புதன், 21 ஜூன், 2017

ரஜினிக்கு சுப.உதயகுமாரன் சவால் ? ஏற்றுகொண்டால் ரஜினிகட்சியில் சேர்கிறேன்!

சுப.உதயகுமாரன்  முன்வைத்துள்ள கோரிக்கைகள் இவைதான்...
* ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ரஜினிகாந்த் சரியாக அடையாளப்படுத்துவாரா?
* நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
* எங்கள் இடிந்தகரை பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடங்கள் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
* கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?
'எனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் நான் ரஜினிகாந்த் கட்சியில் இணையத் தயார்'' என்று பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான
சுப.உதயகுமாரன் அறிவித்து உள்ளார். அரசியலுக்கு ரஜினிகாந்த வருவாரா இல்லையா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. அப்படியே அவர் அரசியலுக்கு வந்தாலும் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவாரா என்பதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவரது ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ரஜினியின் அரசியல் கருத்துக்களையும் அவரது அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியையும் கடுமையாக விமர்சித்து வருபவர்,  பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன். இது தொடர்பாக அவர் மீது ரஜினி ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், திடீரென சுப.உதயகுமாரன் தனது கருத்தை மாற்றிக்கொண்டு ரஜினி அரசியலுக்கு வரும் நிலையில், அவரது கட்சியில் இணையத் தயார் என அறிவித்து இருக்கிறார். ஆனால், அதற்காக அவர் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றை ரஜினி நிறைவேற்றினால் மட்டுமே கட்சியில் இணைவேன் எனத் தெரிவித்துள்ளார்.
சுப.உதயகுமாரன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் இவைதான்...
* ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ரஜினிகாந்த் சரியாக அடையாளப்படுத்துவாரா?
* நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
* எங்கள் இடிந்தகரை பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடங்கள் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
* கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?
’இந்த நான்கு கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றினால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட இருக்கிறேன்’ என சுப.உதயகுமாரன் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. விகடன்

கருத்துகள் இல்லை: