வெள்ளி, 23 ஜூன், 2017

வெங்காய நாயுடு :விவசாய கடன் தள்ளுபடி ஒரு பேஷனாகி விட்டது ... சொல்லுவேடா சொல்லுவே ... இதுவாடா பாஷன்?

கார்போரேட்டு கம்பெனிக்கு ...கடன் கொடுத்து வராக்கடன் என்ற லிஸ்ட்டில் வைத்து அதை முறையாக தெளிவாக விரைவாக வசூலிக்காமல், மக்கள் மேல் அளவில்லா தினுசு தினுசான வரிகளை போட்டு அவாளுக்கு (கார்பொரேட்) மறைமுகமாக உதவி மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக எடுத்து சொல்லுங்கோ வெங்காயம் ...
மும்பை : ''கடன் தள்ளுபடி செய்வது தற்போது, 'பேஷன்' ஆகிவிட்டது. மிக மிக இக்கட்டான சூழலில் மட்டுமே இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னைக்கு கடன் தள்ளுபடி மட்டுமே தீர்வாகாது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற
வளர்ச்சித்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு பேசியதாவது: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. எனினும், கடன் தள்ளுபடியால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. தற்போதைய சூழலில், கடன் தள்ளுபடி அறிவிப்பு ஒரு பேஷன் ஆகிவிட்டது. மிக மிக இக்கட்டான சூழலில் மட்டுமே, கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
 கர்நாடகாவில், கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற கடன் தொகையில், தலா, 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக, காங்., கட்சியை சேர்ந்த, அந்த மாநில முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் அறிவித்தார்.

; காங்., முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கும் பஞ்சாப், பா.ஜ., முதல்வர் ஆதித்யநாத் யோகி தலைமையிலான ஆட்சி நடக்கும், உத்தர பிரதேசம், பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள், விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள dinamalar    
இந்த நாட்டில் தொழிலதிபர்களும் அவர்கள் மூலமாக அரசியல்வாதிகளும் கொழுத்து வாழவே நாம் எல்லோரும் உழைத்து கொண்டிருக்கிறோம்...நாம் வங்கி கணக்கு, ஆதார், பான் கார்டு, எல்லாம் எடுக்க வேண்டும் என்று சொல்வது அதற்காகத்தான்...
இந்த நாட்டில் தொழிலதிபர்களும் அவர்கள் மூலமாக அரசியல்வாதிகளும் கொழுத்து வாழவே நாம் எல்லோரும் உழைத்து கொண்டிருக்கிறோம்...நாம் வங்கி கணக்கு, ஆதார், பான் கார்டு, எல்லாம் எடுக்க வேண்டும் என்று சொல்வது அதற்காகத்தான்...

கருத்துகள் இல்லை: