புதன், 24 மே, 2017

மரபணு மாற்றுக் கடுகு : ஆர்.எஸ்.எஸ் சதி? .. hijack of our food by the Monsanto and Bayer."

மரபணு மாற்றுக் கடுகை அனுமதிக்கக் கோரி அண்மையில் மரபணு மாற்றுப் பொறியியல் கழகம் மத்தியச் சுற்றுச் சூழல் துறைக்குப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து மரபணு மாற்றுக் கடுகை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கைகள் எழுந்தன. குறிப்பாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் மரபணு மாற்றுக் கடுகிற்கு எதிர்ப்பு அதிகமாய் இருந்தது.
இந்நிலையில், மரபணு மாற்றுக் கடுகை அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, சுதேசி ஜக்ரான் மண்ச் (SJM) என்ற அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் ’மரபணு மாற்றுக் கடுகு என்பது அறிவியல் பூர்வமற்றது. விஷத்தன்மை வாய்ந்தது மற்றும் இது உற்பத்தியை எந்த வகையிலும் அதிகரிக்காது’ என்று கூறியுள்ளது.
மேலும், டெல்லி பல்கலைக் கழகத்தில் உள்ள தீபக் பெண்டால் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த மரபணு மாற்றுக் கடுகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதல்ல; இதன் ஜீனுக்கான காப்புரிமையை ’பேயர் கிராப் சயின்ஸ்’ என்ற சர்வதேச விதை நிறுவனம்தான் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியின் தாய் (தலைமை)அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான தொடர்புடையது. இது இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டது என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறுகிறது.;மின்னம்பலம்
 Scientist Vandana Shiva calls move 'fraud perpetrated on nation' Condemning the Genetic Engineering Approval Committee's (GEAC) decision to allow herbicide tolerant Bayer’s GM mustard, scientist and environmentalist Dr Vandana Shiva sent out the call across India to intensify resistance to genetically modified (GM) mustard and "the hijack of our food by the Monsanto and Bayer." The GEAC gave a nod to Bayer's Herbicide Tolerant(HT) GM mustard on Thursday, despite a case still being heard in the Supreme Court and a commitment to the court that no decision will be made till the court gives further directions. Indra Shekhar Singh speaks with Dr Vandana Shiva to know more about this decision.

கருத்துகள் இல்லை: