ஞாயிறு, 28 மே, 2017

இந்த பைத்தியம் எல்லாத்தையும் கடித்து வைக்கும்?


Elango Kallanai மோதியை ஆரம்பத்தில் ஆதரித்தவர்கள் காங்கிரசின் ஊழலை ஒழிக்க ஆதரிக்கிறோம் என்றார்கள். சரி காங்கிரஸ் பத்தாண்டுகளில் செய்யாத உள்கட்டமைப்பு வளர்ச்சியை குஜராத்தைப் போல ஆகிக் காட்டுவார் என்றார்கள். வந்தவுடனேயே மோதிக்கு தெரிந்துவிட்டது ஒண்ணும் செய்ய முடியாது என்று. உடனே பத்து வருஷம் நாட்டை என் கையில் கொடுங்க என்று ஒரு போடு போட்டார். ஜனநாயகத்தில் ஐந்து வருடத்து ஒரு முறை ஏன் தேர்தல் வருகிறது என்பதே தெரியாதவர். கறுப்புப் பணம் ஒழியும் பதினைந்து லட்சம் வரும் என்றார்கள். அதெல்லாம் வராது என்று வாக்குறுதி கொடுத்த போதே தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் வீராவேசமாக இந்தியில் உரையாற்றுகிறார் என்று ஒரு கூட்டம்.நடந்தது  உலக விஞ்ஞானிகள் மாநாடு அங்கே
 இவர் என்ன செய்தார். பிள்ளையார் தலையை அறுவை செய்கிச்சை செய்தார்கள் என்று தனது விஞ்ஞான அறிவை வெளிப்படுத்தினார். அடுத்து ஆட்டோ செலவுல ராக்கெட் விடுறோம் என்று பீலா விட்டார். பணமதிப்பிழப்பை அறிவித்து ஏகப்பட்ட பேர் வேலையிழப்பை சந்தித்தார்கள். உபியில் வாக்கு எந்திரங்களைத் திருடினார். இப்போது மாட்டுக்கு மூக்கணாங்க கயிறு ஆகாது என்று வந்திருக்கிறார். மொத்தத்தில ஒரு பைத்தியத்துக்கு ஓட்டுப் போட்டுவிட்டுடாய்ங்க. உணவு ஒரு கலாச்சார அரசியலாக மாறிய பின்னர் இந்தியாவின் உடைவை யாரும் தடுக்க முடியாது. இந்த பைத்தியம் எல்லாத்தையும் கடித்து வைக்கும் போல. ஜோம்பி மாதிரி கூடயே நாலு பாஜக அதரவு பைத்தியங்கள். நாடு தாங்காது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இப்போது சந்திராயன் 3 ஐ கெட்டியாக பிடித்து கொண்டு விட்டார்கள். புதிதாக இன்று மோடி புகழ் பாடும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.அது 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் வேலை செய்துள்ளாராம்.ஓய்வு எடுத்து கொண்ட நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.அவருக்கு என்ன உலகம் சுற்றும் வாலிபன்.