சனி, 25 பிப்ரவரி, 2017

ஜெயலலிதாவை உயிருடன் அப்போலோவில் ஆளுநர் வித்தியா சாகர் பார்த்தாராம் ..

மாட்டிக்கிட்டாய்ன் ஆளுனன் மாட்டிகிட்டாய்ன்அமுக்குஅமுக்கு 
லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உயிருடன் இருக்கும்போது சந்தித்தேன் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக முதல்வராக பதவியேற்க அழைக்காதது குறித்து ஆங்கில பத்திரிக்கைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேட்டியளித்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தில் ஒருவாரத்தில் சொத்துகுவிப்பு தீர்ப்பு வெளிவரும் என கூறப்பட்டது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பது நிறுத்தி வைக்கப்பட்டது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். அதோடு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையும் நடத்தினேன். தமிழக அரசியல் சூழல் குறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்பி கொண்டேதான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார். நீ பேசல  ஆளுனா நீ பேசல .. அந்த 600 பேசுதுல.. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, ஒரு முறை நான் பார்க்க சென்றேன். ஒரே ஒரு முறை. அப்போது நான் விரைவாக குணமடைந்து வருவதாக தன் கட்டை விரலை தூக்கி காண்பித்தார் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்து 75 நாட்களுக்கு பிறகு ஆளுநர் இவ்வாறு கூறியிருப்பது, மக்களிடையே மேலும் மர்மத்தை அதிகரித்திருப்பதாக தெரிகிறது. இதன் பின்னணியில் சசிகலாவின் அக்கா மகன் தினகரன் இருப்பதாக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: