சனி, 27 மே, 2017

தடை செய்யப்பட்ட"சரணம் கச்சாமி" தடையை வென்று திரைக்கு வருகிறது!

Umadevi.Lyricist? ஆந்திர திரையுலக வரலாற்றிலேயே ஒரு மொத்தப்படத்துக்கும் சென்சார் போர்டு தடை போட்டதென்றால் அது " சரணம் கச்சாமி " #SaranamGachami திரைப்படத்திற்குத்தான்.
பிரேம்ராஜ் இயக்கிய இந்தப்படம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நெத்தியடி.
எந்தெந்த காட்சிகள் வேண்டாம் என்று தோன்றுகிறதோ அவைகளை வேண்டுமென்றாலும் வெட்டிக் கொள்ளுங்கள் என்று இயக்குநர் பிரேம்ராஜ் சொல்லியும்...
"மொத்தப்படத்தையும்தான் வெட்டுவோம்" என கசாப்புக்கடை ஸ்டைலில் சென்சார் போர்டு சொல்ல,
மேல்முறையீட்டுக்குப் போனது படம்.
மும்பை மேல்முறையீட்டில் ஓரிரு வெட்டுகளோடு U/A சான்றிதழும் கொடுத்து படம் வெளிவர பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் மறுஆய்வுக் குழுவின் தலைவர் நடிகை ஜீவிதா.
இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல் ஐதராபாத் பல்கலையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ரோஹித் வெமுலாவின் அவலம்.....
ஊனாவில் கசையடிக்கு ஆளான தலித்துகள் துயரம்....

உத்தரப் பிரதேசத்தில் அடித்துக் கொல்லப்பட்ட முகம்மது அக்லாக்கின் பேரவலம் என பலவற்றைப் பேசுகிறது படம்.
நேரடியாகவே அண்ணல் அம்பேத்கரை போஸ்டரில் போட்டுக் கலக்கியிருக்கிறார் பிரேம்ராஜ். இதைத் தவிர ஜொள்ளுவதற்கு காதல் மோதலும் உண்டு என்கிறார் இயக்குநர்...
ஆந்திர திரையுலகை ஆரோக்கியமான திசையை நோக்கித் திருப்பியிருக்கிறார் இயக்குனர் #பிரேம்ராஜ். Thanks and congratulations bro...
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி.

கருத்துகள் இல்லை: