சனி, 27 மே, 2017

தனியார் பாலில் கலப்படம் இல்லை என நிரூபித்தால் பதவி விலக தயார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர்:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், இதனால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. ஆனால் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் அவர் சிவகாசியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தனியார் நிறுவன பாலில் 100 சதவீதம் கலப்படம் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பால் கெடாமல் இருக்க வேதிபொருட்களை கலந்திருப்பது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு, ஓசூரில் உள்ள ஆய்வகங்களில் தனியார் நிறுவனங்களின் பால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வெளிமாநிலத்தவரும் தமிழகத்திற்கு வந்து பால் நிறுவனங்களை தொடங்குகின்றனர். நான் பதவி ஏற்று 6 மாதம் தான் ஆகிறது.


ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தனியார் பால் நிறுவனங்கள் குறித்து விசாரித்து வருகிறேன். தனியார் நிறுவன பாலில் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால் தூக்கு மேடை ஏறவும் தயார். பதவி விலகவும் தயார்.

அடுத்தடுத்த ஆய்வுகள் நடத்தி தனியார் நிறுவன பாலில் கலப்படம் உறுதி செய்யப்பட்டபின் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிறுவனங்கள் முடக்கப்படும். இந்த பிரச்சனையில் விஜயகாந்த் அரசியல் நோக்கத்தோடு பேசுகிறார். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசுகிறார். உச்சநீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதை வரவேற்கிறேன். பொதுமக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார். ;  மாலைமலர்

கருத்துகள் இல்லை: