேற்றியிருக்கும்
அட்டூழியங்கள் ஒன்றா, இரண்டா? எத்த னையோ? அவற்றில் ஒன்று தான் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைத் திட்டமிட்டு அலங் கோலப்படுத்தியது. நல்வாய்ப்பாக, சென்னை உயர் நீதிமன்றத் தலையீட்டினால் நூலகம் உயிர் பிழைத்திருக்கிறது; எனினும் உருக் குலைந்திருக்கிறது என்ற உண்மையினை மறைப் பதற்கில்லை. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டும்கூட, அதன் உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, தொடர்ந்து அலட்சியம் செய்து வந்ததால், ஜெயலலிதா அரசுக்கு இறுதி எச்சரிக்கை அதாவது “அல்ட்டிமேட்டம்” என்பார்களே, அதைப் போல கடும் இடித்துரை வழங்கியுள்ளது.  அடிமைகூட்டம் அறியுமா அறிவின் பெருமை? நூலகத்தின் மேல் கைவைத்தவர்களை சரித்திரம் எப்படி பார்க்கும்?

oxymoron..காலில் விழுந்து...போட்டுக் கொடுத்து..அள்ளி வைத்து..அண்டிப் பிழைக்கும் கூட்டம்

thayagam.com: எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார்.
பத்திரிகைகள் எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும்.
அங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது.
சுற்றியுள்ள அண்டிப் பிழைக்கும் கூட்டம் அள்ளி வைத்துப், போட்டுக் கொடுத்திருக்கும். அதைக் கேட்டு அவர் பதவிகளைப் பறித்திருப்பார்.
பறிக்கப்பட்டவர்கள் கருணாநிதிக்கு துண்டு போர்த்தி, தாய்க்கழகத்துடன் இணைவார்கள். கலைஞரின் போர்வாள் நான் என்று சூளுரைப்பார்கள்.
சீமானின் மாமா காளிமுத்து அடிக்கடி இப்படி பல்டி அடிப்பார்.
அல்லது அடுத்த தடவை கருணைக்கண் கிடைக்கும் வரை காய்ந்து கொண்டு ஓரமாய் கவனிப்பாரற்றுக் கிடப்பார்கள். யாருமே முதுகெலும்பு உள்ளவர்களாக, எதிர்த்துப் போராடத் துணியாதவர்கள். காரணம், அவர்களின் அரசியலே எம்.ஜி.ஆர் என்ற விருட்சத்தில் ஒட்டுண்ணி குருவிச்சைகளாக வாழ்வது தான்.
பிறகு அடுத்த சுற்றில், பாவம் கழுவப்பட்டு ஞானஸ்நானம் பெற்று, அண்ணனின் போர் வாள் ஆவார்கள்… எதுவுமே நடக்காதது போல!
காலில் விழும் கலாசாரத்தின் முதல் பிதாமகன் அவர். அன்று தொடங்கிய தலைகுனிவு, இன்று அம்மாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பது வரைக்கும் தொடர்கிறது.
இந்த எம்.ஜி.ஆருக்கும் ஒரு கொள்கை இருந்தது.
அண்ணாயிசம் என்று!
அது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சமான கொள்கை.

ISIS: பயங்கரவாதிகள் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தல் British Jihadist On 60 Minutes. (CBSN)



சொத்துகுவிப்பு வழக்கும் சட்டமன்ற தேர்தலும்....நக்கீரன் விபரம்

ஜனவரியில் முடியும் என நக்கீரன்
கணித்து சொன்ன சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு மாதம் தள்ளி பிப்ரவரியில் இறுதி கட்டத்தை எட்டிவிடும் என்கிறது சுப்ரீம் கோர்ட் வட்டாரம்.சுப்ரீம்கோர்ட்டின் வேலைப்பளு சுமையால் கொஞ்சம் தாமதமானால் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அதிக சூடுபிடிக்கும்; மார்ச் மாதத்தில் இறுதி தீர்ப்பு வந்துவிடும். எனவே என்ன தீர்ப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு சாதகமாக குமாரசாமி தீர்ப்பளித்ததும் அ.தி.மு.க. வினர் இந்த வழக்கை பற்றி அதிகம் கவலைப்பட வில்லை. இந்த வழக்கை மிகவும் சீரியஸாக, கர்நாடக அரசின் சார்பாக ஆச்சார்யாவும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவேயும் கொண்டு சென்றபோதும் அ.தி.மு.க. வட்டாரங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

திங்கள், 11 ஜனவரி, 2016

தூமை ...விதைகளை கேவலப்படுத்தும் கலாசார காவலர்கள்


thoomai.wordpress.com 1.   ‘தூமைவெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் பிறப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால் தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்களுக்கு அதற்கான வேறு இடங்களைத் தேடிச் செல்ல உரிமை உண்டு.

ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ஏ.கன்னியப்பன், ஜி.சிவா ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

சபரிமலை கோயிலில் பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது ? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கேரள மாநிலம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய மனு ஒன்றையும் மனுதாரர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. women be Why can't allowed to enter Sabarimala asks Supreme Court வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு சபரிமலைக்கு பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கபடுகிறது? என்றும், பெண்களுக்கு கோவிலுக்கு செல்ல அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதத்தின் பெயரால் அவர்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

பழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ


திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து இரண்டு தினங்கள் ஆகிறது. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ள வீடியோ வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. பழனி மலை முருகன் கோவிலில் 200க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர். பழனி மலைப்பாதையில் உள்ள மங்கம்மாள் மண்டபத்தில், இரவு நேரத்தில் காவலர்கள் மது அருந்திவிட்டு, அசைவம் சாப்பிடும் வீடியோ பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. nakkheeran,in

தமிழ்நாட்டை கொள்ளை அடித்து பார்பனர்களை குடியேற்றிய திருமலை நாயகனுக்கு ஜெயலலிதா அரசு விழா?

சென்னை: தமிழர்களுக்கு எதிராக ஆட்சி புரிந்தவர் திருமலை நாயக்கர். அவருக்கு தமிழக அரசு சார்பில் விழா எடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மக்கள் மாநாடு கட்சி என்ற கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரான சக்திவேல் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் தமிழருக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் மன்னர் திருமலை நாயக்கர் என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது. திருமலை நாயக்கர் ஆட்சியிலே தான் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தெலுங்கர்கள் தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள்.
ஆட்சி நிர்வாகம் முழுமையாக தெலுங்கர் மயமாக்கப்பட்டு, தெலுங்கு ஆட்சிமொழியாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. சமஸ்கிருத, தெலுங்கு மொழிகள் வளர்க்கப்பட்டதும் தமிழ் மொழி பின்னுக்கு தள்ள‌ப்பட்டதும் இவரின் ஆட்சியிலே தான். தமிழரின் பண்பாடுகளை சிதைத்து, சமஸ்கிருத வழிமுறைகளை கோயில்களில் புகுத்தியவர் திருமலை நாயக்கர். இவரின் ஆட்சியிலே தான், கோயில்களில் தமிழ் வள்ளுவர்கள் பூசாரிகளாக இருந்ததை மாற்றி பார்ப்பனர்களை அர்ச்சர்களாக மாற்றி, தமிழையும் தமிழர்களையும் தமிழ்க் கோவில்களில் இருந்து விரட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர்.

இந்தியா உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' பிரதமர் நரேந்திர மோடி

மும்பை,இந்தியா, உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மும்பையில் நேற்று நடந்த, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:பண்டைய காலத்தில், நம் நாட்டின் துறவிகளும்,முனிவர்களும், உலகுக்கு வாரி வழங்கியது, ஆன்மிகத்தை; மதவாதத்தை அல்ல. இனப் பிரிவுகள், சில சமயம் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். மாறாக ஆன்மிகம், அப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும். மறைந்த முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாம், இந்தியாவின் ஆன்மிகத் தன்மையில், நம்பிக்கை உள்ளவர். 'மனித இனத்தை, ஆன்மிகப்படுத்துவ தால், மனிதர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என, அப்துல் கலாம் கூறினார். எல்லா மதங்களையும் விட, தேசிய மதமே சிறந்தது. இந்தியாவின் பாரம்பரியம், உலகில் சிறப்புத் தன்மை வாய்ந்தது. இவ்வாறு மோடி பேசினார். தினமலர்.com

சவுக்கு : குற்றவாளி ஜெயலலிதா அல்ல

c30ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 2 முதல் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.     இந்த வழக்கை இது வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  இந்த அமர்வுதான் வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது.  ஆனால் என்ன காரணத்தினாலோ,  நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக, நீதிபதி அமித்தவ ராய் இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த மாற்றம் எதனால் நிகழ்ந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை.  ஆர்.கே. அகர்வால் இவ்வழக்கை விசாரிப்பார் என்றதும் ஒரு நம்பிக்கை இருந்தது.   ஏனென்றால், நீதிபதி ஆர்.கே.அகர்வால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.   அவர் அவ்வாறு பணியாற்றியபோது, பல்வேறு வழக்குகளில் இப்படித்தான் தீர்ப்பு வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி மூலமாக ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தார்.

கும்பமேளாவாகிவிட்ட இந்திய விஞ்ஞான காங்கிரஸ் மாநாட்டால் எந்த பலனும் இல்லை

இந்தியாவின் 103 ஆவது விஞ்ஞான காங்கிரஸ் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி
துவங்கி ஏழாம் தேதி முடிவடைந்திருக்கிறது.
கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவின் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
அதேசமயம் நோபெல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாடு வெறும் கூடிக்கலையும் திருவிழா என்றும் இதனால் இந்திய விஞ்ஞானத்துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தனர். பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக் கொண்டனர். இந்துத்வாக்களின் யானைத்தலை பிளாஸ்டிக் சேர்ஜரி மற்றும் பிரம்மாவின் ஸ்டெம்செல் ஆராய்ச்சி...

இந்திய சிறுமிக்கு உலகபுகழ் .. Kashmea wahi. Cattell III B Mensa test

The Cattell III B Mensa test is a well-known international evaluation process and Kashmea stumbled upon it while browsing her iPad.
லண்டன் : மென்சா அமைப்பு நடத்திய 'காட்டெல்-3பி' அறிவுத்திறன் போட்டியில், மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளி சிறுமி கஷ்மியா வாஹி(11) போட்டியின் அதிகபட்ச மதிப்பெண்ணான 162 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ள வாஹி, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. nakkheera,in

ஏசி சண்முகத்தின் எம்ஜியார் கல்வி நிறுவனம் கூவத்தை ஆக்கிரமித்து கட்டிடம்....மகஇக போராட்டம்

எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனம் என்ற பெயரில் செயல்படும் தனியார்
நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மகஇக அமைப்புகள் இன்று மருத்துவக் கல்லூரி முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே அக்கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது மருத்துவக் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளுர் ஆட்சியரே பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஜெயலலிதா : சாலை பாதுகாப்பு வார விழா வாழ்த்துச் செய்தி: சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத வாழ்க்கை....

ஒவ்வொருவரும் சாலை விதி களைப் பின்பற்றி பயணத்தை விபத்
தில்லாததாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டு உள்ளார்.
27-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
இந்தாண்டு ‘சாலைப் பாது காப்பு செயல்பாட்டுக்கான தரு ணம்’ என்ற கருப்பொருளை மையப் படுத்தி 27-வது சாலைப் பாது காப்பு வார விழா இன்றுமுதல் வரும் 16-ம் தேதி வரை கடைபிடிக்கப் படுகிறது. தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 2015-16-ம் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.65 கோடியை அரசு ஒதுக்கியது.    தமிழ்நாட்டின் மிகப்பெரிய விபத்தே இவகதாய்ன்..அது ஜனங்களுக்கு இன்னும் புரியல்ல...திரும்ப திரும்ப இந்த விபத்து நாட்டுக்கு இருந்து கொண்டே இருக்கும்...அவ்வளவு அடிமைங்க இருக்காங்க