சனி, 18 பிப்ரவரி, 2017

எம் எல் ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க குடியரசு தலைவர் ஆட்சி... மூத்த வக்கீல் ஆச்சாரியா

Sr. Adcovate Acharya seeks Governor Rule for 3 month in TN பெங்களூரு: தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மேலும், தமிழக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என குறிப்பிட்டுள்ள ஆச்சார்யா, தற்போதைய சூழலில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலை தமிழகத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கூவத்தூர் ரிசாட்டில் அடைந்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வாய்ப்பு தரப்படவில்லை என்றும் வக்கீல் ஆச்சார்யா குற்றம்சாட்டியுள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை: