வியாழன், 16 பிப்ரவரி, 2017

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ! நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழகத்தின் 13வது முதலமைச்சரானார் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆளுநர் வித்தியாசாகர்ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, தமிழத்தின் 13வது முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி கே.பழனிச்சாமி.

நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 14-ந்தேதி எடப்பாடி பழனிச்சாமி தனக்கு ஆதரவாக 124 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோரினார். இன்று மதியம் ஆளுநர் விதியாசாகர் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அழைப்பு விடுத்த ஆளுநர் வித்யாசாகர், இன்னும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் சனிக்கிழமை (18-ந்தேதி) காலை 11 மணிக்கு ஆளுநர் உத்தரவுப்படி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சட்ட சபை செயலர் ஜமாலுதின் தெரிவித்துள்ளார். சிறப்பு பேரவை கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார். ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்து இருந்த நிலையில் நாளை மறுநாளே சட்டப்பேரவை கூடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: