வெள்ளி, 13 ஜனவரி, 2017

காதி கலண்டர்களில் காந்திக்கு பதிலாக மோடியின் படம்


மும்பை: தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின்
காலண்டர்கள் மற்றும் டைரிகளில் காந்தியின் படம் நீக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில்
பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் டைரி மற்றும் காலண்டர்கள் தரப்படுவது வழக்கம். இந்த டைரி மற்றும் காலண்டரில் காந்தி ராட்டையில் நூல் நூற்கும் படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள டைரி மற்றும் காலண்டர்களில் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி நூல் நுற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
காலண்டர்களில் மோடியின் படத்தைக் கண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஒரு அதிகாரி கூறும்போது, கடந்த ஆண்டு மோடியின் படம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காந்தியின் படம் முற்றிலும் நீக்கப்பட்டு, முழுவதுமாகவே மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். மேலும், காந்தியின் சிந்தனை, தத்துவம், கொள்கைகளை அரசு புறக்கணித்து வருவது கவலை
அளிக்கிறது என்றும் அவர் கூறினார். tamiloneindia

2 கருத்துகள்:

selvarajan சொன்னது…

ரூபாய் நோட்டுகளிலும் -- காந்தி போய் மோடி வந்தாலும் ஆச்சிரியமில்லை ... அப்படித்தானே .... ?

சிங்கார செல்வராஜன் சொன்னது…

ரூபாய் நோட்டுகளிலும் -- காந்தி போய் மோடி வந்தாலும் ஆச்சிரியமில்லை ... அப்படித்தானே .... ?