திங்கள், 20 பிப்ரவரி, 2017

லத்தி சார்ஜ்க்கு பயந்து வேனில் ஏறினோம் : மு.க.ஸ்டாலின் உருக்கம்.!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்களை கொண்டு சபாநாயகர் தனபால் வெளியேற்றினார் என்று மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பேரவையில் எம்.எல்.ஏக்களை திட்டமிட்டு காவலர்களை வைத்து அடித்து வெளியேற்றியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தன்னை காயப்படுத்தி சட்டையை கிழித்து வெளியேற்றியதால் தனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகேதான் நாங்கள் அனைவரும் ஆளுநரை சந்தித்து பேரவையில் நடைபெற்றதை புகார் அளித்தோம்.
அதன் பிறகு மெரினாவில் உள்ள காந்திசிலை அருகே அமைதியான முறையில் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கட்சி நிர்வாகிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அங்கு வந்திருந்த காவல்துறையினர் தங்களை வலுக்கட்டாயமாக கைதாக வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்படி வரவில்லை என்றால் லத்திசார்ஜ் நடத்தப்படும் என்று கூறினார்கள்.
இதனையடுத்து தங்களுக்காக தேவையில்லாமல் மற்ற தொண்டர்களை காவலர்கள் தாக்கப்படுவதை விரும்பாததால் நாங்களாகவே கைதாகிறோம் என்று அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் வேனில் ஏறி சென்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். லைவ்டே

கருத்துகள் இல்லை: