புதன், 21 ஜூன், 2017

திருநாவுகரசர் திமுகவுடன் கூட்டணியை உடைக்க ஓவர் டைம் ..

திமுக: திரு போட்ட உத்தரவு!தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிதாக 72 மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, முதல் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று ஜூன் 21 ஆம், தேதி கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர்களுக்கு இது முதல் கூட்டம் என்றாலும் குடியரசுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான கூட்டமாக இது அமைந்தது.
ஆனால் பொறுப்பேற்றதும் நடக்கும் முதல் கூட்டத்திலேயே பத்து மாவட்டத் தலைவர்கள் ஆப்சென்ட் ஆகிவிட்டார்கள்.திருநாவுக்கரசு நிச்சயம் ஏதாவது ஒரு அதிமுக அணியோடு சேருவார் .. அவருக்கு அதுதான் சரி .. அவரு அங்கெ போவது காங்கிரசுக்கும் நாட்டுக்கும் ரொம்பவே நல்லது
அவர்களில் ஏழுபேர் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் என்று தெரிந்து டென்ஷன் ஆகிவிட்டாராம் திருநாவுக்கரசர். மீதி மூன்று பேர் உடல் நிலை சரியில்லை என்று மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.
மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், ‘காமராஜர் ஆட்சி அமைப்பது மட்டுமே நமது முழு இலக்காக இருக்க வேண்டும். இனி அடுத்தவரை முதல்வர் ஆக்குவதற்காக காங்கிரசின் ஆற்றலை செலவு பண்ண வேண்டாம். முதலில் நமக்கு 63 சீட்டுகள் கொடுத்தார்கள். அடுத்து அதை ஐம்பதுக்குக் கீழே ஆக்கினார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன ஆகுமோ? அதனால் காங்கிரஸ்காரன் ஒவ்வொருவரும் இனி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். அதற்காக கட்சியை வளர்க்க வேண்டும்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.
இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. நம்மிடம் பேசிய சில மாவட்டத் தலைவர்கள்,
‘’தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது நல்ல நோக்கம்தான். ஆனால் அதற்கான அரசியல் செயல் திட்டம் எதுவும் இல்லாமல் காமராஜர் ஆட்சி என்று சொன்னால் எப்படி மக்கள் ஏற்பார்கள்? திருநாவுக்கரசர் பேச்சில் திமுக மீதான அதிருப்தி இருப்பது தெரிகிறது. அதனால்தான் கூட்டணி வேண்டாம் என்பது போன்ற தொனியில் பேசியிருக்கிறார்.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருகிறது. அதில் காங்கிரசுக்கு தமிழகத்தில் என்ன நிலை என்பதை எதார்த்தமாக உணரவேண்டும். கர்நாடாகாவில் காங்கிரஸ் இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறது. அங்கே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு சரி பாதியாகத்தான் இருக்கிறது. ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர்., தெலுங்கு தேசம் என்ற இரு எதிரிகளை சமாளிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் ஜெயித்தாலும் மத்தியில் பாஜக அல்லாத காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தரும்.
கருணாநிதியின் வியூகத்தின்படி செயல்பட்டு 2௦௦4 நாடாளுமன்றத் தேர்தலில் 4௦ க்கு 4௦ தொகுதிகளை கைப்பற்றினோம். இந்த வகையில் தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளைப் பெறுவதே அடுத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் திமுக வை குறை கூறிக் கொண்டிருந்தால்... வரும் நாடாளுமன்றத் தேர்தலை பாஜகவுக்குதான் சாதகமாக ஆக்கும். தலைவர் ஏன்தான் இப்படி பேசுகிறாரோ?”” என்றுஅங்கலாய்த்துக் கொண்டனர் சில மாவட்டத் தலைவர்கள்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: