வியாழன், 27 ஏப்ரல், 2017

தினகரன் சென்னை வீட்டில் சோதனை .. விசாரணை!


டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட டி.டி.வி. தினகரனை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அடையாறில் உள்ள அவரது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார், அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை 5 நாள் காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொச்சி மற்றும் பெங்களுரு அழைத்துச் செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி.டி.வி.தினகரனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸுக்கு அனுமதி கிடைத்தது. இந்த நிலையில், விசாரணைக்காக டிடிவி தினகரனை டில்லி போலீஸ், சென்னைக்கு அழைத்து வந்துள்ளது.

கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்த டெல்லி போலீஸ் திட்டமிட்டு உள்ளனர்.

ரூ.10 கோடி பணம் எங்கிருந்து, யார்–யார் கைமாறி, எந்த வழியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் விதமாக போலீசார் மேற்கண்ட இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க இருக்கிறார்கள்.
மேலும் சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்று உள்ளனர். இதேபோல் தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவின் வீட்டில் சோதனை போடவும் அனுமதி பெற்று இருக்கிறார்கள். படங்கள்: செண்பகபாண்டியன்  nakkeeran

கருத்துகள் இல்லை: