சனி, 18 பிப்ரவரி, 2017

பன்னீர்செல்வம் :குடும்ப ஆட்சிக்கு துணைபோகாதீர்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள்

தமிழக சட்டசபையில் இன்று சசிகலா; ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கிறது. இதனையொட்டி சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிட்ம் பேசிய ஒ.பன்னீர்செல்வம், குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என்பது ஜெயலலிதாவின் கொள்கை. அவரது கொள்கைக்கு புறம்பாக குடும்ப ஆட்சிக்கு உறுதுணையாக நீங்கள் (சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்) இருக்கலாமா? இது ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா? ஜெயலலிதா ஆட்சி தொடரவேண்டும் என்று உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் மனம்மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டசபையில் நாளை (இன்று) நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டனாக இருந்து சுதந்திரமாக சிந்தித்து ஜெயலலிதாவை ஒருமுறை நினைத்துப்பார்த்து வாக்களிக்க வேண்டும்.
யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். மக்களின் வெறுப்புக்கு உள்ளாகாதீர்கள். ஜெயலலிதாவின் எண்ணம், ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்கள் நிறைவேற ஜெயலலிதாவின் சாதனை தொடர அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். கடைசி நேர வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு கூறினார். நக்கீரன்


கருத்துகள் இல்லை: