ஞாயிறு, 28 மே, 2017

"gan you pleadge dell me yuvar paan gaard nambar" இந்திக்காரனின் இங்கிலீஸ்

Musicallybaskar? என் மனைவிக்கு ஒரு வட இந்திய நபரிடம் இருந்து verification அழைப்பு வந்தது. அவர் அடுக்கடுக்காக சரளமான இந்தியில் பேச, என் மனைவி குறுகிட்டு, தனக்கு அவ்வளவு இந்தி தெரியாது எனவும், ஆங்கிலத்தில் தொடரும்படி கேட்டு இருக்கிறார்.
அவரும் "gan you pleadge dell me yuvar paan gaard nambar" என்று கேட்டு இருக்கிறார். அது ஒரு முக்கியமான அழைப்பு ஆதலால், கொஞ்சம் பொறுமையாக சொல்லும்படி மீண்டும் கோரியிருக்கிறார் என் மனைவி.
அந்த நபரும் "gan.....you...... pleadge...... dell me....... yuvar......... paan gaard......... nambar" என்று நின்னு நிதானமாக கேட்டு இருக்கிறார். அப்போது தான் அந்த நபர் "pan card" நம்பர் கேட்டு இருப்பது என் மனைவிக்கு புரிந்து இருக்கிறது, சொல்லி இருக்கிறார்.
அழைப்பை துண்டிக்கும் போது, அலுத்து போய் "thank god" என்று சொல்லி அழைப்பை துண்டித்து இருக்கிறார் அந்த வட இந்தியர்.
அதாவது என் மனைவியோடு, இந்தியும் புரியலையாம், ஆங்கிலமும் புரிய வைக்க முடியலையாம், அலுத்துகிறாராம்.
இவனுங்க பேசுற இந்த மொக்க இங்கிலீஷ்க்கே இந்த சீன். அப்படியே ஆங்கிலம் தெரியாதவராய் என் மனைவி இருந்தா கூட நிதானமாய் சொல்வதில் என்ன தவறு.
வெள்ளைக்காரன் விட்டு போன ஆங்கிலத்தை கச்சிதமாக எங்களை மாதிரி பிடிச்சசவனும் இந்தியாவுல இல்ல, திணித்த ஹிந்தியை எங்களை போல விரட்டியவரும் இல்ல. நாங்க தான் சொல்லணும் "dhank gaad "

கருத்துகள் இல்லை: