திங்கள், 24 ஜூலை, 2017

இன்டர்நெட் பயன்பாட்டில் இந்தியை பின்தள்ளிய தமிழ்

Prakash JP :தமிழகத்தில் தமிழ் வளரவில்லை என்று தான் கூறியது உண்மைதான் - பிஜேபி இல.கணேசன் பேட்டி...//
திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்துவிட்டது, வளரவில்லை... என கூப்பாடு போடுபவர்கள் கவனத்துக்கு...
உலக அளவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில், ஹிந்தியை பின்னுக்கு தள்ளி, தமிழ் முதலிடத்தில் உள்ளது.. ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துவருவதால், தமிழின் பயன்பாடு இன்றைய இன்டர்நெட் காலத்தில் அதிகளவில் வளர்ந்துள்ளது..
இதற்கு முக்கிய காரணம், துவக்கத்தில் பல்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருந்ததால், இணைய பயன்பாடுகளில் சிக்கல் & குழப்பங்கள் தோன்றியது.. 2010 திமுக ஆட்சிகாலத்தில், முதல்வர் கலைஞர், "தமிழ் யூனிகோட்" எழுத்துருவை, பொதுவான எழுத்துருவாக அதிகாரப்பூர்வ அறிவித்ததால், இணையத்தில் தமிழின் பயன்பாடு சுலபமாகியது.. பரவலாகியது..
இன்றைய நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்ப்யூட்டர்களிலும், ஸ்மார்ட் போன்களிலும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களைக் 1996 ஆண்டிலிருந்து கற்றுக் கொடுக்கத் தொடங்கியது அப்போதைய திராவிட திமுக அரசு..
மேலும்,
ஆலய வழிப்பாட்டில் தமிழ் - சட்டத்தின் மூலம் செயல்படுத்தியது திமுகவின் திராவிட ஆட்சி...
இசை மேடைகளில் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு சார்பில் உதவிகள் பல செய்தது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் அமைத்தது திமுகவின் திராவிட ஆட்சி...
பல தமிழ் புலவர்கள், அறிஞர்களுக்கு நினைவு சின்னங்கள் அமைத்தது திமுகவின் திராவிட ஆட்சி...
பல தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்கி உதவியது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை துவக்கியது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழ் இணைய பல்கலைகழகம் துவக்கியது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழ் வழி படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு அளித்தது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்றியது திமுகவின் திராவிட ஆட்சி...
வணிகநிறுவனகளின் பெயர்பலகையில் தமிழ் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றியது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழ் மொழிக்காய் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தது திமுகவின் திராவிட ஆட்சி...
மொழிப்போர் தியாகிகளுக்கு அரசு வேலை, பென்ஷன் போன்றவற்றை அளித்தது திமுகவின் திராவிட ஆட்சி...
நீதிமன்றங்களில் தமிழையும் ஒரு வழக்காட்டு மொழிக்க வழிவகுத்தது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தது திமுகவின் திராவிட ஆட்சி...
திருக்குறள் வளர்சிக்கு பல உதவிகள்.. திருவள்ளுவர் புகழ் பாடும், வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை போன்றவற்றை அமைத்தது திமுகவின் திராவிட ஆட்சி...
உலக தமிழாராய்ச்சி நூல்நிலையம் அமைத்தது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழிசை பண்ணாராய்ச்சி மையம் அமைத்தது திமுகவின் திராவிட ஆட்சி...
தமிழ்வளர்ச்சித்துறை என்று தனி அமைச்சகம் கண்டது திமுகவின் திராவிட ஆட்சி...
இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்... தமிழுக்கும், அதின் வளர்ச்சிக்கு அதிகம் பாடுபட்டது கலைஞர் தலைமையில் நடைபெற்ற திமுகவின் திராவிட ஆட்சியே..

கருத்துகள் இல்லை: