ஞாயிறு, 15 ஜனவரி, 2017

தீபாவின் அம்மா திமுக... பி.எச்.பாண்டியன் தலைமையில் ஆலோசனை

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவக்கவுள்ள, புதிய கட்சியின் கட்டமைப்பு குறித்து, இன்று, அம்பாசமுத்திரம் தோட்டத் தில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.< ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு, மாநில நிர்வாகிகளில், பி.எச்.பாண்டியனை தவிர, மற்ற அனைவரும் ஆதரவு அளித்தனர்.ஆனால், பி.எச்.பாண்டிய னும், அவரது ஆதரவாளர் களும், தீபாவை ஆதரிக்க முன்வந்துள்ளனர். தீபா தலைமையில் புதிய கட்சி துவக்குவது குறித்தும், அதற்கான விதிகளை ஏற்படுத்துவது குறித்தும், தீபா ஆதரவாளர்கள் வட்டாரத்தில், ரகசிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வழக்கறிஞரான பி.எச்.பாண்டியன் தான், அந்த பணிகளை கவனித்து வருவதாக கூறப்படு கிறது. தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள், கொடி, சின்னம் உருவாக் கும் பணிகளையும், அவர் மேற்கொள்வ தாக, தீபா ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.


இதற்கிடையில், சசிகலா தரப்பில் அவரிடம் சமரச பேச்சு நடத்தப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்,முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி ஆகியோர் ஈடுபட்டனர்; ஆனால், சமரச பேச்சு தோல்வி அடைந்துள்ளதாக தெரிகிறது வரும், 2019 லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பி.எச்.பாண்டியனுக்கு, 'சீட்' வழங்கப் படும் என்ற வாக்குறுதி தரப்பட்டும், அதை அவர் ஏற்கவில்லை என, தீபா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பி.எச்.பாண்டியன், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள, தன் தோட்டத்தில், ஆதரவாளர்களை இன்று சந்தித்து பேசுகிறார். அதில், தீபா துவங்கும் புதிய கட்சி தொடர்பாக, முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தீபாவுக்கு ஆதரவு: காங்., நிர்வாகி யோசனை

திருச்சி:'சசிகலாவுக்கு எதிர்ப்பாக, அ.தி.மு.க., தொண்டர்களின் ஆதரவை பெற்று வரும் தீபாவுக்கு காங்கிரஸ் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக காங்கிரஸ், விவசாய அணி பொது செயலர் முரளிதரன் கூறியதாவது:

அ.தி.மு.க.,வுக்கு சோதனையான காலங்களில் < எல்லாம், அ.தி.மு.க.,வும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்துள்ளன. தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க., தொண்டர் கள் விரும்பும் தீபாவுக்கு, காங்கிரஸ்கட்சி ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.அதற்கு ஏற்றார் போல், தற்போது, தமிழக காங்கிரஸ் தலைவ ராக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் அரசிய லில் வளர்த்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் தான் உள்ளார்.

அவர், தமிழக அரசியல் சூழலை, காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் எடுத்து கூறி, தீபாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். மேலும், காங்கிரஸ் தலைமையில், புதிய ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அணியை ஏற்படுத்த, சரியான தருணம் இதுவே. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: