செவ்வாய், 23 மே, 2017

சிதம்பரத்துக்கு வைத்த குறி ஒரு ஆரிய சதி?

stanley.rajan. ஆரிய சூது என்றால் என்ன என்பது பலருக்கு புரியாது, இப்பொழுது
அதற்கான காட்சிகள் கண்முன்னே தெரிகின்றன‌
ப.சிதம்பரம் மீது நடந்த சோதனையும், அவர்கள் அள்ளிவிடும் கட்டுகதைகளும் எல்லோருக்கும் தெரியும்
நகரத்து செட்டியார்களுக்கு, அதுவும் கானாடுகாத்தான் வம்சத்தாருக்கு கோடிகணக்கில் சொத்துக்கள் இருப்பதில் என்ன ஆச்சரியம்?
விலைவாசி உயர்ந்துவிட்ட காலத்தில் அவர்கள் அரண்மனை தேக்குமரங்களே தங்கத்திற்கு நிகரான சொத்துக்கள், அவர்களுக்கு 13 என்ன? 130 நாடுகளில் வியாபாரம் இருந்தாலும் அதில் ஆச்சரியமென்ன?
அன்றே கிழக்காசியா முழுக்க பொருளாதாரத்தால் கட்டுபடுத்திய வம்சத்திற்கு சொத்து இருப்பது ஆச்சரியமா? அதனை பட்டியலிடுகின்றார்களாம்
ஏன் மறைந்த எம் ஏம் எம் ராமசாமி செட்டியின் சொத்துகணக்கு என்ன? அண்ணாமலைபுர பங்களாவிற்கு விலை சொல்லமுடியுமா? அந்த குடும்பத்திற்கு இணையான அந்தஸ்துள்ள சிதம்பரம் மீது என்ன சொத்து சர்ச்சை வரமுடியும்?
ஆனால் வானதி சீனிவாசன் என்பவர் மீது வருகின்றதல்வா அது சர்ச்சை, ஐந்து வருடத்திற்கு முன்பு 5 ஆயிரம் இல்லாதவரிடம் இன்று பல்லாயிரம் கோடி பணம் புழங்குவதாக செய்தி வருகின்றதல்லவா அது உண்மை
அவர்களிடம் நடத்தபடாத சோதனை, பாரம்பரியம் மிக்க செட்டி குடும்பத்தின் மீது நடத்தபடும் மர்மம் என்ன?

இதுதான் ஆரிய சூது, இதுதான் அவர்கள் எழுத நினைக்கும் புதிய மனுநீதி
நுட்பமான அரசியல் இது, தமிழகத்தில் யாரெல்லாம் பெரும் இடத்தில் இருக்கின்றார்களோ? யாரெல்லாம் ஆரிய பாஜகவின் எதிரிகள் என பட்டியலிடபடுகின்றார்களோ அவர்களை எல்லாம் முடக்கும் சதி இது
ஆனால் இதுபோல ஆயிரம் சதிக்களை கடந்து நிற்கும் தமிழகம் இது, இதனைத்தான் இவர்களால் செய்யமுடியும்
இதற்கு மேல் என்ன செய்யமுடியும்?
ப.சிதம்பரத்தின் உயர்ந்த‌ இடம் தமிழகத்திற்கு புரியுமோ இல்லையோ, டெல்லிக்கு மிக நன்றாகவே புரிகின்றது
தமிழகத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தகுதி அவருக்குத்தான் இருக்கின்றது, இந்த ரஜினி வேறு 1996 போல அவர் பின்னால் சென்றுவிட்டால் என்னாகும்?
அதுதான் அது ஒன்றுதான் அச்சம், ஆளும் கட்சி, திமுக என எல்லோரும் மவுனம் காக்கும் விஷயமும் அதுதான்
ரஜினி மீது பெரும் அபிப்பிராயம் ஏதுமில்லை ஆனால் ப.சிதம்பதத்திற்கு அவர் ஆதரவு என்றால் ரஜினி இதுகாலம் தமிழகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும் நன்றியும் உண்டு
ஒருவேளை இதனை தடுக்கத்தான், ரஜினியினை எச்சரிக்கத்தான் சிதம்பரம் மீது பாய்ந்தார்களோ என்னமோ
காமராஜரின் சீடர் ப.சிதம்பரம். அவர் காமராஜரின் நாற்காலியில் அமர்வதில் யாருக்கு ஆட்சேபனை இருக்க முடியும்?
ரஜினி அஞ்சாமல் தான் செய்ய வேண்டியதை செய்யும் நேரமிது, சிதம்பரம் போன்றோரை ஆதரிக்கலாம், தமிழகம் வாழ்த்தும்
ஆனால் தைரியம் வேண்டும், அதற்கும் ரஜினிக்கும் வெகுதூரம் என்பதால் பெருமூச்சு விட்டுவிட்டு நகரலாம்..

கருத்துகள் இல்லை: